திடீர்னு ஃபங்க்ஷன் போக வேண்டிய சூழ்நிலை வந்திருச்சா? பார்லர் போக நேரமில்லையா? கவலை வேண்டாம் 10 நிமிடத்தில் உங்கள் முகத்தை பார்லர் சென்று வந்தது போல் பளிச்சுனு ஆக்கிடலாம் வாங்க.

face-curd-rice-flour
- Advertisement -

நாம் ஏதாவது பார்ட்டி, ஃபங்ஷன் என்று கிளம்புவதாக இருந்தால் அதற்கு இரண்டு மூன்று நாட்களுக்கு முன்பாகவே முகத்திற்கு கிரீம் அப்ளை செய்வது, அதிலும் முக்கியமானவர்கள் ஃபங்ஷன் என்றால் பார்லர் கூட சென்று முகத்தை மேலும் அழகு படுத்திக் கொள்வது வழக்கம். ஆனால் இந்த ஒரு பேக்கை வீட்டில் தயார் செய்து போட்டாலே போதும். அதிலும் பங்க்ஷனுக்கு கிளம்ப ஒரு மணி நேரம் முன்பு போட்டாலே போதும். முகம் அத்தனை பொலிவுடன், பிரகாசத்துடனும், மேக்கப் போடாமலே பளிச்சென்று இருக்கும்.

தேவையான பொருட்கள்: அரிசி மாவு – 1 டீஸ்பூன், மஞ்சள் தூள் – 1/4 கால் டீஸ்பூன், தயிர் – 1 டீஸ்பூன், காய்ச்சாத பச்சை பால் – 2 டீஸ்பூன், ரோஸ் வாட்டர் – 1 டீஸ்பூன்.

- Advertisement -

ஒரு பௌலில் 1 ஸ்பூன் பச்சரிசி மாவில், 1/4 ஸ்பூன் மஞ்சள் தூள், இது முகத்திற்கு பயன்படுத்தும் மஞ்சளாக இருக்க வேண்டும். கஸ்தூரி மஞ்சளாக இருந்தாலும் சரிதான். குழம்பு மஞ்சள் தூள் வேண்டாம். பிறகு அதில் ஒரு ஸ்பூன் தயிர் சேர்த்துக் கொள்ளுங்கள். பின்பு 1 டீஸ்பூன் ரோஸ் வாட்டர் கலந்து அப்படியே ஐந்து நிமிடம் வைத்து விடுங்கள்.

முதலில் முகத்தை சுத்தமான தண்ணீர் கொண்டு கழுவி விடுங்கள். பிறகு காய்ச்சாத பச்சை பாலை இரண்டு ஸ்பூன் எடுத்து கொண்டு அதில் பஞ்சை முக்கி எடுத்து முகத்தை துடைத்துக் கொள்ளுங்கள். இது ஒரு இரண்டு நிமிடம் அப்படியே முகத்தில் இருக்கட்டும். பிறகு சாதாரண தண்ணீரை கொண்டு முகத்தை கழுவி விடுங்கள். பாலை வைத்து இப்படி துடைப்பதால் முகத்தில் உள்ள இறந்த செல்கள் எல்லாம் வெளியேறி முகம் சுத்தமாகும்.

- Advertisement -

பிறகு தயிர், அரிசி மாவு, மஞ்சள் ரோஸ் வாட்டர் கலந்து வைத்த இந்த கிரீமை முகத்தில் நன்றாக தேய்த்து விடுங்கள். இது அப்படியே ஒரு 10 -15 நிமிடம் உங்கள் முகத்தில் இருக்கட்டும். அதன் பிறகு சுத்தமான தண்ணீர் கொண்டு உங்கள் முகத்தை கழுவிடுங்கள். தயிர் நம் முகத்தில் இருக்கும் அழுக்கைகளை எல்லாம் உடனே வெளியேற்றி விடும். அரிசி மாவு நல்ல ஸ்கரப்பர் போல செயல் படும். ரோஸ் வாட்டர் சருமத்தை மென்மையாக்கும். இது முகத்திற்கு எந்த வித பக்கவிளைவையும் ஏற்படுத்தாது.

இத்தனை சுலபமாக வீட்டில் இருக்கும் பொருளை வைத்தே ரெடி ஆகிடலாம்ன்னு போது ஏன் தேவை இல்லாமல் பார்லர்க்கு செலவு செய்யணும். இப்படி பங்க்ஷன் போகும்போது தான் இதை செய்ய வேண்டும் என்று அவசியமில்லை. உங்களுக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் குறைந்தது வாரத்திற்கு இரண்டு முறையாவது, இப்படி செய்து வந்தாலே போதும். நீங்கள் எப்போதுமே பார்லர் போக வேண்டிய அவசியமே இருக்காது. இதே முறையை ஆண்களும் பின்பற்றலாம். ஆனால் ஆண்கள் இதை உபயோகிக்கும் போது மஞ்சளை மட்டும் நிச்சயமாக தவிர்த்து விடுங்கள் போதும்.

- Advertisement -