கடலுக்கு நடுவில் ராமன் உருவாக்கிய அபூர்வ கிணறு – வீடியோ

villoondi thertham
- Advertisement -

ராமேஸ்வரம் அருகே உள்ள தங்கச்சிமடம் என்னும் ஊரில் கடல் நீர் சூழ ஒரு அதிசய கிணறு உள்ளது. இதற்கு வில்லூண்டி தீர்த்தம் என்று பெயர். கடல் நீர் சூழ பட்டிருந்தாலும் கூட அந்த கிணற்றில் இன்று வரை உப்பில்லாத இனிப்பான நீரே கிடைக்கிறது. இதற்கு பின் ராம காலத்து வரலாறு ஒளிந்துள்ளது. அந்த வரலாற்றையும், அந்த கிணறு குறித்த விடீயோவையும் பார்ப்போம் வாருங்கள்.

வில்லூண்டி தீர்த்தம் வீடியோ:

- Advertisement -

வில்லூண்டி தீர்த்தமானது ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தியால் உருவாக்கப்பட்ட மிக மிக அப்பூர்வமான தீர்த்தம் ஆகும். ராவணனை வதம் செய்த பிறகு ராமன் சீதா தேவியோடு இலங்கையில் இருந்து வந்தார். அப்போது இந்த இடத்தை அடைந்த போது சீதா தேவிக்கு தாகம் எடுத்தால் அவர் ராம பிரானிடம் நீர் கேட்டார். சுற்றி கடல் இருந்ததால் அங்கு உப்பு தண்ணீரை தவிர வேறு இல்லை. அதனால் ராமபிரான் கங்கா தேவியை வேண்டி ஓர் இடத்தை நோக்கி அம்பை எய்தினார். உடனே அந்த இடத்தில் கங்கை நீர் வெளிவர துவங்கியது.

சீதா தேவி தனக்கு தேவையான நீரை அருந்திய பிறகு, மக்களுக்கு பயனடையும் வகையில் கங்கா தேவியை அங்கேயே இருக்கும் படி வேண்டினாள். அன்று முதல் இன்று வரை அங்கு நன் நீர் கிடைக்கிறது. மக்களும் அந்த நீரை சுவைத்து புண்ணியம் பெறுகின்றனர். அந்த புனித நீர் வில்லூண்டி தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது.

- Advertisement -

இதையும் பார்க்கலாமே:
4000 அடி மலை உச்சியில் ஆதி கால பிள்ளையார் – வீடியோ

English Overview:
This a well near Rameshwaram which is inside the sea. The miracle here that the well has sweet water and it has no salt content. This well is called as Villoondi theertham and it is believed that it was build by Sri Raman.

- Advertisement -