நாம் ஒவ்வொருவரும் என்றும் அழகாக இருக்க வேண்டும். பொலிவாக இருக்க வேண்டும். பார்ப்பவர்கள் வியந்து பார்க்கும் வகையில் இருக்க வேண்டும் என்றுதான் ஆசைப்படுவோம். அதனால் தான் இன்றைய காலத்தில் பல இடங்களில் அழகு நிலையங்கள் தொடங்கி இருக்கிறது, அதேபோல் அதிகப்படியாக கெமிக்கல் நிறைந்த அழகு சாதன பொருட்களும் கடைகளில் விற்கப்படுகின்றன. இவற்றை தவிர்த்து விட்டு நாமே நம்முடைய வீட்டில் இயற்கையான முறையில் மிகவும் எளிமையாக அதேசமயம் உடனடி பொலிவை தரக்கூடியதாக திகழக்கூடிய ஒரு ஃபேஸ் பேக்கை எப்படி தயார் செய்வது என்று தான் இந்த அழகு குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்க போகிறோம்.
உடனடி முகப்பொலிவை பெற
முதலில் நம்முடைய முகத்தில் இருக்கக்கூடிய இறந்த செல்களை நாம் நீக்க வேண்டும். அப்படி நீக்கினால் தான் நம்முடைய முகத்திற்கு தேவையான சத்துக்களை நம்மால் தந்து அதை பொலிவுடன் திகழச் செய்ய முடியும். அதனால் முதலில் இறந்த செல்களை நீக்குவதற்கு ஒரு ஸ்க்ரப்பரை தயார் செய்ய வேண்டும். இதற்கு ஒரு கிண்ணத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் ஒரு டீஸ்பூன் காப்பித்தூள், ஒரு டீஸ்பூன் சர்க்கரை, ஒரு டீஸ்பூன் எலுமிச்சை சாறு, ஒரு டீஸ்பூன் தேங்காய் எண்ணெய் இவை அனைத்தையும் ஒருமுறை மட்டும் கலந்து அதை அப்படியே எடுத்து நம்முடைய முகத்தில் தடவ வேண்டும்.
முகத்தில் பருக்கள் அதிகமாக இருப்பவர்கள் லேசாக ஐந்து நிமிடம் மட்டும் மசாஜ் செய்தால் போதும். பருக்கள் இல்லை என்பவர்கள் குறைந்தது பத்து நிமிடமாவது மசாஜ் செய்து கொள்ளுங்கள். பிறகு மெல்லிய காட்டன் துணியை வைத்து முகத்தை துடைத்து எடுத்துக் கொள்ளலாம். இப்பொழுது இறந்த செல்கள அனைத்தும் நீங்கிருக்கும். இதற்குப் பிறகு நாம் பொலிவை தரக்கூடிய ஃபேஸ் பேக்கை தடவினோம் என்றால் அது நல்ல பலனை தரும்.
இதற்கு ஒரு கிண்ணத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் ஒரு டீஸ்பூன் கடலை மாவு, ஒரு டீஸ்பூன் அரிசி மாவு, அரை டீஸ்பூன் காபித்தூள், இரண்டு ஸ்பூன் தயிர், ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறு இவை அனைத்தையும் ஒன்றாக சேர்த்து கலந்து கொள்ளுங்கள். பிறகு இதனுடன் தேவையான அளவு பன்னீரை ஊற்றி கலந்து கொள்ளுங்கள். இப்பொழுது ஃபேஸ் பேக் தயாராகிவிட்டது.
இதை முகத்தில் மட்டுமல்லாமல் எங்கெல்லாம் கருமை நிறம் அதிகமாக இருக்கிறது என்று நினைக்கிறீர்களோ அங்கெல்லாம் நாம் தடவிக் கொள்ளலாம். இந்த ஃபேஸ் பேக்கை முகத்தில் தடவி 20 நிமிடம் விட்டுவிடுங்கள். பிறகு லேசாக தண்ணீரை தெளித்து ஒரு முறை வட்ட வடிவில் மசாஜ் செய்து குளிர்ந்த நீரினால் கழுவிக்கொள்ள வேண்டும். அவ்வளவுதான் ஒரு முறை செய்த உடனேயே நல்ல பொலிவை தரக்கூடிய அற்புதமான ஒரு ஃபேஸ் பேக்காக தான் இது திகழ்கிறது. இதை வாரத்திற்கு இரண்டு நாட்கள் வீதம் நாம் தொடர்ச்சியாக பயன்படுத்தும் பொழுது நம்முடைய முகம் என்றும் அழகாகவும் பொலிவாகவும் திகழும்.
இதையும் படிக்கலாமே:முக சுருக்கத்தை நீக்கும் தயிர்
நம்முடைய முகத்தை இயற்கையாகவே பொலிவாக மாற்றுவதற்கு உதவக்கூடிய இந்த பொருட்களை தொடர்ச்சியாக நாம் பயன்படுத்துவதன் மூலம் முகத்தில் எந்தவித பக்க விளைவுகளும் இல்லாமல் அழகான தெளிவான பொலிவான முகத்தை பெற முடியும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.