- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalஇரவு தூங்கும் போது சொல்ல வேண்டிய வாராகி மந்திரம்

இரவு தூங்கும் போது சொல்ல வேண்டிய வாராகி மந்திரம்

- Advertisement -

தற்போது ஆஷாட நவராத்திரியானது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இன்று ஜூன் 26 ஆம் தேதி துவங்கிய ஆஷாட நவராத்திரி, ஜூலை 4ஆம் தேதி வரை 9 நாட்கள் கோலாகலமாக கொண்டாடப்பட இருக்கிறது. இந்த ஒன்பது நாளிலும் எவர் ஒருவர் மனதார வாராகியை நினைத்து வழிபாடு செய்கிறார்களோ, அவர்கள் வாழ்வில் சந்தோஷம் நிலையாக தங்கும்.

வறுமை நீங்கும் எதிரி தொல்லை நீங்கும். கை நிறைய பணம் வரும். மன நிம்மதி கிடைக்கும். எதிரிகளால் பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்படாது. கண் திருஷ்டியால் பிரச்சனைகள் வராது. ஆகவே இந்த ஒன்பது நாளில் உங்களால் முடிந்த வரை வாராகியை மனதார நினைத்து வழிபாட்டை மேற்கொள்ளுங்கள்.

- Advertisement -

இந்த வாராஹி நவராத்திரியில் ஒன்பது நாளும் இரவு தூங்க செல்வதற்கு முன்பு இந்த வார்த்தையை 8 முறை சொல்லி உங்கள் கஷ்டம் விடியும் பொழுதில் சரியாக வேண்டும் என்று பிராத்தனை வைத்து பாருங்கள் நீங்கள் நம்ப முடியாத அதிசயம் ஒன்பது நாட்களுக்குள் நடக்கும். அப்படி இல்லையா மாலை 6:30 மணிக்கு மேலாக பூஜை அறையில் விளக்கு ஏற்றி வாராகி நினைத்து இந்த வார்த்தையை சொல்லலாம். வாராஹி உங்களோடு துணையாக இருப்பாள்.

உங்கள் வாழ்க்கைக்கு தேவையான நல்லதை வாராகித் தாய் உங்கள் கனவில் வந்து சொன்னாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. வாராகியை கனவிலாவது தரிசனம் செய்ய வேண்டும் என்று நினைப்பவர்கள், தொடர்ந்து ஒன்பது நாட்களும், இந்த வாராஹி நவராத்திரியில், இந்த வார்த்தையை எட்டு முறை சொல்ல தவறாதீர்கள் அது என்ன வார்த்தை.

- Advertisement -

வாராஹி மந்திரம்

கஷ்டமான வார்த்தை எல்லாம் கிடையாது. “வாராஹி வாராஹி வாராஹி” அவளுடைய நாமத்தை தான் இரவு தூங்கும் போது 8 முறை சொல்லப் போகின்றோம். வாராஹியின் பெயரை எட்டு முறை சொல்லும் போது ஒரு பவர் உங்களுக்கு கிடைக்கும். அதை சொல்லி அனுபவிச்சா தான் புரியும். சொல்லி பாருங்கள். இந்த வார்த்தைக்கு பின்னால் இருக்கும் மகிமை என்ன என்பது உங்களுக்கு புரியும்.

வாழ்க்கையில் நீங்கள் எவ்வளவு பெரிய துன்பத்தில் இருந்தாலும் அதிலிருந்து 9 நாளில் விடுபடக்கூடிய பாக்கியத்தை கொடுக்கக்கூடிய பெரிய சக்தி வாய்ந்த வார்த்தை இது. மறக்காதீங்க இந்த வார்த்தையை எட்டு முறை செல்ல வேண்டும். இந்த வாராஹி நவராத்திரி ஒன்பது நாளும் தவறாமல் இதை பின்பற்ற வேண்டும். இந்த வாராகி நவராத்திரியில் அவள் பெயரை எட்டு முறை பெயரைச் சொல்லிக் கூப்பிடுபவர்களுக்கு, வாழ்க்கையில் வெற்றி மேல் வெற்றி வந்து குவியும். மன தைரியம் அதிகரிக்கும் வாழ்க்கையில் இதுவரை நீங்கள் எட்டாத உயரத்தை எட்டிப் பிடிக்க இந்த, வார்த்தையை எட்டு முறை சொன்னாலே போதும்.

- Advertisement -

இந்த ஒன்பது நாளும் வீட்டில் பூஜை அறையில் விளக்கு ஏற்றி வைத்துவிட்டு வாராகியை நினைத்து இந்த மந்திரத்தையும் சொல்லாம். உங்கள் வாழ்க்கையில் நீங்கள் செய்த பாவங்களும் தீரும். நீங்கள் செய்த பாவங்களால் உங்கள் வாழ்க்கையில் அனுபவித்துக் கொண்டிருக்கும் கஷ்டங்களும் தீரும்.

வாராஹி மந்திரம்

ஓம் ஐம் ஸ்ரீம் கிலீம் வாராஹி தேவியை நமஹ !

இதையும் படிக்கலாமே: ஹனுமன் ரகசிய வழிபாடு

இந்த ஒன்பது நாளும் வாராகி உங்களோடு தான் இருப்பாள். இந்த நவராத்திரி திதியில் வராகியின் மனது ரொம்ப ரொம்ப சந்தோஷமாக இருக்கும். யார் இவளை பாசத்தோடு அழைத்து என்ன வரத்தை கேட்டாலும் வாரி வாரி கொடுக்கக் கூடிய குழந்தை உள்ளம் கொண்டவள். எப்போதும் மன தைரியம் கொண்டவர்களாக நீங்கள் வலம் வர வேண்டும் என்றால், இந்த ஒன்பது நாளும் வாராகியின் பெயரை எட்டு முறை சொல்ல மறக்காதீங்க. இந்த ஆஷாடா நவராத்திரியின் போது மேல் சொன்ன ஆன்மீகம் சார்ந்த தகவல் அனைவருக்கும் பயனுள்ளபடி அமையும் என்ற நம்பிக்கையில் இன்றைய பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

சற்று முன்