இந்த பக்குவத்தில் செய்தால் நினைத்த உடனே சுவையான மொறு மொறு ராகி தோசையை மிகவும் சுலபமாக சட்டென செய்திடலாம்

ragi
- Advertisement -

ஒவ்வொரு நாளும் விடியும் பொழுது இன்றைய தினம் நல்லபடியாக அமைய வேண்டும் என்பது தான் அனைவரின் ஆசையாக இருக்கும். தினமும் ஒரே மாதிரியான வேலையை தொடர்ந்து செய்வது எந்த வகையில் அலுப்பாக இருக்குமோ, அது போல தான் தினமும் சாப்பிடும் உணவு ஒரே சுவையில் இருந்தால் சாப்பிட வேண்டும் என்ற ஆசையை இல்லாமல் போய் விடும். எனவே தினமும் காலை, மாலை உணவு சற்று வித்தியாசமாக இருந்தால் அனைவரும் விருப்பமாக சாப்பிடுவார்கள். பெரும்பாலும் அனைவரது வீட்டிலும் இட்லி மாவை அரைத்து வைத்து கொண்டு அதனை வாரம் முழுவதும் தோசை அல்லது இட்லி செய்ய பயன்படுத்திக் கொள்வார்கள். ஆனால் இந்த இட்லி, தோசை தொடர்ந்து சாப்பிடுவதற்கு சற்றுச் சலிப்பாக தோன்றும். எனவே கொஞ்சம் வித்தியாசமான சுவையை ருசிக்க ஆசை பட்டால் ராகி மாவை எடுத்துக்கொண்டு அதில் இப்படி சுவையான தோசை செய்து பாருங்கள். இந்த ராகி தோசை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

தேவையான பொருட்கள்:
கேழ்வரகு மாவு – ஒரு கப், ரவை – அரை கப், அரிசி மாவு – அரை கப், உப்பு – ஒரு ஸ்பூன், சீரகம் – அரை ஸ்பூன், வெங்காயம் – 2, பச்சை மிளகாய் – 2, கறிவேப்பிலை – ஒரு கொத்து, கொத்தமல்லித்தழை – ஒரு கொத்து, இஞ்சி சிறிய துண்டு – 1, எண்ணெய் – 6 ஸ்பூன்.

- Advertisement -

செய்முறை:
முதலில் ஒரு பாத்திரத்தில் ஒரு கப் ராகி மாவு எடுத்துக்கொள்ள வேண்டும். பிறகு அதனுடன் ஒரு ஸ்பூன் உப்பு சேர்த்து கலந்து விடவேண்டும். பின்னர் இதனுடன் அரை கப் அரிசி மாவு மற்றும் அரை கப் ரவை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். பிறகு இவற்றுடன் 3 அல்லது 4 டம்ளர் தண்ணீர் ஊற்றி கட்டிகள் இல்லாமல் கரைத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு இந்த கலவையை 15 நிமிடம் ஊற வைக்க வேண்டும். இதில் சேர்த்துள்ள ரவை, நன்றாக ஊறி மாவு சற்று கெட்டியான பதத்திற்கு வந்துவிடும். மாவு ஊறுகின்ற அதே நேரத்தில் வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். அதேபோல் இஞ்சியையும் பச்சை மிளகாயையும் பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

பிறகு கருவேப்பிலை மற்றும் கொத்தமல்லி தழையும் சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும். அதன் பின் கலந்து வைத்துள்ள மாவில் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை, கொத்தமல்லி இவை அனைத்தையும் சேர்த்து கலந்து விட வேண்டும். பிறகு இவற்றுடன் அரை ஸ்பூன் சீரகத்தையும் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.

இந்த மாவு ரவை தோசை மாவு பக்குவத்தில் சற்று நீர்க்க இருக்க வேண்டும். கெட்டியாக இருந்தால் தோசை அடை போன்று வந்துவிடும். எனவே மாவை தண்ணீராக கரைத்துக் கொள்ளவேண்டும். பிறகு தோசைக்கல்லை அடுப்பின் மீது வைத்து, ஒரு கரண்டி மாவை ஊற்றி தோசை சுட வேண்டும். பின்னர் தோசையின் மீது ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்ற வேண்டும். தோசை ஒரு புறம் சிவந்ததும் மறுபுறம் திருப்பி போட்டு வேக வைத்து எடுக்க வேண்டும். இந்த ராகி தோசையுடன் வெங்காய சட்னி, கார சட்னி சேர்த்து சாப்பிட அவ்வளவு சுவையாக இருக்கும்.

- Advertisement -