ஞாயிற்றுக் கிழமைகளில் எண்ணெய் தேய்த்துக் குளித்தால் வீட்டில் செல்வம் குறையுமா?

ennai-kuliyal
- Advertisement -

எல்லோராலும் சனிக்கிழமைகளில் எண்ணெய் தேய்த்துக் குளிக்க முடிவதில்லை. ஒருசிலருக்குத்தான் அது சாத்தியப்படுகிறது. விடுமுறை நாள் என்பதால் பலர் ஞாயிற்றுக்கிழமைகளில்தான் எண்ணெய்க் குளியல் போடுகிறார்கள். அப்படிக் குளிக்கும்போதெல்லாம் பெரியவர்கள், ‘ஞாயிற்றுக் கிழமைகளில் எண்ணெய் தேய்த்துக் குளித்தால் செல்வமெல்லாம் போய்விடும்’ என்ற திட்டுவதைப் பார்க்கலாம்.

oil bath

சனி நீராடு’ என்பதே நம் முன்னோர்களின் வாக்கு. இதை அவர்கள் பொத்தாம்பொதுவாக கூற வாய்ப்பில்லை. ஏன் என்றால் நம் முன்னோர்களில் ஒவ்வொரு செயலிற்கு பின்பும் நிச்சயம் பல அறிவியல் ஒளிந்துள்ளது. அனால் அந்த அறிவியலை நாம் அறிய தான் சில நூறு ஆண்டுகள் ஆகிவிடுகிறது. இதனாலேயே, நாம் அறியாமல் சில விடயங்களை செய்துவிடக்கூடாது என்பதற்காக சிலதை செய்தால் நமக்கு தீங்கு நேரிடும் என்றார்கள் நம் முன்னோர்கள். அப்படி தான் ஞாயிற்றுக் கிழமைகளில் எண்ணெய் தேய்த்துக் குளித்தால் செல்வம் போய்விடும் என்பது. ஆனால் எண்ணெய் தேய்த்து குளிப்பது பற்றி நம் சாஸ்திரம் என்ன சொல்கிறது என்று பார்ப்போம் வாருங்கள்.

- Advertisement -

சூரியன் உதயமாகி 6 நாழிகைக்கு மேல் உள்ள நேரத்தை எண்ணெய் குளியலுக்கு உரிய நேரமாக எடுத்துக்கொள்ளலாமென நமது சாஸ்திர நூல்கள் கோடிட்டுக் காட்டுகின்றன. காலை 6 மணி சூரிய உதயமென்றால், காலை 8.24 மணிக்கு மேல் மாலை 3.36 மணிக்கு முன்னதாக எப்போது வேண்டுமானாலும் குளிக்கலாம். தீபாவளி அன்று சூரிய உதயத்துக்கு முன்பாக எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும். அதற்கு ‘மங்கள ஸ்நானம்’ என்றே பெயர்.

oil

எண்ணெய் தேய்த்துக் குளிப்பதால் நமது உடலும் உள்ளமும் தூய்மையாவதோடு நம்மைப் பிடித்த தோஷங்களும் விலகும் என்பதையும் நாம் உணர வேண்டும்.

- Advertisement -

பல சிறப்புக்கள் மிக்க எண்ணெய் குளியலை புதன்கிழமையிலும் சனிக்கிழமையிலும் மேற்கொள்வதுதான் நல்லது. சில காரணங்களுக்காக இது சாத்தியப்படவில்லை என்றால், விதிவிலக்காக வேறு நாட்களில் குளிக்கலாம். அதற்கு சில வழிமுறைகளை நமது சாஸ்திரங்கள் சொல்கின்றன.

oil

ஞாயிற்றுக்கிழமை குளிக்க வேண்டி வந்தால், செம்பருத்தி போன்ற ஏதேனும் ஒரு மலரை உடம்பில் தேய்த்தோ அல்லது தண்ணீரில் விட்டோ குளிக்கலாம். செவ்வாய்க்கிழமை என்றால் நீரில் சிறிதளவு மணல் சேர்த்து குளிக்கலாம். வியாழக்கிழமை அறுகம்புல், வெள்ளிக்கிழமை என்றால் சிறிதளவு பசுஞ்சாணம் சேர்த்துக் குளிக்கலாம். இப்படிக் குளித்தால் எந்த தோஷமுமில்லை. ஆனால், இதையே வழக்கமாக்கிக் கொள்ளக்கூடாது.

- Advertisement -