புளியோதரை செய்ய இனி புளி ஊற வைக்க வேண்டாம். இந்த இன்ஸ்டன்ட் பொடியை செய்து வைத்தால் போதும். ஐந்தே நிமிடத்தில் கோவில் புளியோதரை தயாராகிவிடும்

podi
- Advertisement -

என்னதான் பிரியாணி, ஃப்ரைட் ரைஸ் இது போன்ற உணவு வகைகள் இருந்தாலும், இன்று வரையிலும் தயிர் சாதம், புளி சாதம், லெமன் சாதம் இந்த சாதத்திற்கு போட்டி போடுபவர்கள் என்று பலரும் இருக்கத்தான் செய்கிறார்கள். இதன் சுவை என்றும் மாறாமல் எப்பொழுதும் ஒரே மாதிரியாக இருக்கும். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் ஒரு சுவை இவற்றின் சுவையாகும். இவை அனைத்திலும் ஒருவித புளிப்புச் சுவை தான் ஒரே மாதிரியாக இருக்கும். அவ்வாறு அனைவரும் விரும்பி சாப்பிடும் உணவு வகைகளில் ஒன்றான புனிசாதத்தை பலரும் கோவில்களில் வாங்கி சுவைப்பதுண்டு. கோவில் புளியோதரையின் சுவையில் வீட்டிலும் புளி சாதம் சமைக்க வேண்டும் என்ற ஆசை பலருக்கும் இருக்கிறது. இதனை விரைவாகவும், சுவையாகவும் செய்வதற்க்கு இன்ஸ்டன்ட் புளியோதரை பொடியை ஒரு முறை அரைத்து வைத்துக்கொண்டால் போதும். ஒரு மாதம் வரையிலும் இதனை ஃபிரிட்ஜில் வைத்து பயன்படுத்த, நினைத்த உடனே ஐந்தே நிமிடத்தில் புளி சாதம் செய்து சாப்பிடலாம். வாருங்கள் இதனை எவ்வாறு செய்யலாம் என்பதல இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்:
புளி – 100 கிராம், கடலை பருப்பு – 50 கிராம், உளுத்தம் பருப்பு – 50 கிராம், தனியா – 2 ஸ்பூன், வெந்தயம் – ஒன்றரை ஸ்பூன், எள் – 3 ஸ்பூன், மிளகு – ஒரு ஸ்பூன், சீரகம் – ஒரு ஸ்பூன், வரமிளகாய் – 20, கறிவேப்பிலை – ஒரு கைப்பிடி, மஞ்சள் தூள் – ஒரு ஒரு ஸ்பூன், பெருங்காயத்தூள் – ஒரு ஸ்பூன், எண்ணெய் – அரை ஸ்பூன்.

- Advertisement -

செய்முறை:
முதலில் ஒரு சில்வர் பேனை அடுப்பின் மீது வைக்க வேண்டும். அது நன்றாகக் காய்ந்ததும் அதில் கடலைப்பருப்பை சேர்த்து பொன்னிறமாக வறுத்து, ஒரு தட்டிற்க்கு மாற்ற வேண்டும். அதேபோல் உளுத்தம் பருப்பையும் சேர்த்து வறுத்தெடுக்க வேண்டும். பின்னர் இரண்டு ஸ்பூன் தனியா சேர்த்து வறுத்தெடுக்க வேண்டும்.

பின்னர் மிளகு, சீரகம், வெந்தயம் மூன்றையும் சேர்த்து ஒன்றாக வறுத்து, தட்டிற்க்கு மாற்ற வேண்டும். பிறகு இதில் ஒரு கைப்பிடி கறிவேப்பிலை சேர்த்து நன்றாக வறுத்து கொள்ள வேண்டும். அவ்வாறு 3 ஸ்பூன் எள்ளையும் சேர்த்து நன்றாக வறுக்க வேண்டும். பின்னர் அரை ஸ்பூன் எண்ணெய் சேர்த்து, அதில் 20 வரமிளகாய் சேர்த்து நன்றாக வறுத்து கொள்ள வேண்டும்.

பிறகு 50 கிராம் புளியை கொட்டைகள் மற்றும் நார் இல்லாமல் சுத்தம் செய்து, சிறிது சிறிதாக கிள்ளி வைக்க வேண்டும். பின்னர் பேனில் 2 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, புளியை அதில் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். பிறகு இவை அனைத்தையும் ஆறவைத்து, ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து, அதனுடன் மஞ்சள் தூள் மற்றும் பெருங்காயத் தூள் சேர்த்து, பொடியாக அரைத்து கொள்ள வேண்டும். அவ்வளவுதான் இன்ஸ்டன்ட் புளியோதரைப் பொடி தயாராகிவிட்டது. கடாயில் எண்ணெய் ஊற்றி, கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, வரமிளகாய் சேர்த்து தாளித்து, அதனுடன் ஒரு ஸ்பூன் புளியோதரை பொடி, உப்பு மற்றும் ஒரு கப் சாதம் சேர்த்துக் கிளறினால் போதும். சுவையான புளியோதரை சாதம் உடனே தயாராகிவிடும்.

- Advertisement -