இறந்து போன தாய், தந்தை கனவில் வராமல் திடீரென வருவது எதனால்? அவர்கள் கனவில் வராமல் போனதற்கு என்ன காரணம்?

dream-tharpanam
- Advertisement -

இறந்து போனவர்கள் பொதுவாக கனவில் வருவது சுப பலன்களை கொடுக்கும் என்கிறது கனவு பலன் சாஸ்திரங்கள். ஒருவர் இறந்து போனது போல நீங்கள் கனவு காண நேர்ந்தால் சுப காரியங்கள் நடக்கும் என்றெல்லாம் கேள்விப்பட்டிருப்போம். அது போல ஒருவர் உங்களுடைய ரத்த உறவாக இருந்து, உங்களுடைய முன்னோர்களாக இருந்து, கனவில் அடிக்கடி வந்தால் உங்களுக்கு பெயரும், புகழும் கொடுப்பார்கள். அவர்களுடைய ஆசிர்வாதம் எப்பொழுதும் உங்களுக்கு இருந்து கொண்டே இருக்கும் என்று கூறுவார்கள். அப்படி இருக்க நம்முடைய தாய், தந்தை இறந்த பின்பு நம்முடைய கனவில் வராமல் போவதற்கு என்ன காரணம்? வராமல் இருந்துவிட்டு திடீரென அவர்கள் கனவில் தோன்றினால் என்ன பலன்? என்பதை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகிறோம்.

நாம் மிகவும் நேசிக்கும் நம்முடைய சொந்த உறவுகள் அல்லது நமக்கு சொந்தமான உறவுகள் எதுவாக இருந்தாலும், அவர்கள் இறந்த பின்பு அடிக்கடி கனவில் தோன்றுவது உண்டு. குறிப்பாக அவர்கள் இருந்து ஒரு வருடம் வரை கண்டிப்பாக அடிக்கடி அவர்களுடைய நினைவுகள் ஆழ் மனதில் இருந்து எழுந்து கனவாக நமக்கு வரும். இது ரொம்பவும் இயல்பான ஒரு விஷயம் தான்.

- Advertisement -

நமக்கு பிடித்த உறவுகள் மற்றும் நாம் நேசித்த உறவுகள், நம்முடைய சொந்த தாய், தந்தை ஆகியவர், இறந்த பின்பு நம்முடைய கனவில் வரவே இல்லை என்றால் அவர்கள் மனதில் ஏதோ ஒரு அதிருப்தி இருப்பதாக சாத்திரங்கள் குறிப்பிடுகிறது. நீங்கள் அவர்களை நினையாமல் இருக்கலாம் அல்லது அவர்களை மறக்க நினைக்கலாம் என்பதாலும் உங்கள் கனவில் அவர்கள் தோன்றாமல் போகலாம். அப்படி நீங்கள் நினைத்துக் கொண்டே இருந்தும், உங்களுடைய கனவில் வரவில்லை என்றால் நீங்கள் அவர்களுக்கு பிடிக்காத ஏதோ ஒரு விஷயத்தை செய்து கொண்டிருக்கிறீர்கள் என்று அர்த்தம்.

ஆழ்ந்து யோசித்தால் உங்களுக்கே அது புரிய வரும். ஏதோ ஒரு விஷயம் அவர்கள் விரும்பத் தகாததை நீங்கள் செய்து கொண்டிருக்கலாம் அல்லது மற்றவர்கள் உங்களை செய்ய தூண்டலாம். அவர்கள் மனதில் அது அதிருப்தியை ஏற்படுத்துவதால் நீங்கள் என்னதான் அவர்களை நினைத்தாலும், அவர்கள் உங்கள் கனவில் தோன்றுவது கிடையாது. ஆனாலும் உங்கள் மேல் இருக்கும் பிரியமும், மதிப்பும் என்றும் அவர்களிடம் குறைந்து விடாது என்பதையும் மறந்து விடக்கூடாது.

- Advertisement -

இறந்து போனவர்கள் எப்பொழுதும் நம்முடைய நன்மையை மட்டுமே விரும்புபவர்களாக இருப்பார்களாம். அதனால் தான் அவர்களுக்கு சரியான திதி, தர்ப்பணம் கொடுத்து ஒவ்வொரு விஷயங்களையும் பார்த்து பார்த்து பித்ரு பூஜைகளை செய்து வந்தால் அடுத்தடுத்த வாழ்வில் முன்னேற்றம் உண்டாகி சுபிட்ச நிலைக்கு நாம் செல்வது நிகழ்கிறது. இப்படி இறந்து போனவர்கள் உங்கள் கனவில் தோன்றாமல் அதிருப்தியுடன் இருந்து விட்டு திடீரென ஒரு நாள் உங்களுடைய கனவில் வந்தால் ஏதோ ஒரு ஆபத்து அல்லது இடையூறு வரப்போகிறது என்பதை அவர்கள் உங்களுக்கு சுட்டிக் காட்டுகிறார்கள் என்று அர்த்தமாம்.

நீங்கள் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும். நீங்கள் ஏதோ ஒரு விஷயத்தில் சிக்க போகிறீர்கள் அல்லது உங்களுக்கு ஆபத்து வரப்போகிறது என்பதை உணர்த்தவே அதுவரை தோன்றாமல் இருந்த இவர்கள் உங்களுடைய கனவில் திடீரென தோன்றி எச்சரிக்கிறார்கள். எனவே தாய், தந்தையாரை அதிருப்தி கொள்ள செய்யாமல் அவர்களுக்கு உரிய பித்ரு பூஜைகளை சரியான முறையில் செய்து அவர்களை எப்பொழுதும் மனதில் உயிருடன் இருப்பதாக நினைத்துக் கொண்டிருங்கள். அவர்கள் உங்களுக்கு நன்மையே புரிவார்கள்.

- Advertisement -