அரிசி வடித்த கஞ்சியை வைத்து சலூன் ஸ்டைலில் ஹேர் ஸ்பா, வீட்டில் செய்து கொள்வது எப்படி? சொன்னா நம்ப மாட்டீங்க. இதை செய்தால் உங்களுடைய தலைமுடி சினிமா ஹீரோயின் முடி போல அழகா மாறிடும்.

hair2
- Advertisement -

நிறைய பேருக்கு சினிமாவில் வரக்கூடிய ஹீரோயின் முடி போல தங்களுடைய முடியும் அழகாக சில்க்கியாக இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள். ஆனால் அப்படி நம்முடைய முடியையும் மாற்றிக் கொள்ள வேண்டும் என்றால் பியூட்டி பார்லருக்கு சென்று ஹேர் ஸ்பா, ஸ்ட்ரைட்னிங் போன்ற ட்ரீட்மென்டை எடுத்துக் கொண்டால்தான் நம்முடைய முடியும் அப்படி அழகாக மாறும். ஆனால் அதற்கெல்லாம் செலவு கொஞ்சம் அதிகமாக எடுக்கும். சாதாரணமாக நடுத்தர வர்க்கத்தால் அதையெல்லாம் செய்து கொள்ள முடியாது அல்லவா. வீட்டில் இருந்தபடியே முடியை ஸ்பா ட்ரீட்மென்ட் செய்தது போலவே அழகாக மாற்ற ஒரு சின்ன குறிப்பு இதோ.

இந்த குறிப்புக்கு நமக்கு அரிசி வடித்த கஞ்சி தண்ணீர் தேவை. கூடவே ஃபிளக்ஸ் சீட்ஸ் என்று சொல்லப்படும் ஆளி விதை 2 டேபிள் ஸ்பூன், கருவேப்பிலை 2 கொத்து. இந்த 3 பொருட்கள் இருந்தால் போதும். கூடவே 1 டேபிள் ஸ்பூன் செக்கில் ஆட்டிய ஏதாவது ஒரு எண்ணெய். நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய், விளக்கெண்ணெய், ஆலிவ் ஆயில், உங்கள் விருப்பம் தான் எந்த எண்ணெயை வேண்டுமென்றாலும் பயன்படுத்தலாம்.

- Advertisement -

அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து 1/2 கப் அளவு அரிசி வடித்த கஞ்சி தண்ணீரை ஊற்றி, அதில் இரண்டு டேபிள் ஸ்பூன் ஆளி விதைகளை போட்டு, இரண்டு கொத்து கருவேப்பிலையை போட்டு நன்றாக கொதிக்க வையுங்கள். ஐந்து நிமிடங்கள் மிதமான தீயில் கொதித்து வந்தவுடன் இது கொஞ்சம் கொழகொழப்பாக மாறும். ஆளி விதையில் இருக்கக்கூடிய ஜெல் வெளியேறும். அப்போது அடுப்பை அணைத்துவிட்டு, வெதுவெதுப்பாக ஆறிய பின்பு இந்த ஜெல்லை ஒரு காட்டன் துணியில் ஊற்றி பிழிந்து வடிகட்டினால் நமக்கு சூப்பரான ஸ்பா ஜெல் கிடைத்துவிடும். (இது பார்ப்பதற்கு முட்டையின் வெள்ளை கரு போல கொஞ்சம் திக்காக கொழ கொழப்பாக இருக்கும்.)

இந்த ஜெல்லோடு ஒரு டேபிள் ஸ்பூன் உங்கள் வீட்டில் இருக்கும் செக்கில் ஆட்டிய எண்ணெயை ஊற்றி நன்றாக கலந்தால் ஹேர் ஸ்பாவுக்கு தேவையான ஜெல் தயாராகிவிட்டது. உங்களுடைய தலையில் இருக்கும் சிக்கை முழுமையாக நீக்கிவிடுங்கள். இந்த ஜெல்லை தலையின் மேல் பக்கத்திலிருந்து கீழ் பக்கம் வரை அப்படியே நீளமாக அப்ளை செய்ய வேண்டும். அப்ளை செய்து விட்டு பெரிய பெரிய பல் உள்ள சீப்பை வைத்து முடியை நீளமாக சீவி விடுங்கள்.

- Advertisement -

அப்படியே 20 நிமிடங்கள் இருக்கட்டும். அதன் பின்பு தலையை வெறும் தண்ணீரில் அலசி கொள்ள வேண்டும். பிறகு பாருங்கள் உங்களுடைய முடியும் ஹேர் ஸ்டைலிங் செய்தது போல அவ்வளவு சூப்பராக இருக்கும். வீட்டிலேயே இதை நீங்கள் செய்து கொள்ளலாம். வாரத்தில் 2 நாட்கள் தொடர்ந்து இதை செய்து வர உங்களுடைய முடி நிரந்தரமாக சிக்கு இல்லாமல் சில்கியாக சூப்பராக மாறும். அதே சமயம் முடி உதிர்வு குறைந்து முடி அடர்த்தியாக வளரவும் இந்த ஜெல் நிச்சயமாக உதவி செய்யும். (குறிப்புக்கு பயன்படுத்தும் வடித்த கஞ்சி தண்ணீர் கொஞ்சம் தண்ணீராக இருக்க வேண்டும். ரொம்பவும் கட்டியாக இருக்கக் கூடாது. தேவைப்பட்டால் அதில் கொஞ்சம் தண்ணீரை சேர்த்துக் கொள்ளலாம் தவறில்லை.)

ஆளி விதை இப்போது பெரிய பெரிய டிபார்ட்மெண்டல் ஸ்டோரில் சுலபமாக கிடைக்கிறது. அப்படி இல்லை என்றால் ஆன்லைனில் ஆர்டர் செய்து வாங்கிக் கொள்ளுங்கள். உங்களுடைய முடியை அழகு படுத்த இதைவிட சுலபமான ஐடியா வேற இருக்க முடியாது. இந்த குறிப்பு படிச்சிருந்தா முயற்சி செய்து பாருங்கள்.

- Advertisement -