காலையில் எழுந்ததும் உள்ளங்கையை பார்ப்பதால் பலன் உண்டா?

perumal-3
- Advertisement -

எடுப்பது, கொடுப்பது, ஏற்பது, வணங்குவது, உண்பது, உடுப்பது, துலக்குவது, திலகமிடுவது ஆகிய அன்றாட அலுவல்களை நிறைவேற்ற கைகள் வேண்டும்.

hand

செயல்களுக்குரிய புலன்களில் கைகளுக்குத் தனி இடமுண்டு. இறையுருவத்தை வணங்க, புஷ்பத்தை அள்ளிச் சமர்ப்பணம் செய்ய கைகள் உதவும். கைகளைக் கடவுளுக்குச் சமானமாகச் சொல்கிறது வேதம் (அயம் மெஹஸ்தோ பகவான்).

- Advertisement -

கையின் நுனியில் அலைமகளும், நடுவில் கலைமகளும் அடிப்பக்கத்தில் கோவிந்தனும் இருப்பதாகப் புராணம் சொல்லும். ஹஸ்தரேகா சாஸ்திரம் கையை வைத்து உருவானது. அறிவு, செல்வம், ஆன்மிகம் ஆகிய மூன்றையும் பெற காலையில் எழுந்ததும் கைகளைப் பார்க்க வேண்டும். அப்போது,

‘கராக்ரே வஸதெ லஷ்மீ கரமத்யே ஸரஸ்வதி
கரமூலேது கோவிந்த: ப்ரபாதெ கரதர்சனம்’

- Advertisement -

என்ற செய்யுளைச் சொல்லலாம்.

இதையும் படிக்கலாமே:
பண வரவு குறையாமல் இருக்க உதவும் அற்புத மந்திரம்

- Advertisement -