இறந்தவர்களுடைய ஆடையை வீட்டில் மற்றவர்கள் பயன்படுத்துவது சரியா? தவறா? இறந்தவர்கள் பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்!

pithru-watch-clothes
- Advertisement -

ஒருவர் இறந்து போன பின்பும் அவருடைய ஆத்மா இந்த பூமியில் அலைந்து கொண்டிருப்பதாக சாஸ்திரங்கள் கூறுகிறது. அந்த ஆத்மா சில குறிப்பிட்ட காலம் வரையில் நம்முடன் பயணம் செய்து பின்னர் பிதுர் லோகம் அடைவதாகப் புராணங்கள் குறிப்பிடுகிறது. பல ஆயிரம் வருடங்களுக்கு முன்பே இறந்து போனவர்களுடைய சடலங்களை கூட பதப்படுத்தி வைத்திருக்கும் எகிப்து இன்றும் உலக மக்களால் வியப்பாக பார்க்க படுகிறது. இப்படி இறந்து போனவர்கள் பற்றிய சுவாரஸ்ய தகவல்கள் இன்னும் நீண்டு கொண்டே தான் இருக்கிறது. அந்த வகையில் அவர்களுடைய ஆடையை, இன்னொருவர் பயன்படுத்துவது சரியா? தவறா? என்கிற வாதம் தொடர தொடர்ந்து இந்த பதிவை நோக்கி பயணிப்போம்.

dead-death

ஒருவர் பயன்படுத்திய எல்லா பொருட்களிலும் அவருடைய நினைவுகளும், தன்மைகளும் ஒளிந்து கொண்டிருக்கும். குறிப்பாக ஒருவருடைய முடி, நகம், பற்கள், வியர்வை துளிகள் போன்றவற்றில் அவர்களுடைய பிரதிபலிப்பு அப்படியே இருக்கும். பல ஆயிரம் வருடம் சென்றால் நம்முடைய உருவத்தை அச்சு அசலாக அப்படியே இன்னொருவர் செய்து விட முடியும். பறவைகள், மிருகங்கள் என்று கிளோனிங் செய்யப்படும் காலத்தை நம் கண் முன்னே கண்டு கொண்டிருக்கும் பொழுது, இதுவும் சாத்தியம் தானே?

- Advertisement -

ஒருவருடைய டிஎன்ஏ எனப்படும் மரபணுவை வைத்து நம்மைப் போலவே இன்னொரு மனிதனையும் நம்முடைய ஆற்றல்களுடன் உருவாக்க முடியுமா? என்று பல ஆராய்ச்சியாளர்கள் தன் ஆராய்ச்சியை தொடர்ந்து செய்து வருகின்றனர். வீட்டில் இருந்த ஒருவர், நமக்கு நெருக்கமான ஒருவர் இறந்து போய்விட்டால், அவருடைய ஆடைகளில் அவருடைய பிரதிபலிப்பு அப்படியே இருக்கும். மேற்கத்திய நாடுகளில் எல்லாம் ஒரு உடையை ஆறு மாத காலம் துவைக்காமல் அப்படியே பயன்படுத்துவார்கள்.

clothes-on-bed

அங்கு இருக்கும் சீதோசன நிலை மிகவும் குளிர்ச்சியாக இருப்பதால் அவர்கள் அடிக்கடி துவைத்து போட வேண்டிய அவசியமில்லை. மேலும் துவைத்தாலும் அங்கு காய போவது இல்லை. ஆனால் இந்தியாவில் அது போல நாம் செய்ய முடியாது! ஒரு நாள் உடுத்திய உடையை மறுநாள் பயன்படுத்த கூட முடியாது. உடனே அதனை நாம் துவைத்து விடுவது உண்டு. இப்படி இடத்திற்கு இடம் ஆடைகளைப் பயன்படுத்துவதில் மாற்றங்கள் உள்ளன ஆனால் ஒருவர் பயன்படுத்திய உடையில் அவருடைய வியர்வை துளிகள் அப்படியே இருக்கும் பொழுது அவர் இறந்த பின்பு அந்த இடத்தை சுற்றிலும் அவருடைய ஆத்மா அலைந்து கொண்டிருக்குமாம்.

- Advertisement -

இதனால் மேற்கத்திய நாடுகளில் ஒருவர் இறந்து போய்விட்டால் அவர்களுடைய விலை உயர்ந்த உடைகளை நன்கு துவைத்து வெவ்வேறு இடங்களுக்கு தானமாக கொடுத்து விடுவார்களாம். ஒரு இடத்தில் இருந்தால் தான் அந்த ஆத்மா அந்த இடத்தை வலுவாக ஆக்கிரமிப்பு செய்யும். பல்வேறு இடங்களில் இருக்கும் பொழுது அதனால் அதன் ஆதிக்கத்தை செலுத்த முடியாமல் போய்விடும் எனவே ஒரு ஆபத்தும் இல்லை என்று இப்படி செய்வதாக கூறப்படுகிறது.

cloth-fire

எனவே ஒருவர் இறந்த பின்பு அவருடைய ஆடையை மற்றவர்கள் கூடுமானவரை பயன்படுத்துவதை தவிர்ப்பது தான் நல்லது. அவர்களுடைய ஒரு சில ஆடைகளை நாம் நன்கு துவைத்து சுத்தம் செய்து பீரோவில் பத்திரமாக அடுக்கி வைத்திருக்கும். அவர்கள் நினைவு நாளன்று அதையும் சேர்த்து வைத்து வணங்குவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறோம். அந்த ஆடையின் மூலமாக அவர்கள் வருகை புரிவதாக நம்முடைய நம்பிக்கை இருந்து வருகிறது எனவே ஆடையின் மீது இவ்வளவு ஈர்ப்பு இருப்பதால் அந்த ஆத்மா அதனை சுற்றிலும் எப்போதும் இருக்கும் எனவே இரண்டு போனவரின் ஆடையை பயன்படுத்துவதை விட அதனை எரித்து விடுவது மிகவும் நல்லது.

- Advertisement -