அரையிறுதியில் இந்திய அணியை வீழ்த்த நீங்கள் இந்த 2 விடயத்தை செய்தே ஆகவேண்டும் – நியூசி முன்னாள் கேப்டன்

Ind-vs-Nz
- Advertisement -

உலகக் கோப்பையின் லீக் சுற்று போட்டிகள் முடிவடைந்த நிலையில் இந்திய அணி 9 போட்டிகளில் பங்கேற்று 15 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது. இதனால் இந்திய அணி நியூசிலாந்து அணியுடன் நாளை அரையிறுதிப் போட்டியில் மோத உள்ளது.

vettori

இந்நிலையில் நியூசிலாந்து அணியின் முன்னாள் கேப்டனான டேனியல் வெட்டோரி அந்த அணிக்கு அரையிறுதிப் போட்டியில் இந்திய அணியிடம் வெற்றி பெற சில வழிமுறைகள் குறித்து பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது : இந்திய அணி தற்போது மிக வலுவான அணியாகவும், கோப்பையை கைப்பற்ற கூடிய ஒரு அணியாகவும் திகழ்கிறது.

- Advertisement -

ஏனெனில் இந்திய அணி டாப் ஆர்டர் மிக வலிமையானது முதலில் பொறுமையாக விளையாடி பிறகு அதிரடியாக விளையாடி அவர்கள் வெற்றி பெறும் உத்தியைக் கையாண்டு வருகிறார்கள். எனவே பேட்ஸ்மென்களை விரைவாக வீழ்த்த வேண்டும். அதேபோன்று பந்துவீச்சில் இந்திய அணி சிறப்பாக செயல்படுவதால் முதலில் டாஸ் வென்று பேட்டிங் செய்ய வேண்டும்.

india

ஆக டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்வது மற்றும் இந்தியாவின் டாப்ஆர்டர் பேட்ஸ்மேன்களை சேசிங்கின் போது விரைவில் வீழ்த்துவது என இந்த இரண்டை செய்தால் நியூசிலாந்து அணி வெற்றி பெறும். அது தவிர வேறு வழி கிடையாது வெட்டோரி கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -