சதா இட்லி, தோசைக்கு எப்பொழுதும் மாவு அரைத்து அரைத்து போரடித்து போனவர்கள் இப்படி ஒரு முறை செஞ்சு வச்சுக்கிட்டு பாருங்க. இன்ஸ்டன்ட் ஆக தேவையான சமயத்தில் சட்டுனு கலந்து தோசை வார்த்து விடலாம். நேரத்தையும், பணத்தையும் மிச்ச படுத்தி கொடுக்கும் இந்த இன்ஸ்டன்ட் இட்லி, தோசை மாவு ரெசிபி எப்படி தயார் செய்து வைப்பீர்கள்? என்பதைத் தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.
அரிசி, உளுந்தை ஊற வைத்து இரண்டு மணி நேரம் அதை கிரைண்டரில் போட்டு ஆட்டி எடுத்து, புளிக்க வைத்து பின்னர் தோசை, இட்லி எல்லாம் சுடுவது காலம் காலமாக செய்து வரும் ஒரு பழக்க வழக்கம் ஆகும். இந்த இட்லி, உளுந்து காம்பினேஷன் என்பது ரொம்பவே பிடித்தமானதாக, சுலபமானதாக இருக்கிறது. அந்த வகையில் கிரைண்டரில் போட்டு, மிக்ஸியில் போட்டு இட்லி மாவை தயாரிக்காமல் எப்படி கைகளால் வீட்டில் இட்லி, தோசைக்கு மாவு அரைக்க போகிறோம்?
இன்ஸ்டன்ட் இட்லி மாவு செய்வதற்கு முதலில் இட்லி அரிசி, உளுந்து ஆகியவற்றை மாவாக அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும். இந்த இட்லி இன்ஸ்டன்ட் மாவு செய்வதற்கு தரமான இட்லி அரிசி 4 கிலோ அளவிற்கு வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். அதே போல உளுந்து ஒரு கிலோ வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். நான்கு கிலோ அரிசிக்கு, ஒரு கிலோ உளுந்து சரியாக இருக்கும்.
ரேஷன் அரிசி மற்றும் உளுந்திலும் இதை செய்யலாம். ரேஷன் அரிசி, உளுந்து கொண்டு செய்யும் பொழுது கொஞ்சம் உப்பு போட்டு நன்கு ஐந்தாறு முறை தேய்த்து கழுவி சுத்தம் செய்து கொள்ள வேண்டும். அப்போது தான் மாவு வெள்ளையாக வரும். இப்போது அரிசி மற்றும் உளுந்தை கழுவி சுத்தம் செய்து கொஞ்சம் கூட தண்ணீர் இல்லாமல் வடிகட்டி எடுத்துக் கொள்ளுங்கள். பின்னர் இதை காட்டன் துணியில் போட்டு ஈரம் போக வெயிலில் காய வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். குறைந்தது இரண்டு நாட்கள் ஆவது வெயிலில் நன்கு காய்ந்து மொடமொடவென ஆக வேண்டும்.
அதன் பிறகு தனித்தனியாக மெஷினில் கொடுத்து அரைத்து கொள்ள வேண்டும். மெஷினில் அரிசி அரைத்திருந்தால் நீங்கள் அரைக்க கொடுங்கள். கோதுமை, வரகு அரைத்திருந்தால் இட்லி சாஃப்டாக வராது. அரைத்து எடுத்த இந்த மாவினை கொஞ்சம் கூட சூடு இல்லாமல் நன்கு ஆற வைத்துக் கொள்ளுங்கள். அதன் பிறகு ஒரு ஏர் டைட் கண்டெய்னரில் ரெண்டு மாவையும் ஒன்றாக கலந்து எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். இதை எப்பொழுதெல்லாம் தேவையோ அப்பொழுதெல்லாம் எடுத்து பயன்படுத்திக் கொள்ளலாம். உங்களுக்கு தேவையான அளவிற்கு மாவை எடுத்து அதை இட்லி மாவு போல கல் உப்பு சேர்த்து தண்ணீர் ஊற்றி தேவையான பதத்தில் கெட்டியாக கரைத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
இதையும் படிக்கலாமே:
கருவேப்பிலை போட்டு இப்படி ஒருமுறை தேங்காய் துவையல் அரைச்சு பாருங்க அருமையாக இருக்கும்! 5 நிமிடத்தில் சுவையான தேங்காய் துவையல் அரைப்பது எப்படி?
இரவு இது போல கரைத்து வைத்தால், காலையில் நன்கு புளித்து விடும். அவ்வளவுதான், இந்த மாவை அதிகம் போட்டு கிண்டாமல் மேலோட்டமாக கலந்து விட்டு இட்லி ஊற்றி எடுத்து பாருங்கள், பஞ்சு போல சாஃப்டான இட்லி உங்களுக்கும் இந்த மாவில் கிடைத்துவிடும். இனி 6 மாதம் ஒரு முறை இது போல மாவு அரைத்து வைத்துக் கொண்டால் போதும், இட்லி, தோசை, பணியாரம் என்று சுலபமாக சுட்டு அசத்தி விடலாம்!