இனி தோசை செய்ய அரிசி ஊற வைத்து மாவு அரைக்க வேண்டாம். நினைத்த உடனே சுவையான தோசை செய்ய இந்த மூன்று பொருட்கள் இருந்தால் போதும்

dosai
- Advertisement -

இட்லி என்பது நமது பாரம்பரிய உணவாகும். ஆனால் இட்லியை விட பலருக்கும் மிகவும் பிடித்தமான ஒரு உணவு என்றால் அது தோசைதான். சிறியவர்கள் என்றாலும் சரி பெரியவர்கள் என்றாலும் சரி அவர்களிடம் சாப்பிட இட்லி வேண்டுமா? தோசை வேண்டுமா? என்ற கேள்வியை கேட்டுப்பாருங்கள். உடனே அவர்கள் வாயிலிருந்து வரும் ஒரே மாதிரியான பதில் தோசை என்று தான் இருக்கும். அவ்வாறு தோசை அனைவருக்கும் விருப்பமான ஒரு உணவாகும். இதற்காகவே இப்பொழுதெல்லாம் அனைவரது வீட்டிலும் அவர்களது ஃப்ரிட்ஜில் தோசை மாவு ரெடியாக இருக்கிறது. ஆனால் சில நேரங்களில் இந்த மாவு தீர்ந்து விட்டது என்றால் அடம்பிடிக்கும் குழந்தைகளுக்கும், வீட்டில் உள்ள பெரியவர் களுக்கும் உடனே சுவையான தோசை செய்து கொடுக்க இந்த மூன்று பொருட்களை பயன்படுத்திக்கொள்ளுங்கள். வாருங்கள் இந்த சுவையான தோசை ரெசிபியை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்:
தக்காளி – 4, சீரகம் – அரை ஸ்பூன், தனி மிளகாய் தூள் – ஒரு ஸ்பூன், கறிவேப்பிலை – ஒரு கொத்து, கொத்தமல்லி தழை – ஒரு கொத்து, உப்பு – ஒன்றரை ஸ்பூன், எண்ணெய் – 5 ஸ்பூன், அரிசி மாவு – அரை கப், ரவை – அரை கப், கோதுமை மாவு – கால் கப்.

- Advertisement -

செய்முறை:
முதலில் 3 தக்காளி பழங்களை பொடியாக நறுக்கி கொள்ள வேண்டும். பின்னர் அவற்றை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து, அதனுடன் அரை ஸ்பூன் சீரகம், ஒரு ஸ்பூன் தனி மிளகாய் தூள், அரை ஸ்பூன் உப்பு, ஒரு கொத்து கறிவேப்பிலை, ஒரு கொத்து கொத்தமல்லி தழை இவை அனைத்தையும் ஒன்றாக சேர்த்து பேஸ்ட் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு இந்த தக்காளி விழுதை ஒரு கிண்ணத்தில் சேர்த்து, அதனுடன் அரை கப் அரிசி மாவு, அரை கப் ரவை மற்றும் கோதுமை மாவு சேர்த்து அனைத்தையும் ஒன்றாக கலந்து விட வேண்டும். பிறகு இதில் மூன்றில் இருந்து மூன்றரை கப் தண்ணீர் ஊற்றி, அனைத்தையும் கட்டிகளில்லாமல் கரைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் இதனை ஒரு 10 நிமிடம் அப்படியே ஊற வைத்துவிட வேண்டும்.

- Advertisement -

பத்து நிமிடத்திற்கு பிறகு இந்த மாவை கலந்து விட்டுப் பார்த்தால் எப்பொழுதும் தோசை செய்யும் மாவு பதத்தை விட சற்று தண்ணீர் பதத்தில் இருக்க வேண்டும். அப்படி இல்லை என்றால் இதனுடன் மறுபடியும் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு தோசைக்கல்லை அடுப்பின் மீது வைத்து, கலந்து வைத்துள்ள மாவிலிருந்து இரண்டு கரண்டி மாவை ஊற்றி தோசை சுட வேண்டும். பின்னர் அதற்கு மேல் ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, தோசை வெந்ததும் மறுபக்கம் திருப்பி போட்டு எடுத்தால் சுவையான தக்காளி தோசை தயாராகிவிடும்.

- Advertisement -