இந்த அறிகுறிகள் இருந்தால் உங்களுடன் தெய்வங்கள் வாழ்கிறது என்று தான் அர்த்தம்.

poojai
- Advertisement -

தெய்வங்கள் இல்லாத ஒரு இடம் என்று இந்த உலகத்தில் எதுவுமே கிடையாது. கண்ணுக்கு தெரிந்த கண்ணுக்குத்தெரியாத அண்டத்தில் கூட இந்த இறை சக்தி முழுமையாக நிறைவாக தான் இருக்கிறது. அதனால் தான் இந்த உலகம் இயங்கிக் கொண்டிருக்கிறது‌ நீங்கள் கடவுளை நம்பினாலும் சரி நம்பவில்லை என்றாலும் சரி. நமக்கு மேலே ஏதோ ஒரு சக்தி இயங்குகிறது அதனால் தான் இந்த பூமியில் உயிரினங்கள் வாழ்கிறது என்பதையாவது நிச்சயம் நம்பி தான் ஆக வேண்டும். அப்படிப்பட்ட ஒரு சக்தியை தான் இறைசக்தி என்று நினைத்து வழிபாடு செய்கின்றோம்.

சரி இந்த சக்தியை நேரில் கண்டவர்கள் யாரும் இருக்க முடியாது. ஆனால் உணர்ந்தவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். எந்த ஒரு வீட்டில் சந்தோஷம் இருக்கிறதோ அந்த வீட்டில் தெய்வங்கள் வாழ்கிறது என்று தான் அர்த்தம். சந்தோஷம் என்றால் என்னது. பணம் காசு நகை வைரம் வைடூரியமா. நிச்சயம் கிடையாது. மனநிறைவான வாழ்க்கையை வாழ்ந்தாலே அது இறைவன் நமக்கு கொடுத்த வரம் தான்.

- Advertisement -

அழகான குடும்பம், அழகான குழந்தைகள், மூன்று வேளை சாப்பிட சாப்பாடு, பசி இல்லை. இருப்பதற்கு வாடகை வீடாக இருந்தாலும், சொந்த வீடாக இருந்தாலும் ஒரு நிம்மதியான வீடு. மானத்தை மறைத்துக் கொள்ள ஆடை. இவை அனைத்தையும் இறைவன் நமக்கு கொடுத்திருக்கின்றான். இத்தனை நன்மைகளையும் உங்களுக்குக் கொடுத்த அந்த இறைவன் உங்களுடன் தான் இருக்கின்றான்.

இது தவிர ஒரு சில அறிகுறிகளை வைத்து கூட நாம் இறை சக்தியை உணர முடியும். வழக்கம்போல வீட்டில் பூஜை செய்து இறைவனிடம் வேண்டி கொண்டிருப்போம். திடீரென்று நம் வீட்டின் அருகிலோ அல்லது தூரத்திலோ இருக்கக்கூடிய கோவிலில் மணி ஓசை கேட்கும். அந்த மணியோசை கேட்கும் போது நாம் உடம்பெல்லாம் புல்லரிக்கும். அந்த சமயம் தெய்வ சக்தியை உணர முடியும். கண்ணை மூடிக் கொண்டு சுவாமியை மனதார வேண்டிக் கொள்வோம். கண்ணை திறந்து இறைவனைப் பார்த்த உடன் இறைவனின் தலையில் இருந்து பூ விழும். அல்லது எலுமிச்சம் பழம் கீழே விழும். அப்போது நம் உடல் சிலிர்த்து போகும். அந்த நேரத்தில் இறைவனை உணரலாம்.

- Advertisement -

நம்முடைய வீட்டில் கற்பூரம் ஏற்றி இருக்க மாட்டோம். தீபம் ஏற்றி இருக்க மாட்டோம். வாசனை மிகுந்த ஊதுவத்திகள் எதுவுமே ஏற்றிருக்க மாட்டோம். ஆனால் சும்மா டிவி பார்த்துக் கொண்டு இருக்கும் போதோ அல்லது வேறு ஏதோ வேலையை செய்யும் போதோ நம்மை அறியாமலேயே ஒரு நல்ல மனம் வீசும். உதாரணத்திற்கு விபூதி வாசம், சந்தன வாசம், பன்னீர் வாசம், பூக்கள் வாசம் அப்படியே நம்மை கடந்து செல்லும். அப்படி ஒரு உணர்வு ஏற்படும் போது நமக்கு அப்படியே மயிர் சிலிர்க்கும் அப்படி இருந்தாலும் அந்த இடத்தில் தெய்வ சக்தியை உணர முடியும்.

சில நேரங்களில் நாம் சுவாமி கும்பிடும்போது ஏதோ ஒரு ரூபத்தில் உடுக்கை சத்தமோ மேல சத்தமோ அல்லது இறைவனுக்காக சமர்ப்பிக்கப்படும் இசை ஏதோ ஒன்று சத்தமாக ஒளிக்கப்பட்டு அந்த ஒளி நம் காதில் விழுந்து நம்மை அறியாமலேயே நமக்குள் ஒரு உணர்வு தோன்றும். அந்த நேரத்தில் கோவிலில் நின்று சுவாமியை பார்க்கும் போது நம் கண்களில் நீர் பெருகி இருக்கும். அந்த நேரத்தில் இறை சக்தியை நீங்கள் உணரலாம்.

குடும்பத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பாராத கண்டம் ஏதோ ஒரு வகையில் வந்திருக்கும். பெரிய ரூபத்தில் கிளம்பி இருக்கும். ஆனால் ஒரு சில நாட்களில் அந்த பிரச்சனையிலிருந்து எந்த பாதிப்பும் இல்லாமல் வெளியே வருவோம். பெரிய இழப்புகள் எதுவும் இருக்காது. இப்படிப்பட்ட இடத்தில் எல்லாம் அந்த இறைசக்தி நம்மை பாதுகாக்கின்றது.

மேல் சொன்ன விஷயங்களை நிறைய பேர் உணர்ந்திருக்கலாம். சிலபேர் இதுதவிர இன்னும் நிறைய விஷயங்களில் அனுபவபூர்வமாக இறை சக்தியை உணர்ந்து இருக்கக்கூடிய அனுபவங்கள் இருக்கும். எதுவாக இருந்தாலும் சரி, நல்லது நம் கூடவே இருக்கிறது என்று நம்புங்கள். அந்த இறைவன் என்றுமே உங்களைக் கைவிட மாட்டான் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -