- Advertisement -
Homeஅழகு குறிப்புகள் | Beauty tips in Tamilமுக சுருக்கத்தை நீக்கும் தயிர்

முக சுருக்கத்தை நீக்கும் தயிர்

- Advertisement -

ஒவ்வொருவருக்கும் வயதான பிறகு அந்த வயதின் காரணமாக முகத்தில் தளர்வுகள் ஏற்பட்டு சுருக்கம் உண்டாகும். ஆனால் இன்றைய காலத்தில் அவர்களுடைய வயதை காட்டிலும் அதிகப்படியான சுருக்கத்தை விரைவிலேயே பெற்று விடுகிறார்கள் என்று தான் கூற வேண்டும். இதற்கு வாழ்வியல் மாற்றமும் உணவு மாற்றமும் காரணமாக இருந்தாலும் அதை முறையாக நாம் பார்த்துக் கொண்டோம் என்றால் இளமையான தோற்றத்தை நம்மால் பெற முடியும். அந்த இளமையான தோற்றத்தை பெறுவதற்கு தயிரை வைத்து எந்த முறையில் ஃபேஸ் பேக் போட வேண்டும் என்று தான் இந்த அழகு குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்க போகிறோம்.

முக சுருக்கத்தை நீக்கும் தயிர்

முகச்சுருக்கம் ஏற்படுவதற்கு வயது ஒரு முக்கியமான காரணம் என்றாலும் எப்பொழுதும் 40 வயதில் வரக்கூடிய சுருக்கமானது 30 வயதிலேயே விரைவில் வந்து விட்டால் அதற்கு நம்முடைய வாழ்க்கைமுறையே காரணமாக திகழ்கிறது. அதிலும் குறிப்பாக நம்முடைய உள்ளுறுப்புகள் ஆரோக்கியமாக இல்லை என்றாலும், அதிகப்படியான மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு இருந்தாலும், தூக்கமின்மையாலும் அதிக அளவில் முகச்சுருக்கம் என்பது ஏற்படும். முதலில் ஆரோக்கியமான மன அழுத்தமற்ற அமைதியான வாழ்வியல் சூழலாக நம்முடைய வாழ்க்கையை மாற்றிக் கொண்டோம் என்றால் இதற்கு ஒரு நல்ல தீர்வு கிடைக்கும். இதோடு சேர்த்து வேறு என்னவெல்லாம் செய்தால் முகச்சுருக்கம் நீங்கும் என்று இப்பொழுது தெரிந்து கொள்வோம்.

- Advertisement -

முகச்சுருக்கம் நீங்குவதற்கு அதிகப்படியாக விட்டமின் சி சத்து தேவைப்படும். இந்த விட்டமின் சி சக்தி நெல்லிக்காயில் அதிக அளவில் இருக்கிறது. தினமும் ஒரு நெல்லிக்காயை ஜூஸாக அடித்து குடிப்பதன் மூலம் நம்முடைய சருமத்திற்கு தேவையான அனைத்து விதமான சத்துக்களும் கிடைக்கும். அதன் மூலம் நம்முடைய சருமம் மட்டுமல்லாமல் நம்முடைய முடியும் ஆரோக்கியமாக திகழும். இதோடு தயிரை பயன்படுத்தி நம்முடைய முகச்சுருக்கத்தை நீக்குவதற்கு உதவக்கூடிய ஃபேஸ் பேக்கையும் தினமும் போட வேண்டும்.

இதற்கு ஒரு சுத்தமான கிண்ணத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் இரண்டு ஸ்பூன் அளவிற்கு கட்டி தயிரை சேர்த்து கொள்ளுங்கள். பிறகு இதனுடன் கெமிக்கல் சேர்க்காத கற்றாழை ஜெல் ஒரு ஸ்பூன் சேர்த்துக் கொள்ளுங்கள். அடுத்ததாக செக்கில் ஆட்டிய தேங்காய் எண்ணெய் ஒரு ஸ்பூன் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள். இது ஒரு கிரீம் பதத்திற்கு வரும். இந்த கிரீமை நம்முடைய முகம், கழுத்து, கை, கால்களில் நன்றாக தேய்த்து 5 நிமிடம் மசாஜ் செய்ய வேண்டும். அதன் பிறகு 15 நிமிடம் இதை அப்படியே விட்டுவிட்டு குளிர்ந்த நீரினால் கழுவ வேண்டும். இப்படி தினமும் தொடர்ச்சியாக செய்வதன் மூலம் முகச்சுருக்கம் நீங்குவதோடு மட்டுமல்லாமல் நம்முடைய வயதை விட இளமையான தோற்றத்தை நம்மால் பெற முடியும்.

- Advertisement -

இதையும் படிக்கலாமே:பொடுகு மறைய டிப்ஸ்

வீட்டில் கிடைக்கக்கூடிய இந்த எளிமையான மூன்று பொருட்களை பயன்படுத்தி நம்முடைய வயதை விட இளமையான தோற்றத்தை நம்மால் பெற முடியும் என்பதால் இதை மட்டுமே செய்யாமல் நம்முடைய உடலையும் ஆரோக்கியமாக பார்த்துக் கொண்டு இளமையுடன் திகழ்வோம் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்