தலைவாரும் போது உதிரும் முடியை பறக்க விட்டால் என்ன நடக்கும் தெரியுமா? தவறியும் இதை மட்டும் செய்து விடாதீர்கள்!

hair-fall-banana-tree

பெரும்பாலும் முடி உதிர்வது மிகப்பெரிய பிரச்சினையாக இன்றைய காலகட்டத்தில் இருந்து வருகிறது. இப்படி முடி உதிரும் பொழுது அந்த முடியை நிறைய பேர் காற்றில் பறக்க விட்டு விடுவார்கள். அல்லது குப்பையில் போட்டு விடுவார்கள். இப்படி முடியை காற்றில் பறக்க விட்டால் அது காற்றில் எங்கெங்கோ அலைந்து கொண்டிருப்பது போல் நம்முடைய வாழ்க்கையும் அலைச்சலுடன் செல்லும் என்பது நம்பிக்கையாக இருந்து வருகிறது. அப்படியானால் உதிரும் முடிகளை என்ன தான் செய்வது? என்பதை தான் இப்பதிவில் பார்க்க இருக்கிறோம்.

hair-fall

பலரும் உதிரும் தங்களுடைய முடிகளை சேகரித்து வைத்து அதை விற்று விடுகிறார்கள். நீங்கள் காற்றில் பறக்க விட்டு அலைய விடுவதை விட இது எவ்வளவோ மேல் எனக் கூறலாம். ஆனால் இந்த முடிகளை வைத்து அவர்கள் என்ன செய்வார்கள்? என்பது நமக்குத் தெரிவதில்லை. இது யோசிக்க கூடிய ஒரு விஷயம் தான் என்றாலும் அதில் பெரிதாக பயப்படும் படியான விஷயம் ஒன்றுமில்லை.

ஆனால் நீங்கள் காற்றில் அலைய விடுவது மிகவும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பார்கள். அவ்வகையான முடிகள் நெருப்பில் பட நேர்ந்தால் உங்களுக்கு வேகமாக முடி கொட்டுவதற்கு வாய்ப்புகள் உள்ளன. நம்முடைய உடலில் முடி, நகம் போன்றவை அழியாமல் இருக்கக் கூடியவை. உடல் அழிந்தாலும் இவைகள் அழிவதில்லை. பூமியிலேயே இருக்கும். அதனால் தான் இவற்றை வைத்து பில்லி, சூனியம், ஏவல் போன்ற செயல்களை செய்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

shedding-hair

சரி அப்படியானால் அதை என்ன செய்வது? உங்கள் வீட்டில் வாழை மரம் இருக்கிறதா? வாழை மரத்திற்கும் இதற்கும் என்ன சம்பந்தம் என்கிற சந்தேகம் இப்போது எல்லோருக்கும் இருக்கும். சம்பந்தம் உண்டு. உங்கள் வீட்டில் வாழை மரம் இருந்தால் அதில் துளிர்விட தயாராக இருக்கும் கிளையில் இது போல் உதிரும் முடியை சுருட்டி வைத்து விட்டால் போதும். முடி வேகமாக வளரத் துவங்கும்.

- Advertisement -

முடி உதிர்தல் பிரச்சனைக்கு ஆன்மீக ரீதியாக இப்படி ஒரு தீர்வும் இருக்கிறது என்பது வியப்பிற்குரிய விஷயம் தான். நிர்மால்யம் எனப்படும் நாம் சுவாமி படங்களுக்கு போட்டிருக்கும் காய்ந்த பூக்களை எப்படி மரங்களில் போடுவது வழக்கமோ அதே போல் தான் இந்த முடியை குப்பையில் போடாமல் வாழை மரத்தில் சுருட்டி வைத்தால் நல்லது என சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது.

vazhai-maram

இப்படி செய்வதால் எவ்வளவுக்கு எவ்வளவு முடி உதிர்கிறதோ அவ்வளவுக்கு அவ்வளவு வளர்ந்து விடுமாம். இதை செய்து பார்த்தால் நீங்களே கண்கூடாக உணர முடியும். இவ்வகையான விஷயங்கள் மூடநம்பிக்கையாக தெரிந்தாலும் உண்மையில் அனுபவ பூர்வமாக பலரும் சொல்கின்ற விஷயங்கள் தான் என்பதையும் எடுத்துக் கொள்ள வேண்டிய ஒன்றாக இருக்கிறது.

shedding-hair1

ஒரு சிலர் குப்பையில் போட்டுவிட்டு அதை எரிக்கவும் செய்வார்கள். இவை தரித்திரத்தை ஏற்படுத்தும். குப்பையுடன் நீங்கள் சேர்த்து போட்டிருக்கும் முடியும் எரிந்தால் வீட்டில் கஷ்டம் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு. அது போல் வீட்டிற்குள்ளும் தலைமுடியை வாருபவர்கள் கையோடு அதை எடுத்து விட வேண்டும். வீட்டிற்குள்ளேயே தலைமுடி அலைந்து கொண்டிருந்தால் தரித்திரம் ஏற்படும். ஒரு சில வீடுகளை பார்த்தால் மூலையில் காற்றுக்காக முடி சுற்றிக் கொண்டே இருக்கும். இது போல் மூலையில் சுற்றிக் கொண்டே இருக்கக் கூடாது. இது பண தடையை ஏற்படுத்தும். செய்யும் தொழிலில் மந்த நிலையை உருவாக்கும்.

இதையும் படிக்கலாமே
வீட்டில் துளசி செடி வைத்திருப்பவர்கள் இந்த தவறுகளை மட்டும் செய்து விடாதீர்கள்! வருமானம் தடைபடும்.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.