இவ்வளவு ஈஸியா இன்ஸ்டன்ட் இட்லி மாவு வீட்டிலேயே ரெடி பண்ணலான்னு தெரிஞ்சா, இனி நீங்க அரிசி ஊற வெச்சு, கிரைண்டரில் மாவு அரைச்சு டைம் வேஸ்ட் பண்ண மாட்டீங்க.

idli
- Advertisement -

அப்போதெல்லாம் வீட்டில் இட்லி மாவு அரைப்பது என்றால், அதிற்கென தனியாக ஒரு நாள் ஒதுக்கி விடுவார்கள். காலையிலே அரிசி, உளுந்து இரண்டையும் கழுவி அதை நான்கு, ஐந்து மணி நேரம் ஊற வைத்து, பின்பு கிரைண்டரில் ஒவ்வொன்றாக போட்டு அரைத்து கரைத்து வைப்பதற்குள்ளாக வீட்டில் இருக்கும் பெண்மணிகளுக்கு ஒரு நாள் முழுவதும் போய்விடும். இன்றைய காலகட்டத்தில் பெண்கள் வேலைக்கு செல்வதால் இப்படி வீட்டில் இட்லி மாவு அரைக்க நேரம் கிடைப்பதில்லை, ஆகையால் அனைவரும் பாக்கெட் மாவுகளையே அதிகம் வாங்குகின்றனர்.

இது உடலுக்கு நல்லதா கெட்டதா என்பதெல்லாம் அடுத்த பிரச்சனை. ஆனால் யாருக்கும் வீட்டில் அரைக்க நேரமில்லை என்பது மட்டும் தான் உண்மை. ஒரு முறை அரைத்து வைத்து ஆறு மாதம் ஆனால் கூட கெட்டுப் போகாத அளவுக்கு இன்ஸ்டன்ட் இட்லி மாவு நல்ல ஆரோக்கியமான முறையில் நம் வீட்டிலேயே தயார் செய்துவிடலாம் என்றால் இதைவிட வேறென்ன வேண்டும். வாங்க அதை எப்படி செய்யறதுன்னு தெரிஞ்சுக்கலாம்.

- Advertisement -

தேவையான பொருள்: இட்லி அரிசி – 4 கப், உளுந்து – 1 கப், வெந்தயம் – 1 டீஸ்பூன், ஜவ்வரிசி – 1/4 கப்.

(இதற்கு நீங்கள் டம்ளர் அல்லது கப், அரிசி அளக்கும் உழக்கு என எதை வேண்டுமானாலும் உபயோகப்படுத்தலாம். ஆனால் எதில் அரிசி அளக்கிறீர்களோ, அதே கொண்டு மற்ற பொருட்களையும் அளக்க வேண்டும். அதை மட்டும் சற்று கவனமாக பார்த்துக் கொள்ளுங்கள்).

- Advertisement -

முதலில் ஒரு பாத்திரத்தில் 4 கப் இட்லி அரிசியை சேர்த்து தண்ணீர் ஊற்றி இரண்டு, மூன்று முறை நன்றாக கழுவி எடுத்துக் கொள்ளுங்கள். பிறகு ஒரு கால் கப் அளவு ஜவ்வரிசி எடுத்து அதையும் கழுவி, இந்த இட்லி அரிசியில் சேர்த்து விடுங்கள். பிறகு தண்ணீரை நன்றாக வடித்து விட்டு, இரண்டையும் நல்ல வெயிலில் காட்டன் துணியில் கொட்டி காய வைத்து விடுங்கள். அரிசி நன்றாக காய வேண்டும். அது மிகவும் முக்கியம்.

பிறகு ஒரு கப் உளுந்து, ஒரு டேபிள் ஸ்பூன் வெந்தயம், எடுத்துக் கொள்ளுங்கள். இதை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு நைசாக பவுடராக்கிக் கொள்ளுங்கள். (மிக்ஸி ஜார் சூடாகாமல் சற்று நிறுத்தி நிறுத்தி அரைத்துக் கொள்ளுங்கள்). அதன் பிறகு காய்ந்த அரிசியும், ஜவ்வரிசியும் ஜாரில் போட்டு அரைத்துக் கொள்ளுங்கள். இதை மிக நைசாக அரைக்க வேண்டாம். சிறு ரவை பதத்துக்கு அரைத்துக் கொள்ளுங்கள்.

இப்போது ஒரு பாத்திரத்தில் அரிசி மாவையும், உளுந்து மாவையும் ஒன்றாக கொட்டி நன்றாக கலந்து விடுங்கள். உங்களுக்கு எவ்வளவு தேவையோ அந்த அளவிற்கு மாவு எடுத்து உப்பு போட்டு கைகளால் கரைத்து வைத்து விடுங்கள். இரவு இட்லி ஊற்ற வேண்டும் என்றால் காலையிலே கரைத்து விடுங்கள், காலையில் உற்ற வேண்டும் என்றால் இரவே கரைத்து வைத்து விடுங்கள். அவ்வளவு தான். மாவு புளித்து பொங்கி வந்திருக்கும். மாவை லேசாக கலந்து விட்டு நீங்கள் எப்போதும் போல இட்லி ஊற்ற வேண்டியது தான். உங்களுக்கு இந்த குறிப்பு பிடிச்சிருந்தா உங்க வீட்ல ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -