தோசை மாவு காலி ஆயிடுச்சா? 1 கப் ரவை இருந்தா போதும், 10 நிமிஷத்துல இப்படி இன்ஸ்டன்ட் தோசை மாவு ரெடி பண்ணி சாப்பிடலாமே!

instant-ravai-dosai
- Advertisement -

தோசை மாவு இல்லாத சமயத்தில் சட்டென இன்ஸ்டண்ட் ஆக ஒரு தோசை மாவு ரெடி செய்ய ஒரு கப் ரவை இருந்தாலே போதும். திடீரென தோசை செய்வதற்கு இந்த ரவை தோசை மாவு நிச்சயம் ரொம்பவே உபயோகமாக இருக்கும். அந்த சமயத்தில் இட்லி மாவு, தோசை மாவு எல்லாம் தேட வேண்டிய அவசியம் இல்லை. இதன் சுவையும் சூப்பராக இருக்கும். இதற்கு தேவையான பொருட்களும் மிக மிக குறைவு தான். எனவே இந்த இன்ஸ்டன்ட் ரவா தோசை மாவு எப்படி செய்வது? என்பதை நாமும் தெரிந்து கொள்ள தொடர்ந்து பதிவை நோக்கி பயணிப்போம்.

ravai

ரவை தோசை மாவு செய்ய தேவையான பொருட்கள்:
வறுத்த ரவை – ஒரு கப், தேங்காய் துருவல் – ஒரு கப், சின்ன வெங்காயம் – ஆறு, சீரகம் – ஒரு டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு, கறிவேப்பிலை – ஒரு கொத்து, தண்ணீர் – ஒன்றரை கப்.

- Advertisement -

ரவை தோசை மாவு செய்முறை விளக்கம்:
எப்போதும் ரவையை வாங்கி வந்தவுடன் அதனை கையோடு ஒரு வாணலியில சேர்த்து குறைந்த தீயில் வைத்து நன்கு வறுத்து ஒரு டப்பாவில் அடைத்து வைத்துக் கொண்டால் தேவைப்படும் பொழுது சட்டென இது போல் தோசை செய்து சாப்பிடலாம். வறுத்த ரவை, வறுக்காத ரவை எதுவாக இருந்தாலும் பரவாயில்லை, ஆனால் வறுத்த ரவையாக இருந்தால் இன்னும் சூப்பராக இருக்கும். ஒரு கப் அளவிற்கு வறுத்த ரவையை எடுத்துக் கொள்ளுங்கள்.

rava-dosai

இப்போது ஒரு மிக்ஸி ஜாரை கழுவி அதில் வறுத்த ரவையை சேர்த்துக் கொள்ள வேண்டும். பின்னர் அதனுடன் அரை மூடி அளவிற்கு தேங்காயை பூ போல துருவி எடுத்துக் கொள்ளுங்கள். இந்த தேங்காய் துருவலையும் சேர்த்துக் கொள்ளுங்கள். பின்னர் சின்ன வெங்காயத்தை தோல் உரித்து அப்படியே சேர்த்துக் கொள்ளுங்கள். ஒரு ஸ்பூன் சீரகம் சேர்த்துக் கலந்து கொள்ளுங்கள். பின்னர் தேவையான அளவிற்கு உப்பு போட்டு கொள்ளுங்கள்.

- Advertisement -

ஒரு கொத்து கறிவேப்பிலையை கழுவி உருவி அதனை பொடிப்பொடியாக நறுக்கி இதனுடன் சேர்த்துக் கொள்ளுங்கள். பின்னர் அரை கப் அளவிற்கு முதலில் கொஞ்சமாக தண்ணீரை ஊற்றி மிக்ஸியை இயக்கி மாவை நைசாக அரைத்துக் கொள்ளுங்கள். அரைத்த இந்த மாவினை ஒரு பாத்திரத்திற்கு மாற்றிக் கொள்ளுங்கள். பின்னர் மிக்ஸி ஜாரை கழுவி அந்த தண்ணீரையும் இதில் சேர்த்துக் கொள்ளுங்கள். தோசை மாவு பதத்திற்கு மாவு இருக்க வேண்டும்.

vendhaya-dosai4

பின்னர் அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு தோசைக்கல்லை வையுங்கள். தோசைக்கல் சூடேறியதும் மிதமான தீயில் வைத்து இந்த தோசை மாவை மெல்லியதாக ஊற்றி சுற்றிலும் நல்லெண்ணெய் விட்டு மொறுமொறுவென்று சுட்டு எடுத்தால் சூப்பராக இருக்கும். அல்லது ‘கல் தோசை’ போல தடிமனாக ஊற்றி மேலே கொஞ்சம் மல்லி தழை தூவி சுட்டு எடுத்தால் ரவை கல் தோசை ரெடி! இதே முறையில் நீங்களும் இன்ஸ்டன்ட் ரவை தோசை செய்து பார்த்து அசத்துங்கள்.

- Advertisement -