நாகம் பாதுகாத்துவரும் புதையல்கள் மற்றும் அதில் அடங்கியுள்ள அதிசயம் பற்றி உங்களுக்கு தெரியாத தகவல்கள்

sarpam-nagam

நாகம் பாதுகாத்து வரும் புதையலை பற்றியும் அதில் அடங்கியுள்ள அதிசயத்தை பற்றியும் மற்றும் அதன் விலைமதிப்பில்லாத பொருட்களைப் பற்றியும் இப்பதிவில் காணலாம்.

Snake with lingam

அக்காலகட்டத்தில் வாழ்ந்த அனைத்து மன்னர்களும் கட்டிட கலையில் சிறந்து விளங்கினர். அதோடு கடவுள் நம்பிக்கையை வெளிப்படுத்தும் வகையில் பல்வேறு ஆலயங்களை கட்டி வழிபட்டார்கள். அப்படி வழிபடும் பொழுது சுவாமிக்கு பல்வேறு விலைமதிப்பில்லாத ஆபரணங்களைக் கொண்டு அலங்கரித்து தனது பக்தியை வெளிப்படுத்தினர்.

அக்காலகட்டத்தில் விலைமதிப்பில்லாத பல பொருட்கள் கோவில்களில் வைத்திருப்பார்கள். அதனை யாரும் தீண்டாத வகையில் நாகத்தைக் கொண்டு பாதுகாப்புடன் வைத்திருப்பார்கள். பழங்காலத்தில் கட்டப்பட்ட பல்வேறு கோவில்களில் இன்றளவும் புதையல் இருப்பதாகவும், அதை யாரும் எடுக்காத வகையில் நாகம் பாதுகாப்பதாகவும் பல்வேறு நம்பிக்கைகள் நிலவி வருகிறது.

புதையல் என்றால் அது வெறும் பொற்காசுகள் மட்டும் அல்ல, தெய்வ விக்கிரகங்களும் புதையல் தான். அந்த வகையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் சாலை அமைப்பதற்காக ஒரு மலையை குடைந்த போது திடீரென்று எங்கிருந்தோ வந்த நாகம் ஒன்று ஓர் இடத்தில் படம் எடுத்து அடியவாறு ஜேசிபி இயந்திரத்தை அந்த இடத்தை தோண்டவிடாமல் தடுத்தது. உடனே அங்கிருந்த அதிகாரிகள் சிலர் ஜேசிபி இயந்திரத்தை நிறுத்துமாறு கூறிவிட்டு பாம்பு தடுக்கும் அந்த இடத்தை மட்டும் கைக்களால் தோண்ட உத்தரவிட்டனர். சிறிது தோண்டியவுடன் அங்கிருந்து ஒரு சிலை வெளிப்பட துவங்கியது. உடனே அந்த சிலையை பாம்பு பாதுகாப்பது போல சுற்றி வளைத்தது. அதை கண்டு அங்கிருந்தவர்கள் அனைவரும் பூரிப்படைந்தனர்.

snake door

அடுத்ததாக, பத்மநாபசுவாமி கோவிலில் உள்ள நாக ரகசியத்தை பார்ப்போம். அந்த கோவிலில் உள்ள 6 ரகசிய அறைகளில் இதுவரை 5 மட்டுமே திறக்கப்பட்டுள்ளது. மற்ற அறைகளை போல் அல்லாமல் திறக்கப்படாத அந்த ஒரு அரை மட்டும் பகவான் விஷ்ணுவின் கட்டுப்பாட்டில் இருப்பதாக நம்பப்படுகிறது. இதுவரை திறக்கப்பட்டுள்ள அறைகளில் இருந்து 500 கிலோ நகைகள் , 18 அடி உயரம் உடைய ஒரு பெரிய பை முழுவதும் தங்க நாணயங்கள் என பல லட்சம் கோடி மதிப்பிலான பொக்கிஷங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ள நிலையில் அதை விட கிட்டதட்ட ஐந்து மடங்கு அதிக பொக்கிஷம் இருக்கும் என்று நம்பக்கூடிய அந்த ஆறாவது அறை ஏன் இன்னும் திறக்கப்படவில்லை? அதில் அப்படி என்ன தான் மர்மம் ஒளிந்திருக்கிறது என்றல்? இந்த அறையை திறந்தால் நிச்சயம் பேரழிவு ஏற்படும் என்று பத்மநாபசுவாமியின் பக்தர்கள் உறுதியாக நம்புகிறார்கள். அந்த அறை 16 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த மார்த்தாண்ட வர்மன் என்னும் அரசனால் உருகாவப்பட்டது என்றும் அதை சாதாரண மனிதர்களால் திறக்க முடியாது என்றும். நாக பந்தத்தை பற்றி நன்கு அறிந்த ஒருவர் கருட மந்திரத்தை ஜபித்தால் மட்டுமே அந்த அறை திறக்கப்படும் எனவும். அதை தவிர அந்த அறையை திறக்க வேறு வழியே இல்லை என்றும் கூறுகின்றனர். அதையும் தாண்டி சாதாரண மனிதர்கள் யாரேனும் நவீன இயந்திரம் கொண்டு அதை திறக்க முயன்றால் பேரழிவு நிச்சியம் என்று நம்பப்படுகிறது. சில காலங்களுக்கு முன் மந்திரங்கள் தெரிந்த ஒருவர் அதை திறக்க முயன்றதாகவும் ஆனால் அவரால் அதை திறக்க முடியவில்லை என்றும் கூறுகின்றனர். கதவுகளை நாகம் காவல் காப்பதால் மந்திரத்தை சரியாக ஜபித்தால் மட்டுமே கதவு திறக்கப்படுமாம்.

இதையும் படிக்கலாமே:
ஜவ்வாதில் இத்தனை அதிசயங்கள் உள்ளதா

English Overview:
Here we have Information on snake treasures in Tamil. We have details of Information on snake treasures too.