இரவில் திடீர் திடீரென்று கொலுசு சத்தம் கேட்பதற்கு காரணம் ஆவியா? சாமியா? உண்மை பின்னணி என்ன தெரியுமா?

amman-salangai
- Advertisement -

இரவில் சில அமானுஷ்ய நிகழ்வுகள் நிகழ்வது நம் எல்லோர் வாழ்க்கையிலும் ஏதோ ஒரு நேரத்தில் கண்டிப்பாக அனுபவித்து இருப்போம். நாம் உறங்கிக் கொண்டிருக்கும் பொழுது திடீரென யாரோ நம்மை அழுத்துவது போல சில நேரங்களில் தோன்றும். அது கருப்பு உருவத்தில் இருக்கும் என்பது பொதுவான விஷயம். இதை உங்களில் சிலரும் உணர்ந்திருக்கலாம். ஒரு விஷயம் வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு நபர்களுக்கு உண்டாகிறது. ஆனால் அது பொதுவாக இருக்கிறது என்றால் அது நம்மை ஆச்சரியப்பட வைக்க தானே செய்யும்? ஒரு விஷயம் நமக்கு நடக்கிறது. அதை மற்றவர்களிடம் சொல்கிறோம் எனும் பொழுது அதே விஷயத்தை, ‘நானும் உணர்ந்திருக்கிறேன்’ என ஒருவர் கூறும் பொழுது நமக்கு வியப்பாக இருக்கும்.

sleepless

அந்த வகையில் இரவில் சிலருக்கு கொலுசு சத்தம் கேட்பது போன்று அமானுஷ்ய உணர்வு தோன்றும். இதை நீங்கள் மட்டும் அனுபவிக்கும் ஒரு விஷயம் அல்ல. இதைப் பற்றி பலரும் பலவிதமாக பேசிக் கொண்டிருப்பதை அவ்வப்போது நாம் கேட்டிருப்போம் ஆனால் அதற்கு என்ன காரணம் என்று சரியாக நமக்கு தெரிய வேண்டும் அல்லவா? அதை பற்றிய ஒரு அலசல் இப்பதிவின் மூலம் காணலாம் வாருங்கள்.

- Advertisement -

இப்போது சென்னையில் இடநெருக்கடி காரணமாக இது போன்ற சத்தங்கள் பெரும்பாலானோருக்கு கேட்பது இல்லை. ஆனால் அந்த காலத்தில் எல்லாம் அடிக்கடி வீடுகளில் இரவு நேரத்தில் திடீர் திடீரென ஜல் ஜல் என்ற கொலுசு சத்தம் கேட்பது போன்று தோன்றும். ஒரு சிலர் இந்த சத்தத்தை ஆவி அல்லது பிசாசு நடமாட்டம் இருக்கிறது என்று பயமுறுத்தி விடுவார்கள்.

salangai

இன்னும் சிலர் இதை சாமி என்று கூறுவார்கள். இரவில் தெய்வம் வெளியில் நடமாடுமாம். அதன் கால் கொழுலு சத்தம் நமக்கு கேட்டால் அந்த வீட்டில் தெய்வ அருள் இருப்பதாகவும், தெய்வம் குடியிருப்பதாக நம்பப்பட்டு வந்தது. தெய்வ கடாட்சம் நிரம்பிய வீட்டில் இது போன்ற சத்தங்கள் இரவு நேரத்தில் கேட்பது இயல்பு என்று கூறுவார்கள்.

- Advertisement -

உண்மையில் இவ்வாறு ஒரு உணர்வு ஏற்படுவதற்கு யார் காரணம்? இதற்கு பின்னணியில் ஆவி, பிசாசு போன்ற அமானுஷ்ய துஷ்ட சக்திகள் உள்ளனவா? அல்லது அம்மன், தெய்வம் போன்ற நல்ல சக்திகள் அந்த வீட்டில் குடியிருக்குமா? இந்த சந்தேகத்திற்கு பலரும் விடை தெரியாமல் இன்று வரை இருப்பீர்கள். ஒரு சிலருக்கு இதன் உண்மை காரணம் என்னவென்று தெரிந்திருக்கலாம். ஆனால் பலருக்கும் இது புரியாத புதிராகவே இருந்து வந்திருக்கிறது என்பது தான் உண்மை.

amman

அந்த காலத்தில் வீடுகளில் அதிகமாக இந்த சத்தம் கேட்பது நிறைய கட்டுக்கதைகள் கட்டி விடுவதற்கு உபயோகமாக இருந்தது. ஏன் இந்த காலத்தில் அதிகமாக கேட்க முடிவதில்லை? புறநகர் பகுதிகளில் இருப்பவர்கள் இன்றும் இந்த சத்தத்தை இரவு நேரத்தில் கேட்க கூடும். அதற்கு நாம் நினைப்பது போல் பேயோ? பிசாசோ காரணமல்ல! அதேபோல் தெய்வமோ, அம்மனோ கூட காரணமல்ல! என்பது தான் உண்மை. அந்த வீட்டில் தெய்வமும் இல்லை, பேய் பிசாசும் இல்லை. பிறகு என்னதான் இருக்கிறது? என்று கேட்கத் தோன்றும்.

- Advertisement -

night-bug

இரவு நேரத்தில் அடர்ந்த புதர் அல்லது மரங்கள் நிறைந்த பகுதியில் கொலுசு சத்தம் அதிகமாக கேட்பது போல் தோன்றும். இதற்கு காரணம் அந்த புதர்களில் அல்லது மரங்களில் ஒளிந்திருக்கும் ஒருவகைப் பூச்சி தான். அதற்கு ராகோழி, பாச்சை என்று பல்வேறு பெயர்கள் உள்ளன. இரவு நேரத்தில் ஒலியெழுப்பும் ஆற்றல் கொண்டது இந்த பூச்சி. இதில் நிறைய வகைகள் இருந்தாலும் ஒரு சில நம் கண்களுக்கு தெரிய கூடியவையாக இருக்கும். அதை நாம் நேரடியாக பார்த்திருப்போம். ஆனால் அது அந்த அளவிற்கு ஒலி எழுப்பாது. இதனால் அந்த குழப்பத்திற்கு தீர்வு கிடைக்கவில்லை.

night-bug1

அதிலும் ஒரு சில வகை நம் கண்களுக்கு தெரிவதில்லை. அதன் இறக்கைகள் ஒன்றோடொன்று உரசிக் கொள்ளும் பொழுது இது போன்ற சத்தத்தை வெளிவிடும். இந்த சத்தம் கிட்டத்தட்ட யாரோ கொழுசு போட்டு நடப்பது போன்ற ஒலியை எழுப்பும். அதைத்தான் பேய் பிசாசு என்றோ தெய்வம், சாமி என்றோ நாம் இது வரை தவறாக நினைத்து கொண்டிருக்கிறோம். இனிமே யாராவது இது போல பயமுறுத்தினால் பயப்பட வேண்டிய அவசியமில்லை. அது வெறும் பூச்சி தான். நிம்மதியாக கண்ணை மூடி தூங்கி விடலாம்.

இதையும் படிக்கலாமே
அமாவாசை விரத சிறப்புகள் என்ன? அமாவாசை பற்றிய அத்தனை சந்தேகங்களுக்கும் விடை தெரிந்து கொள்ள வேண்டுமா?

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

- Advertisement -