இன்ஸ்டன்ட் தோசை மற்றும் தொட்டுக்கொள்ள வித்தியாசமான சுவையில் வேர்கடலை சட்னி ஒருமுறை செய்து பாருங்கள். இதன் சுவை நாவிலேயே ஒட்டிக் கொள்ளும்

dosai
- Advertisement -

காலை உணவிற்காக தோசை மாவு இல்லாத சமயங்களில் வேறு எந்த உணவையும் சமைப்பதற்கு நேரம் குறைவாக இருந்தாலும், எனக்கு இப்போது தோசை மட்டும் தான் வேண்டும் என்று உங்கள் குழந்தைகள் அடம் பிடித்தாலும் அந்த நேரங்களில் உடனே செய்யக்கூடிய இந்த இன்ஸ்டன்ட் தோசையை சட்டென்று செய்து கொடுத்து விடுங்கள். இதற்கு தொட்டுக்கொள்ள மிகவும் சுவையான இந்த வேர்க்கடலை சட்னியையும் சேர்த்து செய்து கொடுங்கள். மிகவும் ஈஸியாக செய்யக்கூடிய இந்த உணவை எவ்வாறு சமைப்பது என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

dosai

தோசை செய்ய தேவையான பொருட்கள்:
பச்சை அரிசி மாவு – ஒரு கப், மைதா மாவு – 2 ஸ்பூன், பெரிய வெங்காயம் – 2, பச்சை மிளகாய் – 2, கொத்தமல்லித்தழை – ஒரு கொத்து, கறிவேப்பிலை – ஒரு கொத்து, உப்பு – அரை ஸ்பூன், இஞ்சி – சிறிய துண்டு, எண்ணெய் – 5 ஸ்பூன்.

- Advertisement -

செய்முறை:
முதலில் வெங்காயம், இஞ்சி மற்றும் பச்சை மிளகாயை சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக்கொள்ள வேண்டும். பிறகு ஒரு கிண்ணத்தில் ஒரு கப் பச்சை அரிசி மாவினை எடுத்துக் கொண்டு அதனுடன் இரண்டு ஸ்பூன் மைதா மாவு, நறுக்கி வைத்துள்ள வெங்காயம், இஞ்சி, பச்சை மிளகாய், கொத்தமல்லி தழை, கருவேப்பிலை மற்றும் அரை ஸ்பூன் உப்பு இவை அனைத்தையும் சேர்த்து நன்றாக கலந்து கொண்டு, இதனுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கரைத்துக் கொள்ள வேண்டும். தோசை மாவு போன்று கெட்டியாக இல்லாமல் கரண்டியில் அள்ளி ஊற்றுமாறு சற்று தண்ணீர் பதத்தில் இருக்க வேண்டும்.

mavu

பிறகு கரைத்து வைத்துள்ள மாவினை ஐந்து நிமிடங்கள் அப்படியே ஊற விட வேண்டும். பின்னர் அடுப்பை பற்ற வைத்து அதன் மீது ஒரு தோசைக்கல்லை வைத்து, தோசைக் கல் நன்றாக சூடானதும் கலந்து வைத்துள்ள மாவிலிருந்து இரண்டு கரண்டி மாவை ஊற்றி தோசை சுட வேண்டும்.

- Advertisement -

பின்னர் தோசையின் மீது ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி விட்டு, அடுப்பை சிறிய தீயில் வைத்துக் கொண்டு, 5 நிமிடங்கள் அப்படியே வேக விடவேண்டும். அதன் பின்னர் தோசையை திருப்பிப் போட்டு எடுத்து விட்டோம் என்றால் சுவையான மொறுமொறுப்பான அரிசி மாவு தோசை தயாராகிவிடும். இதேபோல் மீதமுள்ள மாவிலும் தோசைகள் சுட்டு எடுக்க வேண்டும். இந்த மாவில் வீட்டில் இருக்கும் மூன்று பேர் சாப்பிடும் அளவிற்கு தோசைகள் ஊற்றலாம்.

சட்னி செய்ய தேவையான பொருட்கள்:
வேர்க்கடலை – 100 கிராம், எண்ணெய் – 2 ஸ்பூன், கருவேப்பிலை – ஒரு கொத்து, உப்பு – அரை ஸ்பூன், புளி – கொட்டைப்பாக்கு அளவு.

- Advertisement -

செய்முறை:
புளியை ஊறவைத்து நன்றாக கரைத்து, புளி தண்ணீர் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அடுப்பின் மீது ஒரு கடாயை வைத்து, இரண்டு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, எண்ணெய் நன்றாக காய்ந்ததும் 100 கிராம் வேர்க்கடலையை சேர்த்து நன்றாக வறுத்துக் கொள்ள வேண்டும். அதன்பின்னர் வேர்க்கடலையுடன் ஒரு கொத்து கறிவேப்பிலை சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ள வேண்டும். பிறகு முக்கால் ஸ்பூன் தனி மிளகாய்த்தூள் சேர்த்துக் பச்சை வாசனை போகும் வரை வதக்கி விட வேண்டும். பிறகு கரைத்து வைத்துள்ள புளி தண்ணீரை ஊற்றி சிறிது நேரம் கொதிக்க விடவேண்டும்.

verkadalai

பின்னர் இதனை அடுப்பில் இருந்து கீழே இறக்கி வைத்து சிறிது நேரம் ஆறியதும், வதக்கிய பொருட்கள் அனைத்தையும் ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து அதனுடன் சிறிதளவு தண்ணீரும் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும். அவ்வளவுதான் சுவையான வேர்க்கடலை சட்னி தயாராகிவிட்டது. இதனை தாளிக்க வேண்டிய அவசியம் எதுவும் இல்லை.

onion-chutni

செய்து வைத்துள்ள தோசையை இந்த வேர்க்கடலை சட்னியுடன் சேர்த்து பரிமாறி சாப்பிடக் கொடுத்தால் இதன் சுவை அவ்வளவு அருமையாக இருக்கும்.

- Advertisement -