இந்த தவறுகளை நீங்கள் செய்தால் உங்கள் வீட்டில் இருக்கும் தெய்வம் தலைதெறிக்க வீட்டை விட்டு எங்கோ ஓடி சென்று விடும். வீட்டில் தரித்திரம் தலைவிரித்து ஆட தொடங்கிவிடும்.

- Advertisement -

தூணிலும் இருப்பான். துரும்பிலும் இருப்பான்‌. அவன் தான் இறைவன். இது நாம் எல்லோருக்கும் தெரிந்த விஷயம்தானே. தெய்வங்கள் இல்லாத வீடு என்று ஒன்று இருக்குமா என்ன. நிச்சயம் இருக்காது. எல்லா இடத்திலும் தெய்வ சக்தி இருக்கும். குறிப்பாக இறந்தவர்கள் வீட்டில் கூட தெய்வசக்தி இருக்கும். இதில் எந்த ஒரு மாற்றுக் கருத்தும் கிடையாது. ஆனால் ‘இந்த வீடு தெய்வ கடாட்சம் நிறைந்த வீடு’ ‘அந்த வீட்டில் தெய்வ கடாட்சம் இல்லை’ என்று நாம் எப்படி சொல்கின்றோம். இறைசக்தி, தெய்வ கடாட்சம் என்பது அந்த வீட்டிலேயே தான் இருக்கும். வீட்டை விட்டு எங்கும் போகாது. சில சூழ்நிலைகளில் வீட்டில் தெய்வங்கள் மறைந்து ஒளிந்து நிற்கும். இறை சக்தியின் மூலம் எந்த ஒரு நன்மையும் அந்த வீட்டிற்கு கிடைக்காது.

இதை தான் நம்முடைய ஜோதிடர்கள் சொல்லுவார். உங்களுடைய வீட்டில் தெய்வங்கள் வாசலிலேயே நிற்கின்றது. உங்களுடைய வீட்டு தெய்வம் கட்டுண்டு கிடக்கிறது என்று. நம்முடைய வீட்டில் தெய்வ கடாட்சம் செயலிழந்து போவதற்கு யார் காரணம் தெரியுமா. நான் தான். நாம் செய்யக்கூடிய தவறுகள் தான். நாம் எந்த வகையில் காரணமாக இருக்கின்றோம். தெரிந்து கொள்வோமா.

- Advertisement -

ஏதாவது ஒரு கஷ்டம் வீட்டில் வந்து விட்டால் போதும். தகாத வார்த்தைகளைக் கொண்டு வீட்டை முதலில் திட்ட தொடங்குவோம். குறிப்பாக சனியன் பிடித்த வீடு, தரித்திரம் பிடித்த வீடு, இந்த வீட்டிற்கு வந்த நாள் முதல் எனக்கு நிம்மதி இல்லை. ஏன்தான் வாழ்கின்றோமோ தெரியவில்லை. கருமம் பிடித்த வீடு. சாவு வந்தாலும் பரவாயில்லை. என்று நிறைய பேர் மேலே சொன்ன வார்த்தைகளை வீட்டில் உச்சரிப்போம். ஒரு பேச்சுக்காக கூட இந்த வார்த்தைகளை நம் வீட்டில், நம்முடைய வாயால் உச்சரிக்கவே கூடாது.

கோபங்கள் தாபங்கள் எல்லோருக்கும் வரக்கூடியது தான். சண்டை இல்லாத குடும்பமே கிடையாது. ஒருவேளை உங்களுடைய வீட்டில் இன்று தகாத வார்த்தைகளை பேசி சண்டை போட்டு விட்டீர்கள். வீட்டு தெய்வங்கள் காதை மூடிக்கொண்டு எங்கோ ஓடி சென்றிருக்கும்.

- Advertisement -

சண்டை முடிந்த அன்றைய நாள் இரவு, பூஜை அறைக்கு சென்று இறைவனை மனதார நினைத்து தரிசனம் செய்து விபூதியை நெற்றியில் இட்டுக் கொண்டு இரு கைகளை கூப்பி ‘எங்களை அறியாமல், எங்களுடைய கெட்ட நேரம் இன்று வீட்டில் சண்டை வந்துவிட்டது. தகாத வார்த்தைகளை பயன்படுத்தி விட்டோம். இனி இந்த தவறு எங்கள் வீட்டில் நடக்கக்கூடாது. அதற்கு நீ தான் காவல் தெய்வமாக இந்த வீட்டில் இருக்க வேண்டும்’ என்று சொல்லி மனதார இறைவனிடம் மன்னிப்பு கேட்கும் போது உங்களுடைய கண்கள் கலங்க தொடங்கிவிடும். கண்ணில் இருந்து ஒரு சொட்டு தண்ணீர் வரத்தொடங்கும். உங்களுடைய வீட்டிலிருந்து வெளியே சென்ற தெய்வம் உங்கள் வீட்டிற்குள் வந்து அந்த நிமிடமே நிற்கும்.

அப்படியா? இதற்கு என்ன சாட்சி என்று நீங்கள் கேட்டால் நிச்சயமாக அதற்கு பதில் கிடையாது. நமக்கு ஏற்படுகின்ற உணர்வு. உணர்வுபூர்வமாக தான் நாம் தெய்வத்தை பார்க்க முடியும். உணர்வுப்பூர்வமாக இறை சக்தியை உள்வாங்கும் போது தான், இறை சக்தி நமக்கு தென்படும். உடம்பில் இருக்கும் மயிர்க்கால்கள் எல்லாம் சிலிர்த்துக் கொண்டு ஒரு நிமிடம் நமக்குள் ஏதோ ஒரு சக்தி நுழைந்தது போல சில பேருக்கு தோன்றும்.

சிலபேருக்கு எதிர்பாராத நல்ல மணம் வீசும். விபூதி மல்லிகைப்பூ மணம் சந்தனம் பன்னீர் இந்த மணம் வீசும். உடம்பு சிலிர்த்துப் போய் கண்களிலிருந்து நீர் வரத்தொடங்கும். வீடே கோவிலாக தெரியும். இப்படிப்பட்ட உணர்வு பூர்வமான விஷயங்களை நீங்கள் மனதார அனுபவித்தால் உங்கள் வீடு தாங்க கோவில். நம்பிக்கை உள்ளவர்கள் மேல் சொன்ன விஷயத்தை பின்பற்றி நல்ல பலனை அடையலாம் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -