இரும்புக் கல்லில் ஒழுங்காக தோசை வரவில்லையா? 1 நிமிடத்தில் தோசை வராத இரும்பு கல்லைக் கூட, நான் ஸ்டிக் தவா போல மாற்ற இந்த 1 பொருள் போதும்.

dosai
- Advertisement -

நிறைய பேர் வீட்டில் இப்போது நான்ஸ்டிக் தோசை கல்லில் தோசை வார்த்து சாப்பிடுகிறார்கள். இருப்பினும் இரும்பு தோசைக்கல்லில் தோசை வார்த்து சாப்பிடுவதால்தான் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது. சில சமயம் இரும்பு தோசைக் கல்லில் சப்பாத்தி சுட்டு விட்டால், அல்லது ஏதாவது கிழங்கு வறுவல் செய்தாலோ, அல்லது மீன் வறுத்து விட்டாலும் அந்த தோசைக்கல்லில் மீண்டும் தோசை வார்ப்பது மிகவும் சிரமமாக இருக்கும். கூடுமானவரை சப்பாத்தி வறுவலுக்கு தனி தோசை கல், தோசை வார்ப்பதற்கு தனி தோசைக்கல் வைத்துக் கொள்வது நல்லது. ஒருவேளை எல்லாம் சேர்த்து உங்கள் வீட்டில் ஒரே தோசை கல்லாக இருந்தாலும் பரவாயில்லை.

இரும்பு தோசை கல்லில் தோசை வார்க்கிறீர்கள். அந்த கல்லில் இருந்து, தோசை வரவே மாட்டேங்குது. ஒட்டிக் கொள்கிறது என்றால் என்ன செய்வது. முதலில் ஒரு வெள்ளை காட்டன் துணியை எடுத்துக்கொள்ளுங்கள். அதில் கொஞ்சமாக புளி, அதன் மீது உப்பைக் கொட்டி சிறிய முடிச்சு போல கட்டிக்கொள்ளுங்கள். இந்த முடிச்சு 3 மாதங்கள் ஆனாலும் ஒரு சில்வர் டப்பாவில் போட்டு மூடி வைத்தால் கெட்டுப்போகாது.

- Advertisement -

தோசைக்கல்லை அடுப்பில் வைத்து அதில் 1/2 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி இந்த முடிச்சைக்கொண்டு தோசைக்கல்லை நன்றாக தேய்த்து விட வேண்டும். அதன் பின்பு தோசை வார்த்தால் உங்களுடைய தோசை நிச்சயம் கல்லில் ஒட்டாமல் வரும். புதியதாக தோசைக்கல் வாங்கினால் கூட நீங்கள் இந்த மெத்தட் ட்ரை பண்ணி பார்க்கலாம்.

இந்த குறிப்பு குறிப்பு நிறைய பேருக்கு தெரிந்திருக்கலாம். இருப்பினும் தெரியாதவர்கள், புதியதாக சமைப்பவர்கள் தெரிந்து கொள்வதற்காக இந்த பதிவு. இதே போல எப்போதும் நம் வீட்டில் காலை இரவு தோசை தான் சாப்பிடுகின்றோம். அந்த தோசையை கொஞ்சம் ஆரோக்கியமான தோசையாக மாற்றிக் கொள்ளலாமே.

- Advertisement -

இட்லி மாவு எப்போதும் நம் பிரிட்ஜில் தான் இருக்கப் போகின்றது. தவிர சிறு தானியங்களை வாங்கி வீட்டில் வைத்துக்கொள்ளுங்கள். வரகு, தினை, சாமை, இப்படி எந்த சிறுதானியமாக இருந்தாலும் சரி. ஏதாவது ஒரு சிறுதானியத்தை 3 லிருந்து 4 மணி நேரம் தண்ணீரில் போட்டு ஊறவைத்து விட்டு, மிக்ஸியில் நன்றாக அரைத்துக் கொள்ளுங்கள். இதோடு தேவைப்பட்டால் ஒரு கைப்பிடி உளுந்து கூட சேர்த்து ஊற வைத்துக் கொள்ளலாம். இந்த மாவை உங்கள் வீட்டில் இருக்கும் தோசை மாவுடன் கலந்து தோசை வார்த்துக் கொடுத்தால் இது ஆரோக்கியமான உணவாக மாறும்.

அதாவது கொஞ்சமாக சிறுதானிய மாவு அரைக்க போறீங்க. கொஞ்சமாக தோசை மாவை இன்னொரு கிண்ணத்தில் எடுத்து இந்த இரண்டு மாவையும் சரிசமமாக கலந்து தோசை வார்த்தால் சூப்பராக வரும். ட்ரை பண்ணி பாருங்க. இதோடு மட்டுமல்லாமல் இதே போல கம்பு மாவு கேழ்வரகு மாவு எல்லாம் தயாராக வீட்டில் அரைத்து வைத்துக்கொள்ளுங்கள். அதிலிருந்து கொஞ்சம் மாவை எடுத்து இந்த தோசை மாவு கலந்து விதவிதமான சிறுதானிய தோசை வார்த்தால் கூட ஆரோக்கியம்தான். வீட்டிலிருக்கும் குழந்தைகளுடைய ஆரோக்கியத்தில் கொஞ்சம் அக்கறை காட்ட இது ஒரு சுலபமான வழி. உங்களுக்கு இந்த குறிப்புகள் பிடிச்சிருந்தால் ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -