வயிற்றுக்கு இதமான இஞ்சி, எலுமிச்சை ரசம் ஒரு முறை இப்படி செஞ்சி பாருங்க. இந்த ரசம் மட்டும் இருந்தா போதும் சைடிஷ் இல்லாம தட்டு சோறும் நிமிஷத்துல காலி ஆயிடும்.

- Advertisement -

கோடை காலத்தில் உடல் உஷ்ணம் அதிகமாகி அதனால் பல்வேறு உடல் உபாதைகள் தோன்றும். இந்த காலத்தில் உணவு விஷயத்தில் கொஞ்சம் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும். இந்த சமையல் குறிப்பு பதிவில் உடலுக்கு நன்மை தரக்கூடிய ஒரு அருமையான இஞ்சி எலுமிச்சை ரசம் எப்படி செய்வது என்பதை பற்றி தான் தெரிந்து கொள்ள போகிறோம். இந்த ரசம் வெயிலின் தாக்கத்தினால் ஏற்படும் உடல் உபாதைகளை குறைப்பதுடன், உடல் ஆரோக்கியத்திற்கும் மிக மிக நல்லது. வாங்க இப்போ இந்த ரசம் எப்படி வைப்பது என்று தெரிந்து கொள்ளலாம்.

செய்முறை

இந்த ரசம் வைப்பதற்கு ஒரு கப் துவரம் பருப்பை நன்றாக சுத்தம் செய்த பின்பு குக்கரில் சேர்த்து குழைய வேக வைத்து கொள்ளுங்கள். ஒரு பெரிய தக்காளியை எடுத்து நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள். இரண்டு பச்சை மிளகாயை கீறி வைத்துக் கொள்ளுங்கள். ஒரு துண்டு இஞ்சி இடி உரலில் வைத்து நசுக்கி கொள்ளுங்கள். ஒரு ஸ்பூன் மிளகு, அரை ஸ்பூன் சீரகம் இரண்டையும் இடி உரலில் சேர்த்து கொரகொரவென்று இடித்து வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

இப்போது அடுப்பை பற்ற வைத்து கடாய் வைத்து இரண்டு டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்த பிறகு கடுகு சேர்த்து பொரிய விடுங்கள். அதன் பிறகு அரிந்து வைத்த தக்காளி, பச்சை மிளகாய், இஞ்சி என அனைத்தையும் சேர்த்த பிறகு கால் ஸ்பூன் மஞ்சள் தூள், அரை ஸ்பூன் உப்பு, ஒரு கொத்து கறிவேப்பிலையும் சேர்த்த பிறகு தக்காளியை வதங்க விடுங்கள். தக்காளி குழைய வேக வேண்டிய அவசியமில்லை கொஞ்சம் வதங்கினாலே போதும்.

தக்காளி ஓரளவிற்கு வதங்கியதும் வேக வைத்த பருப்பை நன்றாக கடைந்து இதில் சேர்த்துக் கொள்ளுங்கள். இத்துடன் ஒரு கப் தண்ணீரும் சேர்த்து அடுப்பை மிதமான தீயில் வைத்து ரசம் நுரைத்து வரும் வரை வைத்திருங்கள்.

- Advertisement -

ரசம் லேசாக நுரைத்து வரும் போது இடித்து வைத்த மிளகு சீரகம் சேர்த்து கால் டீஸ்பூன் பெருங்காயமும் சேர்த்த பிறகு கறிவேப்பிலை கொத்தமல்லியை மேலே தூவி அடுப்பை அணைத்து விடுங்கள். அதன் பிறகு ஒரு எலுமிச்சை பழத்தை பிழிந்து அதன் சாறை ரசத்தில் கலந்து நன்றாக கலக்கி விடுங்கள். எலுமிச்சை சாறு கலக்கும் பொழுது அடுப்பை அணைத்து விடுங்கள். ரசம் கொதிக்கும் போது எலுமிச்சை சாறு விட்டால் ரசம் கசப்பாக மாறி விடும்.

இதையும் படிக்கலாமே: 5 நிமிசத்துல ரொம்ப சிம்பிளா அதே சமயம் ஆரோக்கியமான ஒரு லஞ்ச் பாக்ஸ் ரெசிபி தாங்க இந்த நெல்லிக்காய் சாதம். இப்படி மட்டும் செய்து குடுங்க குழந்தைங்க மிச்சம் வைக்காம சாப்பிடுவாங்க

இப்படி ரசம் வைத்து சுட சுட சாதத்துடன் போட்டு சாப்பிட்டால் இதற்கு தொட்டுக் கொள்ள எதுவுமே கூட வேண்டாம் சாப்பிட அவ்வளவு நன்றாக இருக்கும். இதில் இஞ்சி, எலுமிச்சை எல்லாம் சேர்த்து செய்திருப்பதால் வயிறு சம்பந்தமான பிரச்சனைகளுக்கு இந்த ரசம் மிகவும் நல்லது. நீங்களும் ஒரு முறை இந்த ரசம் வைத்து சாப்பிட்டு பாருங்கள்.

- Advertisement -