முகம் இன்ஸ்டன்ட்டாக 5 நிமிடத்தில் கண்ணாடி போல பளபளன்னு மின்ன சமையலறையில் இருக்கும் இந்த பொருளை எடுத்துக்கோங்க!

face-tomato
- Advertisement -

முகம் எப்போதும் வறண்டு போகாமல் ஈரப்பதத்துடன் வைத்துக் கொள்வது அவசியமாகும். அப்போது தான் முகப்பருக்கள் போன்ற பிரச்சனைகள் தோன்றாமல் இருக்கும். அதே போல முகத்தில் இன்ஸ்டன்ட் க்ளோ கிடைக்க செயற்கையாக எந்த கிரீம் வகைகளையும் பயன்படுத்தாமல், வீட்டில் இருக்கும் சமையலறை பொருட்களை வைத்து நொடியில் பளிச்சென கண்ணாடி போல மின்னலாம். அது எப்படி? என்பதை தான் இந்த பதிவின் மூலம் அழகு குறிப்பாக பார்க்க இருக்கிறோம்.

உடனடியாக முகத்தை பளிச்சென வைக்கக்கூடிய ஆற்றல் தக்காளியில் நிறைந்து காணப்படுகிறது. நீங்கள் தினமும் தக்காளி வெட்டும் போது கொஞ்சம் சாறு எடுத்து முகத்தில் பூசிக் கொண்டு சமையல் செய்ய ஆரம்பிக்கலாம். சமையல் செய்து முடித்த பின்பு முகத்தை கழுவினால் முகம் நல்ல ஈரப்பதத்துடன் பளிச்சென்று இருக்கும். கருந்திட்டுக்கள், கரும்புள்ளிகள், கருவளையம் போன்ற எந்த பிரச்சனைகளும் வரவே செய்யாது.

- Advertisement -

அந்த அளவிற்கு எஃபெக்டிவ்வானா ஆற்றல் கொண்டுள்ள இந்த தக்காளியை பேஸ்ட் போல அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். தக்காளி பேஸ்ட் 3 ஸ்பூன் அளவுக்கு ஒரு சிறிய கிண்ணத்தில் எடுத்துக் கொள்ளுங்கள். பின்னர் அதனுடன் ஒரு ஸ்பூன் கெட்டி தயிர் சேர்த்துக் கொள்ளுங்கள். தயிர் நம் முகத்தை மிருதுவாக்கும் தன்மை கொண்டுள்ளது. இது எத்தகைய கடினமான சருமத்தையும் சாஃப்டாக மாற்றும்.

பின்னர் இதனுடன் அரை மூடி எலுமிச்சை சாறு பிழிந்து கொள்ளுங்கள். ஒரு ஸ்பூன் அளவுக்கு இருந்தால் போதும். எலுமிச்சை சாறு முகத்தில் இருக்கும் நுண்கிருமிகளையும் விரட்டி அடிக்கும் அற்புதம் நிறைந்த ஒரு பொருளாகும். ஆனால் எலுமிச்சை சாறு நேரடியாக முகத்தில் பயன்படுத்தினால் ஒரு விதமான எரிச்சல் உண்டாவதை உணர முடியும் எனவே இது போல பேக் போடும் பொழுது எந்த பேக்காக இருந்தாலும் சிறிதளவு எலுமிச்சை சாறு சேர்த்துக் கொண்டால் முகம் நல்ல புத்துணர்ச்சி அடையும்.

- Advertisement -

உங்களிடம் ஓட்ஸ் இருந்தால் ஓட்ஸை பவுடர் ஆக்கி வைத்துக் கொள்ளுங்கள். அதிலிருந்து ஒரு ஸ்பூன் பவுடரை மட்டும் இதனுடன் சேர்த்துக் கொள்ள வேண்டும். அப்படி ஓட்ஸ் இல்லாதவர்கள், அரிசி மாவு பயன்படுத்தலாம். அரை ஸ்பூன் அரிசி மாவு சேர்த்து நன்கு பேஸ்ட் போல கலந்து வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் இதை முகம், கழுத்து, கை, கால் போன்ற எல்லா பகுதிகளிலும் லேசாக தடவி மசாஜ் போல ஒரு ஐந்து நிமிடம் செய்யுங்கள். பிறகு அப்படியே ஊற விட்டு விடுங்கள். 20 நிமிடம் நன்கு ஊற விட வேண்டும். அது உலர ஆரம்பித்து விடும். முழுமையாக உலராவிட்டாலும் பரவாயில்லை, நீங்கள் ஒரு ஈரத் துணியை வைத்து துடைத்து எடுத்துக் கொள்ளுங்கள் அல்லது முகத்தை வெதுவெதுப்பான தண்ணீரால் கழுவி விடுங்கள்.

சாதாரண தண்ணீரை பயன்படுத்த வேண்டாம். ஒன்று குளிர்ந்த தண்ணீர் அல்லது வெதுவெதுப்பான தண்ணீரால் முகத்தை துடைத்து பாருங்கள், முகம் அவ்வளவு பளிச்சென புத்துணர்ச்சியாக இருக்கும். ரொம்ப சுலபமாக பத்து பைசா செலவில்லாமல் வீட்டில் சமையல் அறையில் இருக்கும் இந்த பொருட்களை வைத்து நொடியில் நாம் பார்லருக்கு சென்ற உணர்வை பெறலாம். பேசியல் செய்தால் கூட உங்களுக்கு இவ்வளவு பிரெஷான ஒரு உணர்வு இருக்குமா என்று தெரியாது, இதில் அவ்வளவு அருமையான ரிசல்ட் கிடைக்கும் ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -