இனி இறந்தவர்கள் கனவில் வந்தால் அனாவசியமாக யாரும் பயந்து பதட்டப்பட வேண்டாம். இறந்தவர்கள் கனவில் வருவதற்கு இப்படியும் கூட ஒரு அர்த்தம் உண்டு.

sleep
- Advertisement -

நம்முடன் வாழ்ந்து இந்த பூமியை விட்டு மறைந்த நம் முன்னோர்கள் கனவில் வந்தால் போதும், அப்படியே பயந்து நடுங்கி என்ன பரிகாரம் செய்வது? ஏது செய்வது? இதனால் நம்முடைய குடும்பத்திற்கு பெரிய கஷ்டம் ஏதும் வந்து விடுமோ? என்று தெரியாமல் மனதைப் போட்டு குழப்பிக் கொண்டு, நம்முடைய மனதை அலைபாய விடுகின்றோம். இது மிகப் பெரிய தவறு. இறந்தவர்கள் கனவில் வந்தால் இனி யாரும் பயப்படாதீங்க. இறந்தவர்கள் கனவில் வருவதற்கு சாஸ்திர ரீதியாக நிறைய காரணங்கள் சொல்லப் பட்டிருக்கலாம். ஆனால், இந்த மூன்று விஷயங்கள் கூட ஒரு காரணமாக இருக்கலாமே. நேர்மறையாக நாம் எல்லாவற்றையும் நினைத்தால் நமக்கு நடப்பதும் நேர்மையாகவே நடக்கும்.

Dream

பொதுவாக இறந்தவர்கள் கனவில் வந்தால் அவர்கள் பசியாக உள்ளார்கள். உங்களிடம் ஏதோ ஒன்றை கேட்பதற்காக வருகிறார்கள். என்று சிலர் சொல்லி நாம் கேள்விப்பட்டு இருப்போம். சரிதான், இறந்தவர்களுக்கு செய்யக்கூடிய சடங்குகளை நாம் சரியான முறையில் செய்யாவிட்டால் தான் இதைக் கண்டு நாம் பயப்பட வேண்டும். இறந்தவர்களுக்கான திதி தர்ப்பணங்களை சரியாக செய்து வந்தால், இறந்தவர்கள் கனவில் வந்தால் எந்த ஒரு பயமும் நமக்கு கிடையாது. எந்த ஒரு கெட்டதும் நம் குடும்பத்திற்கு நடக்காது.

- Advertisement -

முதலாவதாக இறந்தவர்கள் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் ஆசிர்வாதம் செய்வதற்காக கனவில் வரலாம். இரண்டாவதாக நீங்கள் நன்றாக வாழ்ந்ததை பார்ப்பதற்காகவும் அவர்களுடைய ஆத்மா உங்களை தேடி வரும் என்று சொல்லப்பட்டுள்ளது.

night-sleep

சில பேர் வீட்டில் குடும்பத்தில் சந்தோஷம் நிறைவாக இருக்கும். ஆனால் அந்த வீட்டில் நடக்கக்கூடிய நல்ல காரியம் நடப்பதில் ஏதோ ஒரு தடை இருக்கும். வீட்டில் இருக்கும் பிள்ளைகளுக்கு திருமணம் நடக்காமல் இருக்கும். பேரன் பேத்திகளுக்கு குழந்தை பாக்கியம் இல்லாமல் இருக்கும். அல்லது வீட்டில் ஏதோ ஒரு சுப நிகழ்ச்சி நடப்பதில் தடை இருந்தால், அந்த சுப காரியத்தை நமக்கு நினைவு கூற, மூதாதையர்கள் நம் கனவில் வருவார்கள் என்றும் சொல்லப்பட்டுள்ளது.

- Advertisement -

உங்களுடைய முன்னோர்கள், இறந்த ஆத்மாக்கள் உங்களுடைய கனவில் வந்தால் எந்த பயமும் இனி வேண்டாம். இறந்தவர்கள் உங்கள் கனவில் வந்தால், மறுநாள் காலையில் எழுந்து சுத்தமாக குளித்துவிட்டு, பூஜை அறையில் தீபம் ஏற்றி வைத்துவிட்டு குலதெய்வத்தை மனதார பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். வீட்டில் நல்லது மட்டுமே நடக்க வேண்டும் என்று! அதன் பின்பு உங்கள் கனவில் யார் வந்தார்களோ அந்த குறிப்பிட்ட இறந்த நபரை மனதார தம்பதிகளாக நினைத்து பிரார்த்தனை செய்து கொள்ள வேண்டும்.

Amavasai Tharpanam

அதன் பின்பு உங்களால் முடிந்தால் இயலாதவர்களுக்கு ஏழை எளியவர்களுக்கு பசியோடு இருப்பவர்களுக்கு அன்னதானம், புதிய வஸ்திர தானம் செய்யலாம். பசுமாட்டிற்கு சாப்பிடுவதற்கு கீரை, வாழைப்பழம் உங்களால் முடிந்த பொருட்களை வாங்கி கொடுக்கலாம். முன்னோர்களுக்கு செய்ய வேண்டிய திதி தர்ப்பணங்களை தவறாமல் செய்து வர இறந்தவர்கள் கனவில் வந்தால் இனி உங்களுடைய மனதில் எந்த பயமும் எழ தேவையில்லை. நல்லது மட்டுமே நினைப்போம். நல்லது மட்டுமே நடக்கும் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -