இன்ஸ்டன்ட்டாக அடை தோசை மாவு இப்படி தயாரிச்சு பாருங்க, பஞ்சு போல டேஸ்டியான ஆரோக்கியமான கலர் அடை தயார்! ஒருமுறை செஞ்சா திரும்பத் திரும்ப கட்டாயமா செய்வீங்க.

ravai-adai-dosai
- Advertisement -

அடை தோசை என்பது ரொம்பவும் கஷ்டமான டிஷ் அல்ல! இன்ஸ்டன்ட் ஆக கூட சூப்பரான ஆரோக்கியமான ஹெல்த்தி அடை தயாரிக்க முடியும். கேரட், பீட்ரூட் எல்லாம் சேர்த்து ரவையுடன் செய்யப்படும் இந்த அடை தோசை அற்புதமான நிறத்திலும், சுவையிலும் இருக்கப் போகிறது. கலர் அடை செய்வதற்கு அதிக நேரமும் எடுக்காது. சட்டுன்னு சூப்பரான கலர் அடை தோசை எப்படி சுடுவது? என்பதை நாமும் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

இன்ஸ்டன்ட் கலர் அடை செய்ய தேவையான பொருட்கள்:
ரவை – ஒரு கப், உப்பு – தேவையான அளவு, அரிசி மாவு – கால் கப், தயிர் – கால் கப், சீரகம் – ஒரு டீஸ்பூன், நறுக்கிய வெங்காயம் – ஒரு கைப்பிடி, நெருக்கிய கறிவேப்பிலை – சிறிதளவு, பச்சை மிளகாய் – 1, துருவிய கேரட் – அரை கைப்பிடி, துருவிய பீட்ரூட் – அரை கைப்பிடி, மல்லித்தழை – சிறிதளவு, மஞ்சள் தூள் – கால் ஸ்பூன்.

- Advertisement -

இன்ஸ்டன்ட் கலர் அடை செய்முறை விளக்கம்:
இன்ஸ்டன்ட் கலர் அடை சுடுவதற்கு முதலில் தேவையான எல்லா பொருட்களையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். ஒரு சிறிய கேரட், ஒரு சிறிய பீட்ரூட் துண்டு எடுத்து தோல் சீவி நைசாக துருவி எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். ஒரு கப் அளவிற்கு ரவையை எடுத்து லேசாக வாணலியில் போட்டு வறுத்து எடுத்துக் கொள்ளுங்கள். இரண்டு நிமிடம் வறுத்து எடுத்தால் போதும். வறுத்த ரவையுடன் தேவையான அளவிற்கு உப்பு போட்டு கலந்து கொள்ளுங்கள்.

பின்னர் இதனுடன் கால் கப் அளவிற்கு அரிசி மாவு மற்றும் கால் கப் அளவிற்கு புளித்த தயிர் அல்லது புளிக்காத தயிர் ஏதாவது ஒன்றை சேர்த்து ரவை ஊறுவதற்கு கால் கப் அளவிற்கு தண்ணீர் ஊற்றி நன்கு கலந்து வைத்துக் கொள்ளுங்கள். 10 நிமிடம் அப்படியே ஊற விட்டால் ரவை முழுவதுமாக உறிஞ்சி கொண்டிருக்கும். பின்னர் இதனுடன் சீரகத்தை கைகளில் லேசாக தேய்த்து சேர்த்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

எவ்வளவு பொடியாக நறுக்க முடியுமோ அவ்வளவு பொடியாக அடை தோசை சுடுவதற்கு ஏற்ப கருவேப்பிலை மற்றும் கொத்தமல்லி தழைகளை சுத்தம் செய்து நறுக்கி சேருங்கள். பின்னர் இதனுடன் காரத்திற்கு ஒன்று பச்சை மிளகாயை காம்பு நீக்கி பொடிப்பொடியாக நறுக்கி சேருங்கள். பின்னர் ஒரு கைப்பிடி அளவிற்கு பெரிய வெங்காயத்தை பொடி பொடியாக நறுக்கி சேருங்கள். கடைசியாக நீங்கள் துருவி வைத்துள்ள கேரட் மற்றும் பீட்ரூட் ஆகியவற்றை சேர்த்து, கொஞ்சம் போல் மஞ்சள் தூள் போட்டு தேவையான அளவிற்கு தண்ணீர் ஊற்றி அடை மாவு பதத்திற்கு சரியாக கலந்து கொள்ளுங்கள்.

பின்னர் அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு தோசை கல்லை வையுங்கள். கல் சூடானதும் எண்ணெய் தேய்த்து அதில் அடை போல கெட்டியாக மாவை எடுத்து பரப்பி விடுங்கள். பிறகு நல்லெண்ணை அல்லது நெய் ஏதாவது ஒன்றை சுற்றிலும் விட்டு பொன்முறுவலாக வெந்து சிவக்க வேக எடுத்து பரிமாற வேண்டியதுதான். இந்த சூப்பரான கலர் அடை தோசையுடன் சுட சுட சாம்பார் அல்லது கெட்டி சட்னி வைத்து சாப்பிட்டால் அவ்வளவு அருமையாக இருக்கும். ஹெல்தியான இந்த கலர் அடையை நீங்களும் இதே மாதிரி செஞ்சு ட்ரை பண்ணி அசத்திடுங்க.

- Advertisement -