உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் விளையாடக்கூடாது – பி.சி.சி.ஐ-யிடம் வேண்டுகோள்

Ind-Pak

கடந்த இரண்டு நாட்களுக்கு முன் தற்கொலைப்படை தீவிரவாதிகள் மூலம் பயங்கரமான கோர சம்பவம் புல்வாமா மாவட்டத்தில் ஏற்பட்டது. இந்த தற்கொலை படை தாக்குதலில் இந்திய ராணுவத்தின் வீரர்கள் 44 பேர் உடல்சிதறி தங்களது இன்னுயிரை தாரைவார்த்தனர்.

pulwama

நாடு முழுவதும் இந்த தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் கொந்தளித்து வருகின்றனர். இந்நிலையில் சி.சி.ஐ நிர்வாகம் (கிரிக்கெட் கிளப் ஆப் இந்தியா ) பி.சி.சி.ஐ-க்கு இந்த பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து ஒரு வேண்டுகோளை முன்வைத்துள்ளது.

அதன்படி, இந்திய கிரிக்கெட் அணி இந்த வருடம் நடக்கவுள்ள உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக போட்டிகளில் ஆடக்கூடாது. மேலும், இவ்விரு அணிகளுக்கு இடையேயான போட்டிகளை தவிர்க்க வேண்டும் என்றும் சி.சி.ஐ சார்பாக வேண்டுகோளை வைத்துள்ளது.

bcci

இதற்கு பி.சி.சி.ஐ என முடிவு எடுக்க போகிறது என்று விரைவில் தெரியவரும். இருப்பினும், ஐ.சி.சி வெளியிட்டுள்ள பட்டியலில் எந்த மாற்றமும் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. திட்டமிட்டபடி இந்தியா பாகிஸ்தான் போட்டி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்கலாமே :

20 வருடங்கள் விளையாடி விட்டேன் போதும். ஓய்வு பெறப்போகும் நாளை அறிவித்த மே. இ அதிரடி வீரர் கெயில் – ரசிகர்கள் அதிர்ச்சி

மேலும் கிரிக்கெட் செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்