இந்த இரண்டு பொருள் வீட்டில் இருந்தால் போதும் சுவையான ரவா அடையை உடனே செய்து விடலாம். குறைந்த நேரத்தில் காலை உணவு தயாராகி விடும்

adai
- Advertisement -

பெரும்பாலான இல்லங்களில் காலை உணவு என்பது அவசரத்தில் செய்யக்கூடிய ஒன்றாகத்தான் இருக்கும். குறைந்த நேரத்தில் எதைச் செய்ய முடியுமோ அந்த உணர்வைத்தான் தினமும் செய்து கொடுக்கின்றனர். ஆனால் சற்று வித்தியாசமான உணவு வகைகளை சாப்பிட வேண்டும் என்றால் வாரத்திற்கு ஒரு முறை தான் பலரது இல்லங்களிலும் சமைத்துக் கொடுக்கிறார்கள். இன்றைய அவசர காலகட்டத்தில் வேலைக்கு செல்லும் தாய்மார்கள் இப்படித்தான் உணவு வகைகளை சமைத்துக் கொண்டு இருக்கின்றனர். ஆனால் இந்த அடையை உங்களுக்கு இருக்கின்ற நேரத்தில் சுலபமாக சட்டென செய்துவிட முடியும். இதன் சுவையும் அவ்வளவு அருமையாக இருக்கும். வாருங்கள் இந்த ரவா அடையை எப்படி செய்ய வேண்டும் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்:
ரவை – ஒரு கப், கோதுமை மாவு – ஒரு கப், பெரிய வெங்காயம் – 2, இஞ்சி சிறிய துண்டு – 1, பெருங்காயத் தூள் – அரை ஸ்பூன், மஞ்சள் தூள் – கால் ஸ்பூன், பச்சை மிளகாய் – 3, நெய் ஒரு – ஸ்பூன், நல்லெண்ணெய் – 3 ஸ்பூன், தயிர் – 200 கிராம், உப்பு – ஒரு ஸ்பூன், கருவேப்பிலை – ஒரு கொத்து, கொத்தமல்லித்தழை – ஒரு கொத்து.

- Advertisement -

செய்முறை:
முதலில் சிறிய துண்டு இஞ்சி மற்றும் 3 பச்சை மிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளவேண்டும்.பிறகு கொத்தமல்லி மற்றும் கருவேப்பிலையையும் சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ள வேண்டும். அதன் பின் ஒரு பாத்திரத்தில் ஒரு கப் ரவை மற்றும் ஒரு கப் கோதுமை சேர்த்து அவற்றுடன் ஒரு ஸ்பூன் உப்பு சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும்.

பின்னர் 200 கிராம் தயிர், அரை ஸ்பூன் பெருங்காயத்தூள், கால் ஸ்பூன் மஞ்சள் தூள், நறுக்கிய இஞ்சி, பச்சை மிளகாய் மற்றும் கருவேப்பிலை, கொத்தமல்லி இவற்றையும் சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும். பிறகு இவற்றுடன் லேசாக தண்ணீர் சேர்த்து இவை அனைத்தையும் அடை மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ள வேண்டும்.

- Advertisement -

பிறகு ஒரு வாழை இலை அல்லது பிளாஸ்டிக் கவர் எடுத்துக் கொண்டு, அதில் நெய் தடவி, கைகளிலும் லேசாக நெய் தடவிக் கொண்டு, இந்த மாவிலிருந்து ஒவ்வொரு உருண்டையாக எடுத்து வாழை இலையில் அடை போன்று தட்டிக் கொள்ளவேண்டும். பின்னர் அடுப்பின் மீது தோசைக்கல்லை வைத்து, நல்லெண்ணெய் ஊற்றி அடை மாவை தோசைக்கல்லில் வைத்து சுட்டு எடுக்க வேண்டும். இரண்டு புறங்களும் நன்றாக சிவந்து வந்ததும் வேறு தட்டுக்கு மாற்றி வைக்க வேண்டும்.

இவ்வாறு அடை மாவு முழுவதையும் இப்படி தோசைக்கல்லில் சுட்டு எடுக்க வேண்டும். பிறகு இவற்றுடன் தொட்டுக்கொள்ள தக்காளி சட்னி அல்லது தேங்காய் சட்னி சேர்த்து சாப்பிட மிகவும் அருமையான சுவையில் இருக்கும். நீங்களும் உங்கள் வீட்டில் இவ்வாறு ஒரு முறை செய்து பாருங்கள். வீட்டில் உள்ள அனைவரும் விருப்பமாக சாப்பிட்டு மகிழ்வார்கள்.

- Advertisement -