திடீர்னு வெளியே கிளம்பனுமா? முகத்தில் எண்ணெய் பிசுக்கு இருக்கிறதா? இன்ஸ்டன்ட்டாக வீட்டிலேயே உங்களுடைய முகத்தை பிரைட்டாகவும், கலராகவும் மாற்ற எளிய வழி என்ன தெரியுமா?

coffee-powder-fack-pack
- Advertisement -

திடீரென எங்காவது வெளியே கிளம்பும் போது நம்முடைய முகம் அதற்கு ஏற்றார் போல் செட் ஆகாது. முகத்தில் எண்ணெய் பிசுக்குகள், மாசு, தூசு போன்றவை இருந்தாலும் பார்ப்பதற்கு நன்றாக இருக்காது. எத்தகைய முகத்தையும் 10 நிமிடத்தில் பிரைட் ஆகவும், கலராகவும் மாற்றக்கூடிய இந்த ஒரு ஃபேஸ் பேக் ரொம்பவே எஃபக்டிவ்வான ரிசல்ட்டை கொடுக்கும். இன்ஸ்டன்ட் க்லோயிங் கிடைக்க எளிதாக நாம் செய்ய இருப்பது என்ன? என்பதைத் தான் அழகு குறிப்பு பதிவாக இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

எல்லோருடைய முகமும் ஒரே மாதிரியான தன்மையுடன் இருப்பதில்லை. ஒருவருடைய முகம் வறண்டதாக இருந்தால், இன்னொருவருடைய முகம் எண்ணெய் பிசுக்காக இருக்கும். சிலருடைய முகம் சென்சிடிவ் ஆக இருக்கும். இப்படி எந்த வகையான சருமமாக இருந்தாலும், இந்த ஒரு ஃபேஸ் பேக் அனைவருக்கும் ஏற்ற எளிய ஃபேஸ் பேக்காக இருக்கும். இதை வாரம் ஒரு முறை பயன்படுத்துபவர்களுக்கு என்றுமே இளமையுடன் இருக்கக்கூடிய அதிர்ஷ்டமும் இருக்கும்.

- Advertisement -

முதலில் இரண்டு டீஸ்பூன் அளவிற்கு காபி பவுடரை எடுத்துக் கொள்ளுங்கள். காபி பவுடர் முகத்திற்கு நல்ல ஒரு க்லோ கொடுக்கும். அது மட்டுமல்லாமல் கருவளையத்தை இன்ஸ்டன்ட் ஆக நீக்கக்கூடிய ஆற்றல் இதற்கு உண்டு. இதனுடன் ஒரு ஸ்பூன் அளவிற்கு சுத்தமான தேன் சேர்த்துக் கொள்ளுங்கள். தேன் நம்முடைய முகத்திற்கு மாய்ஸ்ரைசர் போல செயல்படும். சொரசொர என்று இருக்கும் முகத்தைக் கூட பளிங்கு போல மாற்றக்கூடிய சக்தி தேனுக்கு உண்டு.

இதனுடன் கடைசியாக கொஞ்சம் போல் பன்னீர் சேர்த்து நைசாக கட்டிகள் இல்லாமல் கரைத்துக் கொள்ள வேண்டும். ரோஸ் வாட்டர் சேர்த்து பேஸ்ட் போல கரைத்ததும், இந்த பேக்கை முகம் முழுவதும் தேய்த்து பத்து நிமிடம் ஊற விட்டு விட வேண்டும். லேசாக காய்ந்தது போல வந்ததும் மீண்டும் ஒரு லேயர் முகத்தில் தடவிக் கொள்ள வேண்டும். அதன் பின்பு பத்து நிமிடம் அப்படியே ஊற விட்டு விடுங்கள்.

- Advertisement -

இப்போது கைகளில் லேசாக தண்ணீர் தொட்டு மசாஜ் செய்வது போல செய்ய வேண்டும். முகம் முழுவதும் இது போல மசாஜ் செய்து ஈரத்துணியால் துடைத்து எடுத்தால், நம்முடைய முகமா இது? என்று பார்ப்பதற்கு வாயைப் பிளக்க நேரிடும், அவ்வளவு பிரைட்னஸ் மற்றும் டோனிங் தரக்கூடிய இந்த ஒரு ஃபேஸ் பேக் வாரம் ஒரு முறை போட்டு பாருங்கள், நல்ல ஒரு ரிசல்ட் உங்களுக்கு கிடைக்கும்.

இதையும் படிக்கலாமே:
அரிசி வடித்த கஞ்சியை வைத்து சலூன் ஸ்டைலில் ஹேர் ஸ்பா, வீட்டில் செய்து கொள்வது எப்படி? சொன்னா நம்ப மாட்டீங்க. இதை செய்தால் உங்களுடைய தலைமுடி சினிமா ஹீரோயின் முடி போல அழகா மாறிடும்.

உடனடியாக நம் முகத்தை பளபளக்க செய்யக்கூடிய இந்த ஒரு ஃபேஸ் பேக் முகத்திற்குள் சென்று முக துவாரங்களை இருக செய்யும். இதனால் நீண்ட நாட்கள் இளமையுடன் இருக்கக்கூடிய அதிர்ஷ்டத்தையும் இது கொடுக்கும். இதில் எந்தவிதமான ரசாயன பொருட்களும் நாம் சேர்க்க போவது கிடையாது. எல்லா பொருட்களும் இயற்கையாக கிடைக்கக்கூடியது எனவே தேன், பன்னீர், காபி பவுடர் எதுவாக இருந்தாலும் அதை கொஞ்சம் பிராண்டட் ஆக வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் இந்த முறையில் ஃபேஸ் பேக் போட்டு காய வையுங்கள். எண்ணெய் பிசுக்கு உங்கள் முகத்தை அண்டவே செய்யாது, எப்பொழுதுமே கலராக உங்களை வைத்துக் கொள்ளும்.

- Advertisement -