இனிக்க இனிக்க சுவையான அப்பம் பாரம்பரிய முறையில் முறையாக இப்படித்தான் செய்யணுமா? இந்த அளவு தெரிஞ்சா யார் வேண்டுமானாலும் அப்பம் சுடலாமே?

appam-ravai
- Advertisement -

அப்பம் செய்வது இவ்வளவு ஈஸியா? அப்படின்னு யோசிக்கிற அளவுக்கு ரொம்பவே ஈஸி தாங்க! பாரம்பரியமான முறையில் நம் பாட்டிமார்கள் செய்து கொடுக்கும் இந்த இனிப்பு அப்பம் முறையாக இப்படித் தான் செய்ய வேண்டும். இந்த அளவுகள் சரியாக சேர்த்து தோசை மாவு பதத்திற்கு மாவை கரைத்து, எண்ணெயில் இட்டால் டேஸ்டியான கிராமத்து ஸ்டைல் அப்பம் நாம் கூட சுலபமாக செய்து விடலாம்! இனிப்பு அப்பம் ருசியாக செய்வது எப்படி? என்பதை தான் இனி கற்றுக் கொள்ள இருக்கிறோம்.

இனிப்பு அப்பம் செய்ய தேவையான பொருட்கள்:
ரவை – அரை கப், கோதுமை மாவு – அரை கப், மைதா மாவு – கால் கப், உப்பு – அரை ஸ்பூன், ஏலக்காய்த்தூள் – அரை ஸ்பூன், பொடித்த துருவிய வெல்லம் – அரை கப்.

- Advertisement -

இனிப்பு அப்பம் செய்முறை விளக்கம்:
முதலில் இனிப்பு அப்பம் செய்வதற்கு ஒரு பவுலை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் தேவையான பொருட்களை சேர்த்து அப்பம் செய்ய மாவு தயாரிக்க வேண்டும். முதலில் அரை கப் அளவிற்கு ரவையை எடுத்துக் கொள்ளுங்கள். வறுத்த ரவை, வறுத்த ரவை எதுவாக இருந்தாலும் பரவாயில்லை. பின்பு அதனுடன் அரை கப் அளவிற்கு கோதுமை மாவு எடுத்துக் கொள்ளுங்கள். அதே போல அரை கப் அளவிற்கு மைதா மாவு சேர்க்க வேண்டும்.

மைதா மாவு சேர்க்க விரும்பாதவர்கள் ஒரு கப் அளவிற்கு கோதுமை மாவே எடுத்துக் கொண்டால் சரியாக இருக்கும். வாசனைக்கு அரை டீஸ்பூன் ஏலக்காயை நன்கு நைஸாக பொடித்து சேர்த்துக் கொள்ளுங்கள். ஏலக்காய் தூள் தான் பயன்படுத்த வேண்டும். பின்பு கால் ஸ்பூன் அளவிற்கு தூள் உப்பு சேர்த்துக் கொள்ளுங்கள். எந்த ஒரு இனிப்பு வகைக்கும் கொஞ்சமாக உப்பு சேர்த்தால் அதன் இனிப்பு சுவையை தூக்கி காட்டி கொடுக்கும்.

- Advertisement -

பாரம்பரிய இனிப்பு வகைகள் அத்தனையிலும் இது போல கொஞ்சம் உப்பு சேர்ப்பது வழக்கம். பின்னர் வெல்லத்தை பொடித்து கட்டிகளாக சேர்க்காமல் நன்கு பெரிய கண் உள்ள தேங்காய் துருவலில் துருவி எடுத்துக் கொள்ளுங்கள். அப்பொழுது தான் நாம் கலப்பதற்கு வசதியாக இருக்கும். பின்பு கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி தோசை மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ள வேண்டும். தண்ணீரை சேர்க்கும் பொழுது எச்சரிக்கையாக சேர்க்க வேண்டும். அதிகம் தண்ணீர் சேர்த்து விட்டால் எண்ணெய் அதிகம் உறிஞ்சி விடும், எனவே பார்த்து சேருங்கள். பின்னர் அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு வாணலியை வையுங்கள். அதில் ஆப்பம் சுடுவதற்கு தேவையான அளவிற்கு எண்ணெய் ஊற்றி நன்கு காய விடுங்கள்.

பின்னர் எண்ணெய் நன்கு காய்ந்ததும் ஒவ்வொரு கரண்டி மாவை எடுத்து எண்ணெயில் விடுங்கள். ஒரு 2 நிமிடம் அப்படியே விட்டு விடுங்கள், இல்லையேல் மாவு தனி தனியாக பிரிந்துவிடும். கொஞ்சம் வெந்து வரும் பொழுது மேலே மிதக்க ஆரம்பிக்கும். அதன் பிறகு வடை சுடும் கரண்டியை வைத்து திருப்பி போடுங்கள். இரண்டு புறமும் சிவக்க உப்பி வந்து இனிக்க இனிக்க அப்பம் வெந்து வந்ததும் ஒரு டிஷ்யூ பேப்பரில் வைத்து லேசாக ஆற விட்டு விடுங்கள். சுடச்சுட சாப்பிடக்கூடாது, ஓரளவுக்கு ஆறியதும் பரிமாற வேண்டியது தான். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்குமே கண்டிப்பாக இது ரொம்பவும் பிடித்துப் போய்விடும், நீங்களும் செஞ்சு கொடுத்து அசத்துங்கள்.

- Advertisement -