IND vs AUS T20I : போட்டிநடைபெற இருக்கும் பெங்களூரு மைதானத்தின் தன்மை என்ன என்று தெரியுமா ?

Pitch
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 2 டி20 போட்டியால் கொண்ட தொடர் கடந்த ஞாயிற்றுக்கிழமை துவங்கியது. அன்று நடந்து முதலாவது டி20 போட்டியில் இந்திய அணியை 3 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இந்திய அணி அந்த போட்டியில் குறைந்த ரன்கள் அடித்ததே அந்த போட்டியின் தோல்விக்கு முக்கிய காரமணமாக பார்க்கப்படுகிறது.

Toss

இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று பெங்களூரு மைதானத்தில் மாலை 6.30 துவங்க உள்ளது. இந்த போட்டியில் வென்றால் மட்டுமே இந்திய அணி தொடரை சமன் செய்ய முடியும். இந்திய மண்ணில் இதுவரை இந்திய அணி தொடரை இதுவரை இழந்தது கிடையாது. தற்போது போட்டி நடைபெற உள்ள பெங்களூரு மைதானத்தினை பற்றிய சுவாரசிய தகவல்கள் இந்த பதிவில் உள்ளன.

- Advertisement -

பெங்களூரு மைதானம் எப்போதுமே பேட்ஸ்மேன்களின் ஆதிக்கம் நிறைந்த ஒரு மைதாம் ஆகும். இங்குள்ள பவுண்டரி எல்லைகள் 70 மீட்டர் என்ற சிறிய அளவில் இருப்பதால் அதிக சிக்ஸர்கள் எளிதாக அடிக்க முடியும். அதனகாரணமாகவே பெங்களூரு மைதானத்தில் முதலில் பேட்டிங் சியும் அணி குறைந்தபட்ச ஸ்கோர் 170 முதல் 180 ரன்கள் வரை உள்ளது. எனவே, இந்த மைதானத்தில் எந்த அணி டாஸ் வெற்றி பெற்றாலும் பேட்டிங் செய்யவே தீர்மானிக்கும். பவுன்ஸ் மற்றும் வேகம் ஆகியவை அதிக தாக்கத்தை ஏற்படுத்தாது. எனவே, பேட்ஸ்மேன்கள் எங்கு வேனாலும் அடிக்கும் அளவிற்கு இந்த மைதானம் பேட்டிங்க்கு சாதகமாக இருக்கும்.

Maxwell

பேஸ்ட்மேன்களின் சொர்க்கமாக திகழும் இந்த மைதானத்தில் கோலி பலவருடங்களாக பெங்களூரு ஐ.பி.எல் அணியை வழிநடத்தி விளையாடியுள்ளதால் அவரால் இந்த மைதானத்தில் எளிதாக ரன் குவிக்க முடியும். மேலும், மைதானம் எப்போது மந்தமாகும் என்று கணிக்க முடியாது என்று மைதான பாராமரிப்பாளர் தெரிவித்துள்ளார். ஆனால், நிச்சயம் இந்த போட்டி ஒரு ஹை ஸ்கோரிங் போட்டியாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

- Advertisement -

இதையும் படிக்கலாமே :

Krunal Pandya T20 : இரண்டாவது போட்டியில் நிச்சயம் இதுவே நடக்கும் அடித்துச்சொல்கிறேன் – தடாலடி

மேலும் கிரிக்கெட் செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்

- Advertisement -