- Advertisement -
Homeசமையல் குறிப்புகள்5 நிமிசத்துல ரொம்ப சிம்பிளா அதே சமயம் ஆரோக்கியமான ஒரு லஞ்ச் பாக்ஸ் ரெசிபி தாங்க...

5 நிமிசத்துல ரொம்ப சிம்பிளா அதே சமயம் ஆரோக்கியமான ஒரு லஞ்ச் பாக்ஸ் ரெசிபி தாங்க இந்த நெல்லிக்காய் சாதம். இப்படி மட்டும் செய்து குடுங்க குழந்தைங்க மிச்சம் வைக்காம சாப்பிடுவாங்க

- Advertisement -

இல்லத்தரசிகள் அனைவருக்கும் தினமும் என்ன சமைத்து தங்கள் குழந்தைகளுக்கு தருவது என்று யோசிப்பார்கள். அப்படிப்பட்ட சமையல் சுவையாகவும், சத்துக்கள் மிகுந்ததாக இருந்தால், அதை விட சந்தோஷம் வேறு எதுவும் இல்லை. அப்படிப்பட்ட சத்தான சுவையான சாதம் தான் நெல்லிக்காய் சாதம். நெல்லிக்காயில் பல சத்துக்கள் உள்ளன. நெல்லிக்காயை அமுத கனி என்றும் சொல்வார்கள். அப்படிப்பட்ட நெல்லிக்காயை பச்சையாக குழந்தைகளுக்கு கொடுத்தால், அவர்கள் விரும்பி அதை உண்ண மாட்டார்கள். அதற்கு பதிலாக நெல்லிக்காயை சாதமாக செய்து கொடுத்தால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். அப்படிப்பட்ட நெல்லிக்காய் சாதம் எப்படி செய்வது என்று இந்த பதிவில் காண்போம்.

நெல்லிக்காய் சாதம் செய்ய தேவையான பொருட்கள்:
அரிசி – ஒரு கப், நெல்லிக்காய் – 15, மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு, பச்சை மிளகாய் – 5, எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன், கடுகு – 1/2 டீஸ்பூன், உளுந்தம் பருப்பு – ஒரு டீஸ்பூன், கடலைப்பருப்பு – ஒரு டீஸ்பூன், கருவேப்பிலை – சிறிதளவு, கொத்தமல்லி தழை – சிறிதளவு.

- Advertisement -

நெல்லிக்காய் சாதம் செய்முறை:
முதலில் நாம் அரிசியை சாதமாக வடித்துக் கொள்ள வேண்டும். பிறகு அந்த சாதத்தை தட்டில் போட்டு ஆற வைக்க வேண்டும். பிறகு நெல்லிக்காயை கொட்டைகள் நீக்கி சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும் அல்லது நெல்லிக்காயை கேரட் துருவுவது போல் துருவி வைத்தும் கொள்ளலாம்.

இரண்டு பச்சை மிளகாயை நீளவாக்கில் நறுக்கிக் கொள்ள வேண்டும். பிறகு மீதம் இருக்கும் பச்சை மிளகாயையும், தேவையான அளவு உப்பையும் சேர்த்து மிக்ஸியில் போட்டு நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும். பிறகு அடுப்பில் வாணலியை வைத்து அதில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, அந்த எண்ணெய் சூடான பிறகு, அதில் கடுகு, உளுந்தம் பருப்பு, கடலைப்பருப்பு மற்றும் கருவேப்பிலையை சேர்க்க வேண்டும்.

- Advertisement -

கடுகு வெடித்த பிறகு, அதில் நறுக்கி வைத்திருக்கும் பச்சை மிளகாயை சேர்த்து வதக்க வேண்டும். பிறகு அதில் துருவி வைத்திருக்கும் நெல்லிக்காயை போட்டு வதக்க வேண்டும். நெல்லிக்காய் சிறிது நிறம் மாறிய பிறகு பச்சை மிளகாய் விழுதை அதில் சேர்த்து ஒரு நிமிடம் நன்றாக வதக்க வேண்டும். பிறகு அடுப்பில் இருந்து இறக்கி வைத்து விட வேண்டும்.

இதையும் படிக்கலாமே: கேரளா ஸ்டைல் கோதுமை பாயாசம் செய்வது எப்படி

அடுப்பில் இருந்து இறக்கிய பிறகு ஆற வைத்த சாதத்தை இதில் சேர்த்து நன்றாக கிளறி விட வேண்டும் பிறகு நாம் கொத்தமல்லி தழையை பொடியாக நறுக்கி அதன் மேல் தூவி அலங்கரித்துக் கொள்ளலாம். இப்பொழுது சத்தான, சுவையான நெல்லிக்காய் சாதம் தயார்.

சற்று முன்