இறவா நிலை பெற்ற நம் காதல் – காதல் கவிதை

Love kavithai

பிரிந்த பல காதல்கள்
இன்றும் இறக்காமல்
வாழ்ந்துகொண்டு தான் இருக்கிறது
அவரவர் பிள்ளைகளின் பெயரில்..

Kadhal kavithai Image
Kadhal kavithai

இதையும் படிக்கலாமே
கண்ணீரில் கரையும் இரவு – காதல் கவிதை

50 சதவீதம் காதல் தோற்கிறது என்றால் மீதி 50 சதவீதம் காதல் ஜெயிக்கிறது. தோற்ற அந்த 50 சதவீதம் காதலர்கள் தங்கள் வாழ்க்கையை அடுத்த நிலைக்கு எப்படியாவது முயற்சித்து கொண்டு செல்கின்றனர். ஆனால் அவர்கள் எப்போதும் தங்கள் காதலை மறப்பது கிடையாது. ஒரு காதல் ஜெயித்தால் அது அதோடு முடிந்து விடும் ஆனால் ஒரு காதல் தோற்றால் அது அதோடு முடிந்துவிடுவது கிடையாது.

காதலில் தோற்ற பலர் அவர்களது பிள்ளைகளுக்கு தன் காதலன் பெயரையோ அல்லது காதலி பெயரையோ வைத்து, தோற்றுப்போன தங்கள் காதலுக்கு உயிர் கொடுக்கின்றனர். ஆகையால் அவர்கள் வாழ்ந்த காலத்தில் மட்டும் மட்டும் அல்ல, அவர்களின் வாழ்க்கைக்கு பிறகும் அவர்களின் காதல் வாழ்ந்துகொண்டு தான் இருக்கும் என்பதே நிதர்சனமான உண்மை.

Love Kavithai Image
Love Kavithai

மேலும் பல காதல் கவிதைகள், காதல் மெசேஜ் மற்றும் காதல் தோல்வி கவிதைகள் பல படிக்க எங்களோடு இணைந்திருங்கள்.