- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalஇன்று மைத்ரேய முகூர்த்த நேரம்

இன்று மைத்ரேய முகூர்த்த நேரம்

- Advertisement -

பொதுவாகவே வியாழக்கிழமை மாலை 5 மணிக்கு மேலாக, குபேர நேரம் என்று சொல்லுவார்கள். இந்த நேரத்தில் நிறைய பேர் வீட்டில் குபேர விளக்கு ஏற்றி வழிபாடு செய்யக்கூடிய வழக்கமும் இருக்கிறது. இன்று வியாழக்கிழமையோடு சேர்த்து மைத்ரேய முகூர்த்தமும் வந்திருக்கிறது. கடனை திருப்பி அடைப்பதற்கு உகந்த நேரம்.

இந்த மைத்ரேய முகூர்த்த நேரத்தில் நீங்கள் வாங்கிய கடனிலிருந்து ஒரு சின்ன தொகையை திருப்பிக் கொடுத்தாலும், பெரிய கடன் சீக்கிரம் அடையும் என்பது நம்முடைய நம்பிக்கையாக இருந்து வருகிறது. அந்த வகையில் இந்த வியாழக்கிழமை மைத்ரேய முகூர்த்தம் எந்த நேரத்தில் வருகிறது. குறிப்பாக அந்த நேரத்தினுடைய மையப்பகுதி என்ன ஆன்மீகம் சார்ந்த விரிவான தகவலை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோமா.

- Advertisement -

வியாழக்கிழமை மைத்ரேய முகூர்த்த நேரம்

20.6.2024 வியாழக்கிழமை மாலை 3:58 முதல் 06:09 மணி வரை மைத்ரேய முகூர்த்த நேரம் இருக்கிறது. இதனுடைய மையப்பகுதி இன்று மாலை 4:41 மணி முதல் 5:24 மணி வரை இருக்கிறது. மையப் பகுதி என்று சொல்லப்படும் இடைப்பட்ட இந்த நேரத்தில் கடனை திருப்பித் தருவது சிறப்பான பலனை கொடுக்கும். உதாரணத்திற்கு உங்களுக்கு, 2,00,00 லட்சம் கடன் இருக்கு. யார்கிட்ட இந்த கடனை வாங்கி இருக்கிறீர்களோ, அந்த நபர் கையில் வெறும் 200 ரூபாய் கடனை, இந்த நேரத்தில் திருப்பி கொடுத்தால், 2 லட்ச ரூபாய் கடனை சீக்கிரமாக அடைக்கக்கூடிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும்.

ஆனால் 2 லட்சம் ரூபாய் கடனுக்கு, வெறும் 200 ரூபாயை திருப்பிக் கொடுத்தால் யாரும் வாங்க மாட்டாங்க. ஒரு வெள்ளை கவர் எழுதி எடுத்துக்கோங்க. அதன் மேலே யாரிடம் கடன் வாங்கி இருக்கிறீர்களோ, அந்த நபரின் பெயரை எழுதி விடுங்கள். 2 லட்சம் கடன் சீக்கிரம் அடைய வேண்டும் என்று எழுதிவிட்டு, அந்த கவருக்குள் 200 ரூபாயை போட்டு வையுங்கள்.

- Advertisement -

அந்த நபரிடம் கடனை திருப்பிக் கொடுத்ததாக அர்த்தம். அவ்வளவுதான் இந்த கவரை பத்திரப்படுத்தி வைத்துக் கொள்ளுங்கள். இதேபோல மைத்ரேய முகூர்த்த நேரம் வரும்போது எல்லாம் வருகிறதோ, அப்போது அந்த கவரில் 100 ரூபாய், 200 ரூபாய், 500 ரூபாய் உங்களால் முடிந்த தொகையை போட்டு வரவும். சீக்கிரம் இரண்டு லட்ச ரூபாய் சேரும்.

அதோடு சேர்த்து இந்த பணத்தையும் போட்டு கடன்காரர்களுக்கு திருப்பிக் கொடுத்து விடலாம். சரி இந்த குறிப்பிட்ட இந்த நேரத்தில் நாங்கள் அலுவலகத்தில் இருப்போம். என்ன செய்வது. ஒரு வெள்ளை கவரில் எல்லாம் விவரத்தையும் எழுதி பேக்குக்குள் வைத்துக் கொள்ளுங்கள். குறிப்பிட்ட இந்த சமயத்தில் ரூபாயை மட்டும் எடுத்து அந்த கவருக்குள் போட்டுக் கொள்ளுங்கள். அவ்வளவுதான். வேலை முடிந்தது.

- Advertisement -

இதை நம்பிக்கையோடு செய்தால் எவ்வளவு பெரிய கடனில் இருந்தும் வெளியில் சீக்கிரம் வரக்கூடிய பாக்கியத்தை கடவுள் உங்களுக்கு கொடுப்பான். அதிலும் இன்று குபேர நேரத்தில் வந்திருக்கும் மைத்திரேய முகூர்த்தம். உங்களுடைய கஷ்டத்தை தீர்த்து வைக்க அந்த குபேரனை இறங்கி வருவார். குபேரனை மனப்பூர்வமாக நினைத்து இந்த பரிகாரத்தை செய்யுங்கள்.

இதையும் படிக்கலாமே: கடன் தீர வெள்ளிக்கிழமை பௌர்ணமி பரிகாரம்

வாய்ப்பு உள்ளவர்கள் மாலை பூஜையறையில் விளக்கு ஏற்றி வைத்துவிட்டு, அந்த கவருக்குள் பணத்தை வையுங்கள். மேலும் மேலும் இரட்டிப்பு பலனை பெற முடியும் என்ற தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

சற்று முன்