பல வருடங்களாக சுத்தம் செய்யாமல் போட்டு வைத்திருக்கும் தோசை கல்லைக் கூட இந்த 1 பொருளை வைத்து சுத்தம் செய்து விடலாம். ஒரு துளி சோப்பு வேண்டாம். ஸ்டீல் நார் கூட தேவையில்லை.

dosa-kal
- Advertisement -

நம்மில் நிறைய பேர் வீடுகளில் நீண்ட நாட்களாக பயன்படுத்தாமல் ஒரு தோசை கல் இருக்கும். அந்த தோசை கல்லில் ஓரங்களில் கரிபிடித்து விடும். அதில் தோசை வார்க்க முடியாது. சில பேர் இதை சப்பாத்தி சுட பயன்படுத்திக் கொள்வார்கள். பிரியாணியை தம் போட கூட இந்த கல் பயன்படும். சப்பாத்தி சுடுவதற்கு கூட சில கல் பயன்படாத அளவுக்கு ஓரங்களில் கரி பிடித்து இருக்கும். இதை சுத்தம் செய்ய பல வழிகள் உள்ளது. அதில் ஒரு சுலபமான வழியைத்தான் இன்று நாம் பார்க்கப் போகின்றோம்.

பயன்படுத்தாத தோசை கல் உங்களுடைய வீட்டில் இருந்தாலும் அல்லது பயன்படுத்திக் கொண்டு இருக்கக்கூடிய தோசை கல்லை, இரும்பு தோசை கல்லை நீங்கள் சுத்தம் செய்ய நினைத்தாலோ இந்த ஐடியாவை முயற்சி செய்து பார்க்கலாம். இந்த முயற்சிக்கு நமக்குத் தேவையானது ஒரு பொருள் மண் அகல் விளக்கு. அப்படி இல்லை என்றால் மண் குடுவை. சிறிய அளவில் இருக்கும் மண் பானை உங்கள் கைக்கு அடக்கமாக இருக்க வேண்டும். இந்த இரண்டில் எதை வேண்டும் என்றாலும் நீங்கள் எடுத்துக் கொள்ளலாம்.

- Advertisement -

சுத்தம் செய்ய வேண்டிய தோசை கல்லை ஸ்டவ்வின் மேல் வையுங்கள். அடுப்பை பற்ற வைத்து விடுங்கள். தோசை கல் நன்றாக சூடாகட்டும். தோசைக்கல்லின் மேல் லேசாக தண்ணீரை தெளித்துவிட்டு அடுப்பை மீடியம் ஃப்ளேமில் வைத்துவிட்டு, இந்த அகல் விளக்கின் அடிபாகத்தை தோசைக்கல்லின் மேல் வைத்து, நன்றாக தேய்த்துக் கொடுங்கள். தோசை கல்லில் ஒட்டி இருக்கும் எண்ணெய் பிசுக்கு கரி எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக கழண்டு வர தொடங்கும்.

தோசை கல்லில் இருக்கும் கருப்பு நிறம் முழுமையாக சுத்தமாகும். (கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் தெளித்து அந்த தண்ணீரிலேயே, இந்த அகல் விளக்கை வைத்து தேய்க்கும் போது கருப்பு நிறம் அப்படியே வருவதை நாம் பார்க்கலாம்.) இப்படி சுத்தம் செய்யும் வரை தோசை கல்லை சூட்டிலேயே வைத்து விட்டு, இப்படி இந்த அகல் விளக்கால் தேய்த்துக் கொடுக்க, தோசை கல் கொஞ்சம் கொஞ்சமாக சுத்தமாகும். பிறகு அந்த தோசை கல்லை அடுப்பில் இருந்து கீழே இறக்கி வைத்து விட்டு, அதை அகல் விளக்கை வைத்து மீண்டும் நன்றாக தேய்த்து நல்ல தண்ணீரில் கழுவி விடுங்கள்.

- Advertisement -

தோசை கல்லில் நாம் சுத்தம் செய்த கருப்பு நிறம் முழுமையாக நீங்க வேண்டும் என்பதற்காக மட்டும், லேசாக சோப்பு போட்டு ஒரு முறை பாத்திரம் தேய்ப்பது போல அந்த தோசை கல்லை தேய்த்து விட்டு மீண்டும் அடுப்பில் வைத்து ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி வெங்காயம் அல்லது புளியைப் போட்டு நன்றாக தோசை கல்லை தேய்த்து விட்டு, முதலில் ஒரு முட்டை ஆம்லெட் போட்டு விடுங்கள். அதன் பின்பு இதில் கல் தோசை ஊற்றிப் பாருங்கள். தோசை சூப்பராக வரும். எடுத்தவுடனேயே மெல்லிசாக தோசை வார்க்க முடியாது. கல் தோசையை ஊற்றி பழகிவிட்டு, பிறகு மெல்லீசான தோசை கூட இந்த கல்லில் வார்த்து சாப்பிடலாம். அந்த அளவுக்கு கல் தயாராகி இருக்கும்.

உங்களுடைய கையில் பிடிதுணியோ அல்லது இடுக்கியோ வைத்துக் கொள்ளுங்கள். கை சுட்டுக் கொள்ளாமல் ஜாக்கிரதையாக இந்த முயற்சியை மேற்கொள்ள வேண்டும். உங்களுக்கு இந்த குறிப்பு பயனுள்ளதாக இருக்கும் என்றால் ஒரு முறை முயற்சி செய்து பார்க்கலாம். சிறிய அளவில் அகல் விளக்கு இருக்கிறது. தோசை கல்லில் தேய்த்தால் கை சுடும் என்பவர்கள் மண்ணால் செய்யப்பட்ட குடுவையை வாங்கிக் கொள்ளுங்கள். (இந்த சிறிய குடுவையின் அடிபாகத்தை கல்லில் வைத்து தேய்க்க வேண்டும்.) ரோட்டோர வீதிகளில் மோர் குடிப்பதற்கு எல்லாம் இந்த குடிவை இப்போது பயன்படுத்தப்பட்டு வருகிறது. நிறைய கடைகளில் கூட இது மலிவான விலைக்கு கிடைக்கிறது. வாங்கி பயன்படுத்திக் கொள்ளலாம்.

- Advertisement -