புல்வாமா ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்திய வீரர்கள் மற்றும் ஒட்டுமொத்த ரசிகர்கள் – நெகிழவைக்கும் 2 நிமிட வீடியோ

Team

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதலாவது டி20 போட்டி நேற்று (24-02-2019) விசாகப்பட்டினத்தில் நடந்து முடிந்தது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பீல்டிங் செய்ய தேர்வு செய்தது.

Toss

இதனை அடுத்து இரு அணி வீரர்களும் களத்தில் இருந்து 2 நிமிடம் மவுன அஞ்சலி செய்தனர். அதன் காரணம் கடந்த சில நாட்களுக்கு முன் புல்வாமா தாக்குதலில் 40க்கும் மேற்பட்ட இந்திய வீரர்கள் பலியாகினர். இதனால் நாடு முழுவதும் மக்கள் சோகத்தில் உள்ளனர் .

இதனை அனுசரிக்கும் விதமாக இரு அணி வீரர்களும் மைதானத்தில் 2 நிமிடம் உயிரிழந்த வீரர்களுக்காக மவுன அஞ்சலி செய்தனர். இதனை கண்ட ரசிகர்கள் அனைவரும் எழுந்து நின்று நம் நாட்டு வீரர்களுக்காக தங்களது அஞ்சலியை செலுத்தினர். இந்த நிகழ்வு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ உங்களுக்காக அந்த வீடியோ இணைப்பு :

இந்த செயல் நம் அனைவர்க்கும் நாட்டின் மீது உள்ள பற்றினை காட்டுகிறது. இரு அணிவீரர்களின் இந்த செயல் மட்டுமில்லாது இந்திய அணி வீரர்கள் அனைவரும் கையில் கருப்பு பட்டை அணிந்து கொண்டே இந்த போட்டியில் தொடர்ந்து விளையாடினர்.

இதையும் படிக்கலாமே :

முதல் பந்திலே தவறான எல்.பி மூலம் வெளியேறிய ஆஸி கேப்டன். விஜய் ஜெர்ஸியுடன் ஆடிய பும்ரா – வைரல் வீடியோ

மேலும் கிரிக்கெட் செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்