இந்த சதம் புஜாராவுக்கு திருப்தி இல்லை. இரட்டைசதத்தை அடிப்பார் – ஆஸ்திரேலிய வீரர்

pujara

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான நான்காவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி இன்று (03-01-2019) அதிகாலை 5 மணிக்கு சிட்னி நகரில் துவங்கியது. இந்திய மணிக்கு டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரர்களாக மாயங்க் அகர்வால் மற்றும் ராகுல் ஆகியோர் களமிறங்கினர்.

pujara-1

ராகுல் ஆட்டமிழந்து வெளியேறியதும் இந்த தொடரின் நாயகன் புஜாரா களம் புகுந்தார். ஆரம்பத்தில் வழக்கம் போலே நிதானமாக ஆட துவங்கினார். அரைசதத்தினை கடந்ததும் சிறிது ஸ்ட்ரைக் ரேட்டை உயர்த்தி ஆட துவங்கினார். சீரான இடைவெளியில் அகர்வால், கோலி மற்றும் ரஹானே அவுட் ஆகி வெளியேற இவர் மட்டும் ஒருபுறம் நிலைத்து நின்று சதமடித்தார்.

இதுகுறித்து முன்னாள் ஆஸ்திரேலிய வீரரான மைக்கல் கிளார்க் தனது ட்விட்டர் பக்கத்தில் இட்ட பதிவு : என்ன ஒரு அருமையான சதம் எனது வாழ்த்துக்கள். மேலும் இந்த சதத்தால் அவர் திருப்தி அடையவில்லை என்று நினைக்கிறேன். 200ரன்களை அவர் எதிர்பார்க்கிறார் என்று பதிவிட்டுள்ளார் கிளார்க்.

Advertisement

இன்றைய முதலாம் நாள் ஆட்ட நேர முடிவில் புஜாரா 250 பந்துகளை சந்தித்து 130 ரன்களை குவித்துள்ளார். இதில் 16 பவுண்டரிகள் அடங்கும். கடந்த போட்டியில் பொறுமையாக ஆடியவர் என்று விமர்சிக்கப்பட்ட புஜாரா தற்போது 52.00 ஸ்ட்ரைக் ரேட் வைத்துள்ளார். அவருடன் விஹாரி 39 ரன்களுடன் களத்தில் உள்ளார். இந்திய அணி மொத்தமாக 4 விக்கெட்டுகளை இழந்து 303 ரன்களை குவித்து வலுவான நிலையில் உள்ளது.

இதையும் படிக்கலாமே :

அவுட் ஆன பின் பெவிலியனுக்கு செல்லாமல் நேராக வலைப்பயிற்சிக்கு சென்ற இந்திய வீரர்- வீடியோ

மேலும் கிரிக்கெட் செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்