20 வருடங்கள் விளையாடி விட்டேன் போதும். ஓய்வு பெறப்போகும் நாளை அறிவித்த மே. இ அதிரடி வீரர் கெயில் – ரசிகர்கள் அதிர்ச்சி

Gayle

மேற்கு இந்திய தீவுகள் அணியின் முன்னணி அதிரடி ஆட்டக்காரரான கிரிஸ் கெயில் 1999 ஆம் ஆண்டு இந்திய அணிக்காக ஒருநாள் போட்டியில் அறிமுகம் ஆனார். கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வருகிறார். இந்நிலையில் தற்போது அவர் ஓய்வு பெறப்போகும் தேதியை அறிவித்துள்ளார்.

மேற்கு இந்தியி தீவுகள் அணிக்காக 103 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 7214 ரன்களை அடித்துள்ளார். அதிகபட்சமாக 333 ரன்களை அடித்துள்ளார் . 284 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 9727 ரன்களை அடித்துள்ளார். அதிகபட்சமாக 215 ரன்களை அடித்துள்ளார்.

கெயில் டி20 போட்டிகளில் சதம், ஒருநாள் போட்டிகளில் இரட்டைசதம் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் முச்சதம் என இந்தியவீரர் சேவாக் உடன் இந்த சாதனையை பகிர்ந்துள்ளார். இவரின் அதிரடி ஆட்டம் இந்தியாவில் நடக்கும் ஐ.பி.எல் போட்டிகளில் நாம் அனைவரும் பார்த்திருப்போம். தனது அதிரடி ஆட்டம் மூலம் உலகம் முழுவதும் பல ரசிகர்களை தன்வசம் வைத்துள்ளார்.

Chris 1

தற்போது 39 வயதாகும் கெய்ல் இந்த வருடம் நடக்கும் உலகக்கோப்பை போட்டிக்கு பிறகு உடனே ஓய்வினை அறிவிக்க போவதாக அறிவித்துள்ளார். இதனால் அவரின் ரசிகர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

இதையும் படிக்கலாமே :

2012ஆம் ஆண்டு இவரை சந்தித்த பின்பு தான் நான் ஒரு பினிஷர் என்பதை உணர்ந்தேன். ஆஸ்திரேலிய தொடரில் அவர் சொன்னதை நிச்சயம் செய்வேன் – இந்திய அணியின் ஆல்ரவுண்டர்

மேலும் கிரிக்கெட் செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்