இந்த வெங்காய தக்காளி பேஸ்ட்டை ஒரு முறை செய்து வைத்துக் கொண்டால் ஒரு மாதம் வரை கெட்டுப் போகாது இதனை தேவைப்படும் பொழுதெல்லாம் கறி சுவையில் அணைத்து விதமான காய்கறிகளையும் சமைத்து விடலாம்

onion
- Advertisement -

பூனா மசாலா, கறி பேஸ்ட் என்றும் அழைக்கப்படும் இது, பெரும்பாலான இந்திய கறிகளுக்கு சரியான மசாலாவாகும். இதனை ஒரு முறை சமைப்பதற்கு நேரம் அதிகமாக செலவாகும். ஆனால் இதனை செய்து வைத்துக் கொண்டால் தேவைப்படும் போதெல்லாம் பயன்படுத்திக் கொள்ளலாம். நீங்கள் விரும்பினால் இந்த மசாலாவை ஒரு குக்கரில் சமைப்பதால் அதிக நேரம் மிச்சமாகும். இந்த கறி மசாலாவை குளிர்சாதன பெட்டியில் தயார் செய்து வைத்திருப்பது, உங்கள் சமையலையே மிகவும் எளிதாக மாற்றி விடும். ஏனெனில் இது நேரத்தை மிச்சப்படுத்துவதோடு மட்டுமல்லாமல் உங்கள் சமையலை விரைவாக செய்வதற்கும் உதவியாக இருக்கிறது. வாருங்கள் இந்த தக்காளி, வெங்காயம் பேஸ்ட்டை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள் : சமையல் எண்ணெய் – 1 1/2 ஸ்பூன், வெண்ணெய் – 1 ஸ்பூன், பிரியாணி இலை – 1, கிராம்பு – 6, ஏலக்காய் – 6, இலவங்கப்பட்டை குச்சி – 2, சீரகம் – 1 ஸ்பூன், வெங்காயம் – 5, இஞ்சி பெரிய துண்டு – ஒன்று, சிறிய பல் பூண்டு – 10,
தக்காளி – 4, முந்திரி – 20, மஞ்சள் தூள் – 1/4 ஸ்பூன், காஷ்மீரி மிளகாய் தூள் – 1 ஸ்பூன், கொத்தமல்லி தூள் – 1ஸ்பூன், உப்பு – 1ஸ்பூன்,

- Advertisement -

செய்முறை:
ஒரு கனமான பாத்திரத்தில் 4 டேபிள் ஸ்பூன் எண்ணெயை சூடாக்க வேண்டும். பிறகு 6 கிராம்பு, 6 ஏலக்காய், 2 அங்குல அளவு இலவங்கப்பட்டை குச்சி, 1பிரியாணி இலை, மற்றும் 1ஸ்பூன் சீரகம் ஆகியவற்றை குறைந்த தீயில் வாசனை வரை வதக்க வேண்டும். பின்னர் 2 கப் மெல்லியதாக வெட்டப்பட்ட வெங்காயம் சேர்க்கவும். அது பொன்னிறமக மாறும் வரை வதக்க வேண்டும்.

பிறகு பொடியாக நறுக்கிய இஞ்சி மற்றும் 8 சிறிய பல் பூண்டுகளை சேர்த்து ஒரு நிமிடம் வதக்க வேண்டும். பின்னர் 4 கப் நடுத்தரமாக நறுக்கிய தக்காளியை சேர்த்து, நன்றாக கலக்கவும். பிறகு மூடி வைத்து மென்மையாக மாறும் வரை சமைக்க வேண்டும். இப்போது 15 முதல் 20 முந்திரி சேர்த்து ஒரு நிமிடம் வதக்க வேண்டும். பிறகு இந்த முந்திரி பருப்பை ஒரு மிக்ஸியில் சேர்துத நன்றாக பேஸ்டு பதத்தில் அரைக்கவும்.

- Advertisement -

ஒரு கனமான பாத்திரத்தில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெயை சூடாக்கி, 4ஸ்பூன் மஞ்சள் தூள், 1 ஸ்பூன் காஷ்மீரி மிளகாய் தூள், மற்றும் 1 ஸ்பூன் கொத்தமல்லி தூள் ஆகியவற்றை குறைந்த தீயில் வதக்க வேண்டும். இப்போது தயாரிக்கப்பட்ட வெங்காய தக்காளி மசாலாவை சேர்த்து நன்கு கலக்கி விட்டு, தேவையான உப்பு மற்றும் 1 கப் சூடான நீரை சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும். பிறகுமூடி வைத்து 30 நிமிடங்கள் அல்லது குறைந்த தீயில் எண்ணெய் பிரியும் வரை சமைக்கவும்.

பிறகு மூடி வைத்து சமைக்கும்போது அடி பிடிக்காமல் இருக்க இடையில் கிளறிக் கொள்ள வேண்டும். பிறகு மசாலாவில் இருந்து எண்ணெய் பிரிந்து வரும் வரை அதனை கிளறிக் கொண்டே இருக்க வேண்டும் அதன் பிறகு மசாலா தயாரானதும் அதனை முற்றிலும் குளிர வைத்து, காற்று புகாத பாத்திரத்தில் வைத்துக்கொள்ள வேண்டும். பிரிட்ஜில் வைத்து ஒரு மாதம் வரை இந்த மசாலாவே பயன்படுத்தலாம்.

- Advertisement -