இடது கையில் கருப்பு பட்டை அணிந்து களமிறங்கிய இந்திய மற்றும் ஆஸி வீரர்கள் -காரணம் இதுதான்

band

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு எதிரான நான்காவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி இன்று (02-01-2019) சிட்னி நகரில் துவங்கியது. இரு அணிகளும் தேசிய கீதம் ஒலிக்கும் சமயத்தில் கருப்பு பட்டையினை அணிந்து கலந்து கொண்டனர். இதன் காரணத்தினை இந்திய அணி நிர்வாகம் சமூக வலைத்தளம் மூலம் தெரிவித்துள்ளது.

band 1

பொதுவாக நாட்டில் இயற்கை பேரழிவு அல்லது முக்கியமான தலைவர் இறந்தால் இது போன்ற கருப்பு பட்டையினை அணிந்து போட்டிகளில் பங்கேற்பது வழக்கம். இந்நிலையில் நேற்று சச்சினின் இளம்வயது பயிற்சியாளராக அச்ரேக்கர் இயற்கை எய்தினார். அவர் சச்சின் மட்டுமின்றி இந்திய வீரர்கள் பலருக்கு தனிப்பட்ட முறையில் பயிற்சி அளித்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணிக்கு அவர் ஆற்றிய பணி நிறையவே இருக்கிறது.

அதன் காரணமாக அவரது மறைவினை அனுசரிக்கும் விதமாக இந்திய அணி கருப்பு பட்டை அணிந்து போட்டியில் பங்கேற்றதாக இந்திய அணி சார்பில் அறிக்கை வெளியிட்டது. ஆனால், ஆஸ்திரேலிய அணியும் அவரை சிறப்பிக்கும் விதமாக கருப்பு பட்டை அணிந்து ஆடியது அனைவரையும் நெகிழச் செய்தது. இந்த செயல் ஆஸ்திரேலிய வீரர்கள் கிரிக்கெட் மீது வைத்துள்ள மரியாதையினை குறிக்கும் விதமாக அமைந்தது.

மும்பையில் இறந்த அச்ரேக்கர் இறங்களுக்கு அவரது சிஷ்யனான சச்சின் விரைந்து சென்று கண்ணீர் மல்க அவரது இறுதிச்சடங்கில் கலந்து கொண்டார். கிரிக்கெட் உலகின் மிகச்சிறந்த வீரராக கருதப்படும் சச்சின் வளர்ச்சியின் ஆரம்பமே அச்ரேக்கர் போட்ட விதைதான் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்கலாமே :

இந்த சதம் புஜாராவுக்கு திருப்தி இல்லை. இரட்டைசதத்தை அடிப்பார் – ஆஸ்திரேலிய வீரர்

மேலும் கிரிக்கெட் செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்