நீங்க அவசரமா வெளிய கிளம்பும் போது உங்க முகம் 10 நிமிஷத்துல பளிச்சென்று இருக்க இன்ஸ்டண்ட் ப்யூடி டிப்ஸ் இதோ!

beauty-neem
- Advertisement -

திடீரென அவசர அவசரமாக எங்கேயாவது பங்க்ஷன், பார்ட்டி என்று வெளியில் கிளம்பி கொண்டிருப்போம். அந்த சமயத்தில் முகம் பளிச்சென்று பிரகாசமாக மின்னுவதற்கு மேக்கப் செய்து கொள்ள நேரம் இருக்காது. நாம் மேக்கப் செய்து கொள்வதை விட, நம் முகத்தை பளபளவென்று மின்ன செய்வதற்கு படாதபாடு பட வேண்டி இருக்கும். நாலு முறை சோப்பு போட்டு முகத்தை தேய்த்தாலும் நமக்கு திருப்தியே இருக்காது. அந்த சமயத்தில் இந்த டிப்ஸ் உபயோகித்து பாருங்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அதை எப்படி செய்து கொள்வது என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்.

face1

செயற்கை பொருட்களை விட இயற்கையாகக் கிடைக்கும் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து பத்து நிமிடத்தில் சட்டென முகத்தை பளிச்சென்று ஆக்கிவிட முடியும். அதற்கு உங்களிடம் இருக்க வேண்டிய பொருட்கள் என்னென்ன? என்பதை இப்போது பார்ப்போம். இதையெல்லாம் முன்னரே வீட்டில் வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். அப்போது தான் இந்த மாதிரி அவசர நேரத்தில் நமக்கு கை கொடுக்கும். இதற்கு அதிக பொருட்களும் தேவை பட போவதில்லை.

- Advertisement -

தேவையான பொருட்கள்:
தயிர், தேன், எலுமிச்சை பழம், வேப்பிலை பவுடர், காட்டன், சுடுதண்ணீர், டவல், ஸ்லைட் பின் அல்லது பிளாக் ஹெட் ரிமோவல் டூல்.

neem-powder

மேலே கூறியுள்ள பொருட்கள் பெரும்பாலும் நம் வீட்டில் இருப்பவை தான். அதில் இல்லாத பொருட்களை முன்னரே வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். இப்போது எப்படி இவற்றை முகத்திற்கு பயன்படுத்துவது என்பதை பார்ப்போம்.

- Advertisement -

ஒரு பவுலில் தயிர் மூன்று ஸ்பூன் அளவிற்கு எடுத்துக் கொள்ளுங்கள். அதனுடன் இரண்டு டீஸ்பூன் அளவிற்கு வேப்பிலை பொடியை கலந்து நன்றாக பீட் செய்யுங்கள். தண்ணீர் எதுவும் சேர்க்க தேவையில்லை. இந்த கலவையை ஃபேஸ் பேக் அப்ளை செய்வது போல் முகம் மற்றும் கழுத்து பகுதிகளில் தடவிக் கொள்ளுங்கள். ஐந்து நிமிடம் ஃபேன் காற்றில் காயவிடுங்கள். அதன் பிறகு காட்டன் வைத்து முழுவதுமாக துடைத்து எடுத்து விடுங்கள். கைகளை பயன்படுத்தி கட்டாயம் முகத்தை கழுவ கூடாது.

blackhead-remover-tool

அதன் பிறகு உங்களிடம் பிளாக் ஹெட் ரிமோவல் டூல் இருந்தால் அதை வைத்து கரும்புள்ளிகள் மற்றும் வெள்ளை புள்ளிகள் இருக்கும் இடங்களிலெல்லாம் அழுத்தி நீக்கி எடுத்து விடுங்கள். டூல் இல்லாதவர்கள் ஸ்லைட் பின் அதாவது பூ குத்த பயன்படுத்தும் பின்னை பின்புறமாக திருப்பிக் கொண்டு அதை வைத்து கரும்புள்ளிகள் மற்றும் வெண்புள்ளிகளை நீக்கிவிடலாம். நீங்கள் பேக் போட்டுள்ளதால் இப்போது நீக்கும் பொழுது சுலபமாக வந்துவிடும்.

- Advertisement -

aavi pidippathu

அதன் பிறகு ஒரு சின்ன பாத்திரத்தில் சுடு தண்ணீர் வைத்து அதில் ஒரு இரண்டு நிமிடம் ஆவி பிடித்துக் கொள்ளுங்கள். உங்கள் முகத்தில் இருக்கும் அழுக்குகள், கிருமிகள் போன்றவை முற்றிலுமாக ஆவி பிடிப்பதன் மூலம் வெளியேறி சுத்தமான முகம் கொடுக்கும். ஒரு டவல் வைத்து இப்பொழுது முகத்தில் இருந்து வெளியேறிய அசுத்தமான நீரை துடைத்துக் கொள்ளுங்கள்.

lemon with honey

இறுதியாக அரை டீஸ்பூன் அளவிற்கு தேனுடன், அரை டீஸ்பூன் அளவிற்கு எலுமிச்சைச்சாறு கலந்து முகம் முழுவதும் தடவி 3 நிமிடத்திற்கு காயவிடுங்கள். அதன்பின் காட்டன் வைத்து துடைத்து எடுத்து விடுங்கள். அவ்வளவுதாங்க! ரொம்ப ரொம்ப ஈஸியா குறைந்த பொருட்கள் வைத்தே அதிக செலவில்லாமல் உங்கள் முகத்தை பத்து நிமிடத்திற்குள் பார்லர் சென்று வந்தது போல் பளிச்சென்று இருக்கும்.

face

இதில் உங்களுக்கு வேப்பிலை பவுடர் மட்டும் வாங்க வேண்டியது போல் இருக்கும். மீதி எல்லாமே வீட்டில் இருக்கும் பொருட்கள் தான். இதை செய்த பின் புகைப்படம் எடுக்கும் பொழுது நீங்கள் தான் ஜொலிப்பீர்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். இனிமேல் அவசரமாக வெளியே கிளம்ப இது போல் செய்து கொண்டு அட்டகாசமான ஸ்டைலில் சென்று அனைவரையும் அசத்தி விடுங்கள்.

இதையும் படிக்கலாமே
காலையில் எழுந்ததும் நீங்க இதெல்லாம் செய்வீங்களா? செய்யலைன்னா! நீங்க வெற்றியடைவது கொஞ்சம் கஷ்டம் தான் பாத்துக்கங்க!

இது போன்று மேலும் தேவையான தகவல்கள் பலவற்றை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

- Advertisement -