பத்து நிமிடத்தில் முகம் ஜொலிக்க

instant glow milk honey
- Advertisement -

பெண்கள் வெளியில் கிளம்புவதாக இருந்தால் அவர்களின் உடை மற்றும் முகத்தை மிகவும் அழகாக வெளிப்படுத்த வேண்டும் என்று நினைப்பார்கள். அதனால் தான் அவர்களுக்கு வெளியே கிளம்ப வேண்டும் என்றாலே நேரம் அதிகமாக தேவைப்படும். ஒரு முறைக்கு பத்து முறை கண்ணாடியை பார்த்து அழகாக இருக்கிறோமா என்று பார்த்துக் கொண்டே இருப்பார்கள். அப்படிப்பட்டவர்களை திடீரென்று வெளியில் கிளம்ப வேண்டும் என்று கூறிவிட்டால் என்ன செய்ய முடியும்? அப்படிப்பட்ட அவசரமான சூழ்நிலையில் செய்யக்கூடிய ஒரு எளிமையான முகத்தை ஜொலிக்க வைக்கும் டிப்ஸை பற்றி தான் இந்த அழகு குறிப்பு குறித்த பகுதியில் பார்க்கப் போகிறோம்.

உடனடி பொலிவை தரக்கூடிய பொருட்கள் என்பது கெமிக்கல் நிறைந்த பொருட்களாக தான் இருக்கும் என்று பலரும் நினைக்கிறார்கள். ஆனால் இயற்கையிலேயே கிடைக்கக்கூடிய அற்புதமான பொருட்களும் இருக்கிறது. இந்த பொருட்களை ஒரு முறை பயன்படுத்தினாலே முகத்தில் இருக்கக்கூடிய சரும அழுக்குகளும் இறந்த செல்களும் நீங்கி முகத்தை பொலிவுடன் பிரகாசமாகவும் காட்ட உதவும். அப்படிப்பட்ட பொருட்களை வைத்து தான் பத்தே நிமிடத்தில் முகத்தை ஜொலிக்கும் அளவிற்கு எப்படி மாற்றுவது என்று பார்க்கப் போகிறோம்.

- Advertisement -

இதற்கு நமக்கு தேவைப்படுவது இரண்டை இரண்டு பொருட்கள்தான். இந்த பொருட்கள் இல்லாத வீடே இருக்காது என்று தான் கூற வேண்டும். அந்த பொருட்கள்தான் பால் மற்றும் தேன். முடிந்த அளவிற்கு பசும்பாலாக இருந்தால் அது இன்னும் அதிக பலனை தரும். காய்ச்சாத பால் தான் இதற்கு தேவைப்படும். முதலில் முகத்தை வெறும் தண்ணீரை வைத்து கழுவி ஈரமில்லாமல் துடைத்துக் கொள்ளுங்கள்.

பிறகு காய்ச்சாத பசும்பால் சிறிதளவு எடுத்து அதில் பஞ்சை நனைத்து முகம் முழுவதும் தடவிக்கொள்ள வேண்டும். அப்படியே இரண்டு நிமிடம் விட்டு விடுங்கள். பிறகு வட்ட வடிவில் உங்கள் கைகளை வைத்து முகத்தை நன்றாக மசாஜ் செய்ய வேண்டும். அடுத்ததாக நமக்கு தேவைப்படுவது தேன். இந்த தேனை முகத்தில் எல்லா இடங்களிலும் தடவி விட்டு மெல்லியதாக இருக்கும் காட்டன் துணியை அப்படியே முகத்தில் போட்டு ஐந்து நிமிடம் வைத்து விடுங்கள்.

- Advertisement -

ஐந்து நிமிடம் கழித்து காட்டன் துணியை எடுத்து அந்த துணியாலயே முகத்தை நன்றாக துடித்து விடுங்கள். அவ்வளவுதான் முகம் பளிச்சென்று பிரகாசமாக மாறிவிடும். அவசரமான சூழ்நிலையில் மேக்கப், பேசியல் செய்ய முடியாத பட்சத்தில் இந்த இரண்டு பொருட்களை மட்டுமே நாம் வைத்து நம்முடைய முகத்தை ஜொலிக்க வைக்க முடியும்.

இது இயற்கையான பொருட்கள் என்பதாலும் இதில் பல அற்புதமான நல்ல குணங்கள் இருப்பதாலும் நம் முகத்திற்கு எந்தவித பாதிப்பும் இருக்காது. பேசியல், மேக்கப் போடுவதற்கு பதிலாக இந்த இரண்டு பொருட்களை மட்டும் தொடர்ச்சியாக நாம் உபயோகப்படுத்தினோம் என்றால் நம் முகம் என்றுமே பொலிவுடன் இருக்கும்.

இதையும் படிக்கலாமே: பொலிவான சருமத்தை பெற ஃபேஸ் பேக்
மிகவும் எளிமையான அனைவரின் இல்லங்களிலும் இருக்கக்கூடிய இந்த இரண்டு பொருட்களை மட்டுமே பயன்படுத்தி நம் முகத்தை பொலிவுடன் அழகாக வைத்துக் கொள்வோம்.

- Advertisement -