குழிப்பணியாரம் சாப்பிடணும் ஆசைப்பட்டா மாவரைச்சி புளிக்க வைக்கணும் என்கிற அவசியம் இல்லை. இரண்டு உருளைக்கிழங்கு இருந்தா சட்டுனு இப்படி குழிப்பணியாரம் செஞ்சு சாப்பிடுங்க.

kuzhipaniyaram
- Advertisement -

நம்முடைய பாரம்பரிய உணவுகளில் ஒன்று தான் இந்த குழிபணியாரம். இதில் எத்தனையோ வகைகள் உண்டு. இந்த குழிப்பணியாரத்தை பாரம்பரிய முறையில் செய்ய வேண்டும் எனில் பருப்பு அரிசி எல்லாம் அதிக நேரம் ஊற வைத்து செய்ய வேண்டும். இப்போதெல்லாம் இன்ஸ்டன்டாக உடனே செய்யக் கூடிய பல வகையான குழிப்பணியாரங்கள் வந்து விட்டது. அந்த வகையில் உருளைக்கிழங்கை வைத்து இன்ஸ்டன்டாக செய்யக் கூடிய ஒரு குழிப்பணியார ரெசிபியை தான் இப்போது தெரிந்து கொள்ளப் போகிறோம்.

செய்முறை

இந்த குழி பணியாரம் செய்வதற்கு முதலில் ஒரு டம்ளர் இட்லி அரிசி எடுத்து இரண்டு முறை தண்ணீர் ஊற்றி சுத்தமாக கழுவிய பின்பு ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி இரண்டு மணி நேரம் ஊற விடுங்கள். இந்த நேரத்தில் இரண்டு மீடியம் சைஸ் உருளைக்கிழங்கை வேக வைத்து தோல் உரித்து எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

அடுத்து மிக்ஸி ஜாரில் நாம் ஊற வைத்த அரிசியை தண்ணீர் இல்லாமல் சுத்தமாக வடித்து எடுத்துக் கொள்ளுங்கள். அத்துடன் உருளைக்கிழங்கை நன்றாக மசித்து சேர்த்து விடுங்கள். இதை அரைக்க கால் கப் அதிகம் புளிக்காத தயிரை ஊற்றி கொள்ளுங்கள். ஒரு வேளை தண்ணீர் போகவில்லை என்றால் அரிசி ஊற வைத்த தண்ணீரையே ஊற்றி கொஞ்சம் கெட்டியாகவே அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.

இப்போது அரைத்த மாவை ஒரு பவுலுக்கு மாற்றிக் அரை ஸ்பூன் உப்பு சேர்த்து மாவை நன்றாக கலந்து வைத்து விடுங்கள். அதன் பிறகு இந்த மாவு அப்படியே இருக்கட்டும். இதற்குள் இதற்கு தேவையான வெங்காயம் மற்ற பொருட்களை எல்லாம் அரிந்து எடுத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

அதற்கு இதில் ஒரு மீடியம் சைஸ் வெங்காயத்தை பொடியாக நறுக்கி சேர்த்துக் கொள்ளுங்கள் இத்துடன் இரண்டு பச்சை மிளகாய், ஒரு சிறிய துண்டு இஞ்சி கறிவேப்பிலை கொத்தமல்லியை மட்டும் கொஞ்சம் அதிகமாக சேர்த்து இவையெல்லாம் பொடியாக நறுக்கி போட்டுக் கொள்ளுங்கள். இத்துடன் ஒரு கேரட்டை துருவி அதையும் இத்துடன் சேர்த்த பின் மாவை நன்றாக கலந்து கொள்ளுங்கள்.

இப்போது அடுப்பில் பணியார சட்டி வைத்து நாம் தயார் செய்த மாவில் இருந்து கொஞ்சமாக எடுத்து குழியில் ஊற்றிக் கொள்ளுங்கள். இதற்கு எண்ணெய் நெய் எது வேண்டுமானாலும் சேர்த்துக் கொள்ளலாம். இது ஒரு புறம் நன்றாக வெந்த பிறகு மறுபுறம் மாற்றிக் திருப்பி போட்டு கொள்ளுங்கள். இந்த பணியாரம் சுடும் போது அடுப்பை மீடியம் பிளேமில் வைத்துக் கொள்ளுங்கள்.

இதையும் படிக்கலாமே: வெங்காயம் தக்காளி காய்கறி எதுவும் சேர்க்காம சப்பாத்தி பூரி பரோட்டா நாண் எல்லாத்துக்கும் ஏற்ற பிளைன் சால்னா . இப்படி ஒரு சிம்பிள் ரெசிபியை இத்தனை நாள் தெரிஞ்சிக்காம விட்டுட்டோமே.

பணியாரம் இரண்டு புறமும் நன்றாக சிவந்து வெந்த பிறகு ஒரு தட்டிற்கு மாற்றிக் கொள்ளுங்கள். இதற்கு கார சட்னி, பொட்டுக்கடலை சட்னி, என எதை சேர்த்து சாப்பிட்டாலும் நன்றாக இருக்கும். நீங்களும் ஒரு முறை இந்த சிம்பிளான பணியார ரெசிபியை கண்டிப்பா ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -