கண்ணீரில் கரையும் இரவு – காதல் கவிதை

Love kavithai

கண்களை மூடவில்லை
கனவுகளும் வரவில்லை
கண்ணீர் துளிகளிலேயே
தினம் தினம் கரைகிறது
என் இரவு..

Kadhal Kavithai Image
Kadhal Kavithai

இதையும் படிக்கலாமே:
எண்ணில் தொலைந்த நினைவு – காதல் கவிதை

ஒரு மனிதன் மகிழ்ச்சியாக இருக்கிறானா அல்லது சோகத்தின் உச்சியில் இருக்கிறானா என்பதை சரியாக சொல்லக்கூடிய சக்தி தலையணைக்கு மட்டுமே உண்டு. காதலில் தோல்வியுற்ற பெரும்பாலானோர்களின் தலையணை தினம் தினம் இரவில் நனைந்த வண்ணமே இருக்கும். தூக்கம் ஒரு மனிதனுக்கு பிரதானம். ஆனால் அந்த தூக்கத்தை முழுமையாய் அபகரிக்கும் சக்தி காதலுக்கு உண்டு.

காதலில் வீழ்ந்தாலும் சரி காதலில் பிரிந்தாலும் சரி, தூக்கம் என்பது ஒரு மறந்து போன பழக்கமாக மாறிவிடும். காதலில் பிறந்தவர்களின் மனதில் ஆயிரம் எண்ணங்கள் வட்டமிடும். அவை அனைத்தும் ஒரு காலத்தில் ஆனந்தத்தை தந்து விட்டு இன்று அதுவே உயிர் போகும் அளவிற்கு வலியையும் தரும். இது போன்ற மாயை எல்லாம் காதலுக்கு மட்டுமே சாத்தியம்.

Love Kavithai Image
Love Kavithai

காதல் கவிதைகள், காதல் தோல்வி கவிதைகள், அன்பை உணர்த்தும் கவிதைகள் என அனைத்தையும் படிக்க எங்களோடு இணைந்திருங்கள்.