இறந்தவர்களுடைய நகையை பயன்படுத்தினால் வீட்டிற்கு கஷ்டம் வருமா? இறந்தவர்களுடைய நகையை என்னதான் செய்வது?

amman
- Advertisement -

நன்றாக வாழ்ந்து வயதான பின்பு இயற்கையாகவே இறந்து போனவர்களுடைய நகையை எடுத்து நாம் பயன்படுத்துவதன் மூலம் பெரியதாக எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாது. ஆனால் சிறுவயதிலேயே எதிர்பாராமல் விபத்தின் மூலமாக, துர்மரணம் அடைபவர்கள், தற்கொலை செய்து இறந்து போனவர்கள், நோய்நொடியால் சிறுவயதிலேயே இறந்து போனவர்கள் நித்தமும் பயன்படுத்திய நகைகளை என்ன செய்வது என்பதைப் பற்றிய ஒரு சிறிய தகவலை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

துர் மரணத்தால் இறந்து போனவர்கள், அதாவது சிறுவயதிலேயே எதிர்பாராமல் உயிரிழந்த பின்பு அவர்களுடைய உடலில் இருந்து எடுக்கப்பட்ட நகையை கட்டாயமாக நாம் பயன்படுத்தவே கூடாது. வாழும்போது தினம் தினம் அவர்கள் அந்த நகையை அப்படியே உடம்போடு போட்டு வைத்திருப்பார்கள். இறந்த பின்பு அந்த நகையை அவர்களுடைய உடலில் இருந்து எடுத்த பின்பு என்ன செய்வது.

- Advertisement -

அந்த நகையை சுத்தமான மஞ்சள் தண்ணீரால் கழுவி விட்டு எடுத்து துடைத்து ஒரு டப்பாவில் அல்லது பையிலோ போட்டு அதில் ஒரு துளசி இலையைப் போட்டு பத்திரமாக எடுத்து வைத்துக்கொள்ளுங்கள். இறந்த வீட்டில் உடனடியாக கோவில் சம்பந்தப்பட்ட விஷயங்களை செய்ய முடியாது அல்லவா அதனால் தான். இறந்தவர்களுடைய நகையை உடனடியாக கொண்டுபோய் விற்கவும் கூடாது என்று சொல்லுவார்கள். தீட்டுக் கழியும் வரை காத்திருங்கள்.

நாற்பத்தி எட்டு நாள், மூன்று மாதங்கள், ஒரு வருடம் உங்களுடைய வீட்டில் இறந்தவர்களுடைய தீட்டு எப்போது முடிகிறதோ அப்போது இந்த பரிகாரத்தை செய்யலாம். துர் மரணத்தால் இறந்தவர்கள் பயன்படுத்திய அந்த குறிப்பிட்ட நகையை விற்று காசாக மாற்றிக் கொள்ள வேண்டும். பணத்தை குலதெய்வ கோவிலுக்கு கொடுத்து அன்னதானம் செய்து விடலாம். இது ஒரு வழி.

- Advertisement -

அப்படி இல்லை என்றால் கடல் சார்ந்த கோவில்களுக்கு சென்று இறந்தவர்களை நினைத்து யாகம் செய்து, அங்குள்ள பிராமணர்களுக்கு அன்னதானம் வழங்குவது சிறப்பான பலனை கொடுக்கும். உயிரிழந்த ஆத்மா சாந்தி அடைவதற்கு இந்த பரிகாரம் மிகவும் உகந்ததாக சொல்லப்பட்டுள்ளது. இப்படிப்பட்ட பரிகார பூஜையானது ராமேஸ்வரத்தில் விமர்சையாக நடைபெறும் என்பதும் குறிப்பிடத்தக்க ஒரு விஷயம். இது இரண்டாவது வழி.

இறந்த பின்பு அடக்கம் செய்ய யாருமே இல்லாமல் அனாதை பிரேதங்கள் இன்றளவும் நிறைய இடங்களில் இருக்கத்தான் செய்கிறது. அதாவது உயிர் இழந்த பின்பு அவர்களை அடக்கம் செய்ய யாருமே இருக்க மாட்டார்கள். அனாதை பிணம் என்று சொல்லுவார்கள் அல்லவா. இப்படிப்பட்ட பிரேதங்களை நல்லடக்கம் செய்வதற்கு நாம் இந்த பணத்தை தானமாக கொடுக்கலாம். ஒரு அனாதை பிணத்தை அடக்கம் செய்ய நாம் உதவினால், ஒரு அஸ்வமேத யாகம் செய்த புண்ணியத்தை நம்மால் பெற முடியும் என்று சொல்கிறது சாஸ்திரம்.

annadhanam 1

சரிங்க, துர்மரணம் அடைந்தவர்கள் பயன்படுத்திய நகையை நாம் எடுத்துக் கொண்டால், நாம் பயன்படுத்தினால் என்ன தான் நடக்கும்? இறந்தவர்கள் விருப்பப்பட்டு ஆசைப்பட்டு அணிந்திருந்த அந்த நகையை யார் வைத்திருக்கிறார்களோ, அவர்களோடு இறந்த ஆத்மா ஆவி தொடர்பு கொள்ளும் என்று சொல்லப்பட்டுள்ளது. வீணாக பிரச்சனையை விலை கொடுத்து வாங்க வேண்டுமா. நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.

shivan

என்னடா இது துர்மரணம், பிணம் என்ற வார்த்தைகளாகவே உள்ளதே என்ற சிந்திக்காதீர்கள். மனிதனுடைய வாழ்வு முடிவது என்பது இறப்பில் தான். நம்முடைய இறப்பு நமக்கு முக்தியை தர வேண்டும் என்றால், மேல் சொன்ன விஷயங்களை பின்பற்றுங்கள். நிச்சயமாக இறக்கும் தருவாயில் மரணபயம் வந்து நம்மை நெருங்கவே நெருங்காது. இறைவனின் பாதங்களை சரணடைய இதுவும் ஒரு வழி என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -