தேங்காய் எடுக்க ரொம்ப கஷ்டப்படுறீங்களா? இப்படி செஞ்சு பாருங்க ஒரு வாரத்துக்கு தேங்காய் பிரச்சனை இருக்கவே இருக்காது!

coconut-thuruval
- Advertisement -

தேங்காயை உடைப்பது முதல் அதை எடுத்து துருவுவது வரை பலருக்கும் ஒரு பெரிய போராட்டமாகவே இருந்து வருகிறது. தேங்காயை சரியான இடத்தில் வைத்து அடித்தால் கொஞ்சம் கூட அளவு மாறாமல் சரியாக நேர்த்தியாக இரண்டு பக்கமும் உடைந்து விடும். அதே போல தேங்காயை இந்த முறையில் நீங்கள் எடுத்து துருவி பதப்படுத்தி வைத்தால் ஒரு வாரம் வரை தேங்காய் துருவலுக்கு அதனுடன் போராட வேண்டிய அவசியமில்லை. அதை எப்படி செய்வது? என்பதைத் தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

முதலில் தேங்காயை தட்டி பார்த்து வாங்க வேண்டும் என்று கூறுவார்கள். தேங்காயின் சத்தத்தை வைத்தே அது முற்றிய தேங்காயா? இல்லை இளந்தேங்காயா? என்று கண்டுபிடித்து விடலாம். இப்படி வாங்கும் தேங்காயின் முக்கண் இருக்கும் பகுதிக்கு நேராக ஒரு கோடு போன்ற அமைப்பு இருக்கும். இந்த கோட்டிற்கு மேலே ஒரு தட்டு தட்டினால் போதும், சட்டென தேங்காய் இரண்டு துண்டாக சரியான அளவுகளில் உடைந்து விடும்.

- Advertisement -

பிறகு இந்த தேங்காய் இரண்டு மூடிகளையும் ஒரு இட்லி அவிக்கும் பாத்திரத்தில் வைத்து 10 நிமிடம் இட்லி அவிப்பது போல் தண்ணீரை அடியில் நிரப்பி மேலே இருக்கும் தட்டில் தேங்காய் மூடிகளை வைத்து அவித்து எடுத்தால் ரொம்பவே சுலபமாக ஓட்டையும், தேங்காயையும் தனியாக பிரித்து எடுத்து விடலாம். ஓட்டையும், தேங்காயையும் தனியாக பிரித்து எடுக்க இனி அவ்வளவு சிரமப்பட வேண்டிய அவசியம் இல்லை. இப்படி அவித்து எடுத்த பின்பு ஒரு கரண்டியின் பின் முனை அல்லது தேங்காய் எடுக்கும் கருவியை கொண்டு எடுத்துப் பார்த்தால் எளிதாக இரண்டும் தனித்தனியாக வந்துவிடும்.

நீங்கள் இப்படி தனியாக பிரித்து எடுத்த பின்பு தேங்காய் உடைய பின்பகுதியில் இருக்கும் கருப்பு நிற தோல் இருக்கிறதா? இல்லையா? என்பதை பாருங்கள், அப்படி இல்லை என்றால் விட்டுவிடலாம். தேங்காய் தோல் இருந்தால் அதனை நீங்கள் கேரட் மற்றும் உருளைகிழங்கு தோலை எப்படி சீவி எடுப்பீர்களோ அதே போல பீலர்(peeler) கொண்டு எடுத்தால் அழகாக வந்து விடும்.

- Advertisement -

அதன் பிறகு நீங்கள் சிறு சிறு துண்டுகளாக வெட்டி மிக்சியில் போட்டு ஒரு சுற்று சுற்றி எடுத்தால் போதும், ரொம்பவே மிருதுவான தேங்காய்ப்பூ கிடைத்துவிடும். இந்த தேங்காய் பூவை எத்தனை நாட்கள் வேண்டுமானாலும் நீங்கள் ஃப்ரிட்ஜில் ஸ்டோர் செய்து வைத்துக் கொள்ளலாம். உங்களுக்கு தேவையான பொழுது எடுத்து சமையலில் நீங்கள் பயன்படுத்தி கொள்ளலாம். அன்றாட சமையலில் தேங்காய் பூ இல்லாமல் கடினமாக இருக்கும்.

எனவே இது போல் ஒரு முறை நீங்கள் செய்து வைத்தால், வாரம் முழுவதும் தேங்காயை உடைத்து துருவ செய்ய வேண்டிய அவசியமில்லை மேலும் தேங்காய் அழுகிப் போகாமல் பாதுகாக்க வேண்டிய அவசியமும் இல்லை. பொரியல் வைக்கிறீர்கள் என்றால் சட்டென அதிலிருந்து எடுத்து கொஞ்சம் தூவி கொண்டால் முடிந்துவிடும். எந்த இடத்திலும் நீங்கள் தேங்காயை கை படாமல் பார்த்துக் கொள்ளுங்கள். அப்போது தான் நீண்ட நாட்கள் தேங்காய் கெட்டுப் போகாமல் அப்படியே பிரஷ்ஷாக இருக்கும்.

- Advertisement -