இறந்தவர்களுக்கான தர்ப்பணத்தை எப்போது துவங்குவது நல்லது தெரியுமா ?

mahalaya-ammavasai
- Advertisement -

மனிதனாய் பிறந்த அனைவரும் ஒரு கட்டத்தில் இறந்தே தீர வேண்டும் என்பது இறைவன் வகுத்த நியதி. அதை யாராலும் மாற்ற முடியாது. இறந்த பின் ஒருவரது ஆன்மாவானது இறைவனிடம் செல்கிறது என்று நம்பப்படுகிறது. நமது கலாச்சாரத்தில் இறந்தவர்களுக்காக விரதம் இருப்பது, தர்ப்பணம் செய்வது போன்றவை உள்ளன. ஆனால் அதை எல்லாம் முறையாக எப்போதில் இருந்து செய்ய வேண்டும் என்பதை பற்றி பார்ப்போம் வாருங்கள்.

mahalaya-ammavasai

வீட்டில் ஒருவர் இறந்துவிட்டால் பொதுவாக ஒரு வருடத்தில் எந்த ஒரு நிகழ்விலும் கலந்துகொள்ள கூடாது என்று கூறுவதுண்டு. இதற்க்கு காரணம் இறந்தவர்களின் நினைவுகள் நம்மை விட்டு நீங்கி விடும். ஆகையால் நாம் அவர்களுக்கு செய்ய வேண்டிய சில முக்கிய சடங்குகளை மறக்க நேரிடும் என்பதே. அதோடு தீட்டும் நம்மை தொடரத்தான் செய்யும்.

- Advertisement -

ஒருவர் இறந்த பிறகு நாம் அவருக்கு ஈமச்சடங்கு செய்கிறோம். ஆனால் அந்த சடங்கு அதோடு முடிந்துவிடுவது கிடையாது. அவர் இறந்த ஒரு வருடத்திற்கு பிறகு அவருக்கு திதி கொடுத்த பிறகு தான் அவருக்கான ஈமச்சடங்கு முடிகிறது. திதி கொடுப்பதற்கு முப்பு இறந்தவர்களுக்கான விரதம், தர்ப்பணம் போன்றவரை செய்வதில் பெரிதாக பயன் இல்லை. அதை இறந்தவர்கள் முழுமையாக ஏற்பார்கள் என்றும் கூறிவிட முடியாது. ஆகையால் இறந்த ஒருவருடத்திற்கு பிறகு திதி கொடுக்கவேண்டிய நாளை குறித்து திதி கொடுத்த பிறகு எதையும் செய்வது நல்லது.

இதையும் பார்க்கலாமே:
கடலுக்கு நடுவில் ராமன் உருவாக்கிய அபூர்வ கிணறு – வீடியோ

English Overview:
In Hindu religion there is a procedure called Tharpanam. If one close relatives dead then that family members will give Tharpanam. Here we describe about when we need to give Tharpanam and how will it be beneficial.

- Advertisement -