இந்திய அணியின் வெற்றிக்கு பந்து வீச்சாளர்கள் காரணம் – அணில் கும்ளே

kumble
- Advertisement -

ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா இவ்விரு அணிகளுக்கும் இடையே 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் தற்போது நடந்து முடிந்தது. இந்த தொடரினை சிறப்பாக விளையாடி இந்திய இந்த தொடரை கைப்பற்றி வெற்றி வாகை சூடியது. 71 ஆண்டுகளில் முதல் முறையாக இந்திய அணி ஆஸ்திரேலிய மண்ணில் நடந்த டெஸ்ட் தொடரில் தனது தொடர் வெற்றியை பதிவு செய்துள்ளது.

koli

இந்நிலையில் தொலைக்காட்சி செய்தி நிகழிச்சியில் கலந்து கொண்டார் அணில் கும்ளே. அணில் கும்ளே இந்திய அணியில் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் இவர் இந்திய அணிக்கு பயிற்சியாளராகவும் இருந்துள்ளார். மேலும் இந்திய அணியின் டெஸ்ட் கேப்டனாகவும் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது . அந்த நிகழ்ச்சியில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அணில் கும்ளே விளக்கம் அளித்தார்.

- Advertisement -

அப்போது அந்த நிருபர் கும்ளேவிடம் ஸ்மித் மற்றும் வார்னர் போன்ற பலம் வாய்ந்த வீரர்கள் இல்லாததால் இந்திய அணி தொடரை கைப்பற்றியது என்று நீங்கள் கருதுகிறீர்களா? என்று அந்த நிருபர் கேட்டார். அதற்கு ஒரு சிறிய புன்னைகையுடன் பதிலளிக்க ஆரம்பித்தார் கும்ளே. நிச்சயம் நீங்கள் கூறுவது உண்மை அல்ல முற்றிலும் தவறான ஒன்று இந்திய அணியின் பலம் இப்போது இந்திய அணியின் பந்துவீச்சாளர்கள் கைக்கு மாறியுள்ளது.

ishanth

முன்பு இந்திய அணியின் பேட்டிங் வரிசை பந்துவீச்சை காட்டிலும் அதிகமாக இருக்கும். ஆனால் தற்போது உள்ள இந்திய அணியின் பந்துவீச்சு பலம் அருமையாக உள்ளது. ஸ்மித் மற்றும் வார்னர் போன்ற வீரர்கள் இருந்தால் அவர்களையும் நிச்சயம் இப்போது உள்ள அணி வீழ்த்தி வெற்றி அடைந்திருக்கும் என்பதே எனது கருத்து. மேலும் இந்த தொடரில் புஜாராவின் ஆட்டம் சிறப்பான தரத்தில் இருந்தது என்றும் கும்ளே குறிப்பிட்டார்.

- Advertisement -

இதையும் படிக்கலாமே :

அனுஷ்காவை திட்டியவர்களுக்கு இந்த வெற்றியின் மூலம் பதில் அளித்துள்ளேன் – கோலி பளீர்

மேலும் விளையாட்டு செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்

- Advertisement -